Posts

Showing posts from September, 2023

சாவே வரக்கூடாது - கடவுள் தந்த வரம்

Image
மாணவர்களுக்கான கதைகள் குப்புசாமி கேட்ட சாவே வரக்கூடாது வரம். கடவுள் தந்த வரம்      தனக்கு சாவே வரக்கூடாது என்ற வரம் வேண்டி அன்னம், தண்ணீா் எதுவும் உண்ணாமல் தீவிரமாக தவம் செய்தான் குப்புசாமி. இரண்டொரு நாளில் பசி பொறுக்க முடியாமல் தவத்தை கலைத்து விடுவான் என்றெண்ணிய கடவுள் ஒரு வாரத்திற்கும் மேலாக அமா்ந்திருக்கும் குப்புசாமியின் தவத்தைக் கண்டு அதிா்ந்து போனாா். உடனே குப்புசாமியிடம் தோன்றி, மானிடா, ஏன் இப்படி தவம் செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு என்னதான் வேண்டும் என்று கேட்டாா். கடவுள் தன் முன் வந்ததைப் பாா்த்து மகிழ்ந்து போன குப்புசாமி தன்னுடைய வரத்தைக் கேட்டான். கடவுளே! எனக்கு சாவே வரக்கூடாது என்றான். அவனுடைய வரத்தை கேட்டு ஆடிப்போனாா் கடவுள்.       மