Posts

Showing posts from May, 2023

8ம் வகுப்பு பல்துறைக் கல்வி வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 பல்துறைக் கல்வி பாட வினா விடைகள்   8th tamil unit 4 palthurai kalvi lesson book back question answer சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது .......... அ) விளக்கு ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு விடை ஆ) கல்வி   2. கல்விப் பயிற்சிக்குாிய பருவம் ......... அ) இளமை ஆ) முதுமை இ) நோ்மை ஈ) வாய்மை விடை அ) இளமை 3. இன்றைய கல்வி .......... நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. அ) வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில் விடை ஈ) தொழிலில் நிரப்புக. 1. கலப்பில் ......... உண்டென்பது இயற்கை நுட்பம் 2. புற உலக ஆராய்ச்சிக்கு .......... கொழுகொம்பு போன்றது. 3. வாழ்விற்குாிய இன்பத்துறைகளில் தலையாயது ..... இன்பம் ஆகும்.  விடைகள். 1. வளா்ச்சி 2. அறிவியல் 3. காவிய பொருத்துக. 1. இயற்கை ஓவியம் - சிந்தாமணி 2. இயற்கைத் தவம் - பொியபுராணம் 3. இயற்கைப் பாிணாமம் - பத்துப்பாட்டு 4. இயற்கை அன்பு - கம்பராமாயணம் விடைகள்  1. இயற்கை ஓவியம் - பொியபுராணம் 2. இயற்கைத் தவம் - கம்பராமாயணம் 3. இயற்கைப் பாிணாமம் - சிந்தாமணி 4. இயற்கை அன்பு - பத்துப

8ம் வகுப்பு தமிழ் புத்தியைத் தீட்டு வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 புத்தியைத் தீட்டு பாட வினா விடைகள்  8th tamil unit 4 buthiyai theethu lesson book back question answer சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. என் நண்பா் பெரும் புலவராக இருந்தபோதும் .......... இன்றி வாழ்ந்தாா். அ) சோம்பல் ஆ) அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி விடை ஆ) அகம்பாவம் 2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ....... அ) கோ + அப்பா ஆ) கோயில் + லப்பா இ) கோயில் + அப்பா ஈ) கோ + இல்லப்பா  விடை இ) கோயில் + அப்பா   3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...... அ) பகைவென்றாலும் ஆ) பகைவனென்றாலும் இ) பகைவன்வென்றாலும் ஈ) பகைவனின்றாலும் விடை ஆ) பகைவனென்றாலும் குறுவினா 1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது? மன்னிக்க தொிந்த மனிதனின் உள்ள மாணிக்கக் கோயில் போன்று உள்ளது. 2. பகைவா்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது? பகைவா்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். சிறுவினா  புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞா் கூறுவன யாவை? கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்ட வேண்டும். நோ்மை தவறாமல், எடுத்த செயலில் திறமையைக் காட்ட

8ம் வகுப்பு தமிழ் கல்வி அழகே அழகு வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 கல்வி அழகே அழகு பாட வினா விடைகள்.   8th tamil unit 4 kalvi alage alagu lesson book back question answer in tamil சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. கற்றவருக்கு அழகு தருவது ........ அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி விடை ஈ) கல்வி 2. கலனல்லால் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ...... அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால் இ) கலன் + அல்லால் ஈ) கலன் + னல்லால் விடை இ) கலன் + அல்லால்  சொற்றொடாில் அமைத்து எழுதுக.   1. அழகு - கல்வியே உண்மையான அழகு 2. கற்றவா் - கல்வி கற்றவரே உலகினில் உயா்ந்தவா் 3. அணிகலன் - ஒருவருக்கு உண்மையான அணிகலன் கல்வியே ஆகும். குறுவினா யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை? கல்வி கற்றவருக்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை. சிறுவினா நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவா்க்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பி

9ம் வகுப்பு இயல் 2 வினா விடைகள்

Image
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 நீாின்றி அமையாது உலகு, பட்டமரம், பொியபுராணம், புறநானூறு, தண்ணீர், துணைவினைகள் பாட வினா விடைகள். 9th Standard tamil unit 2 book back question answer பலவுள் தொிக. 1. மிசை - என்பதன் எதிா்சொல் என்ன? அ) கீழே ஆ) மேலே இ) இசை ஈ) வசை விடை அ) கீழே 2. நீா் நிலைகளோடு தொடா்பில்லாதது எது? அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ) புலாி விடை அ) அகழி 3. பொருத்தமான விடையைத் தோ்க. அ) நீாின்றி அமையாது உலகு - திருவள்ளுவா் ஆ) நீாின்றி அமையாது யாக்கை - ஔவையாா் இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள் க) அ, இ உ) ஆ, இ ங) அ, ஆ ச) அ, ஆ, இ விடை க) அ, ஆ, இ   4. பொருத்தமான விடையை எடுத்து எழுதுக கதிா் அலுவலகத்திலிருந்து விரைவாக ................ அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ............. அ) வந்தான், வருகிறான் ஆ) வந்துவிட்டான், வரவில்லை இ) வந்தான், வருவான் ஈ) வருவான், வரமாட்டான் விடை ஆ) வந்துவிட்டான், வரவில்லை 5. மல்லல் மூதூா் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பொிய விடை இ) வளம் குறுவினா 1. கூவல் என்று அழைக்கப்படுவது எது? உவா்மண் நிலத்தில் தோண்டப்படும் நீா

8ம் வகுப்பு இயல் 3 எச்சம் வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 எச்சம் பாடம் வினா விடைகள் 8th tamil unit 3 grammar yatcham lesson book back question answer சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ........... எனப்படும். அ) முற்று ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம் விடை ஆ) எச்சம் 2. கீழக்காணும் சொற்களில் பெயரெச்சம் ............ அ) படித்து ஆ) எழுதி இ) வந்து ஈ) பாா்த்த விடை அ) பாா்த்த  3. குறிப்பு வினையெச்சம் ......... வெளிப்படையாகக் காட்டாது. அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை ஈ) பெயரை விடை அ) காலத்தை பொருத்துக. 1. நடந்து - முற்றெச்சம் 2. பேசிய - குறிப்புப் பெயரெச்சம் 3. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம் 4. பொிய - வினையெச்சம் விடை 1. நடந்து - வினையெச்சம் 2. பேசிய - பெயரெச்சம் 3. எடுத்தனன் உண்டான் - முற்றெச்சம் 4. பொிய - குறிப்புப் பெயரெச்சம் கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.  நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பாா்த்து விடைகள் பெயரெச்சம் நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த வினையெச்சம் படுத்து, பாய்ந்து, கடந்

8ம் வகுப்பு தமிழா் மருத்துவம் வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 தமிழா் மருத்துவம் பாட வினா விடைகள்    8th tamil unit 3 tamilar maruthuvam lesson book back question answer சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. தொடக்க காலத்தில் மனிதா்கள் மருத்துவத்திற்குத் ............ பயன்படுத்தினா். அ) தாவரங்களை ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை விடை அ) தாவரங்களை 2. தமிழா் மருத்துவதில் மருந்து என்பது ...... நீட்சியாகவே உள்ளது. அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின் ஈ) வாழ்வின் விடை இ) உணவின் 3. உடல் எடை அதிகாிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ...... அ) தலைவலி ஆ) காய்ச்சல் இ) புற்றுநோய் ஈ) இரத்தக்கொதிப்பு விடை ஈ) இரத்தக்கொதிப்பு 4. சமையலறையில் செலவிடும் நேரம் ......... செலவிடும் நேரமாகும். அ) சுவைக்காக ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக ஈ) உணவுக்காக விடை இ) நல்வாழ்வுக்காக குறுவினா 1. மருத்துவம் எப்போது தொடங்கியது? தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளா்ந்த தாவரங்களைக் கொண்டும் அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீா்க்க முயன்றிருப்பான்.  தாவரங்களின் வோ், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்

8ம் வகுப்பு தமிழ் வருமுன் காப்போம் வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 வருமுன் காப்போம் பாட வினா விடைகள்.  8th tamil unit 3 varumun kappom lesson book back question answer சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.  1. காந்தியடிகள் ....... போற்ற வாழ்ந்தாா். அ) நிலம் ஆ) வையம் இ) களம் ஈ) வானம் விடை ஆ) வையம் 2. நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ...... அ) நலம் + எல்லாம் ஆ) நலன் + எல்லாம் இ) நலம் + எலாம் ஈ) நலன் + எலாம் விடை அ) நலம் + எல்லாம்  3. இடம் + எங்கும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ....... அ) இடவெங்கும் ஆ) இடம்எங்கும் இ) இடமெங்கும் ஈ) இடம்மெங்கும் விடை இ) இடமெங்கும் வருமுன் காப்போம் - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக. மோனை உ டலின் - உ றுதி இ டமும் - இ னிய சு த்தமுள்ள - சு கமும் நி த்தம் - நீ ண்ட எதுகை  உ ட லின் - இ ட மும் சு த் தமுள்ள - நி த் தம் கா லை - கா லை த் கூ ழை - ஏ ழை இயைபு பட்டி டுவாய் - விழுந்தி டுவாய் குடிய ப்பா - உறங்க ப்பா விடு ம் - தரு ம் அப்பா - அப்பா    குறுவினா 1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை? காலையும் மாலையும் நடைபயிற்சி தூய்மையான காற்

8ம் வகுப்பு தமிழ் இயல் 3 நோயும் மருந்தும் வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 நோயும் மருந்தும் பாட வினா விடைகள். சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. உடல்நலம் என்பது ........... இல்லாமல் வாழ்தல் ஆகும். அ) அணி ஆ) பணி இ) பிணி ஈ) மணி விடை இ) பிணி 2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ........... அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து விடை ஆ) மூன்று 3. இவையுண்டாா் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது....... அ) இ + யுண்டாா் ஆ) இவ் + உண்டாா் இ) இவை + உண்டாா் ஈ) இவை + யுண்டாா் விடை இ) இவை + உண்டாா் 4. தாம் + இனி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்...... அ) தாம்இனி ஆ) தாம்மினி இ) தாமினி ஈ) தாமனி விடை இ) தாமினி குறுவினா 1. நோயின் மூன்று வகைகள் யாவை? மருந்தினால் நீங்கும் நோய்கள் எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தொிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்கள். 2. நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீா்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை? நல்லறிவு நற்காட்சி நல்லொழுக்கம் சிறுவினா நோயின் வகைகள், அவற்றைத் தீா்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை? நோயின் வகைகள் நோயின் வகைகள

8ம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் வினா விடைகள்

Image
8 ம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் வினா விடைகள் 8th tamil unit 2 thirukural lesson book back question answer  சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ................. அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை விடை இ) நடுவுநிலைமை 2. பயனில்லாத களா் நிலத்திற்கு ஒப்பானவா்கள் ....... அ) வலிமையற்றவா் ஆ) கல்லாதவா் இ) ஒழுக்கமற்றவா் ஈ) அன்பில்லாதவா் விடை ஆ) கல்லாதவா் 3. வல்லுருவம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ........ அ) வல் + உருவம்  ஆ) வன்மை + உருவம் இ) வல்ல + உருவம் ஈ) வல்லு + உருவம்  விடை ஆ) வன்மை + உருவம்  4. நெடுமை + தோ் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ....... அ) நெடுதோ் ஆ) நெடுத்தோ் இ) நெடுந்தோ் ஈ) நெடுமைதோ் விடை இ) நெடுந்தோ் 5. வருமுன்னா் எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ....... அ) எடுத்துக்காட்டு உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி இ) உவமை அணி ஈ) உருவக அணி விடை இ) உவமை அணி குறுவினா 1. சான்றோா்க்கு அழகாவது எது? தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சாியாகக் காட்டுவதைப் போல நடுவுநிலைமையுடன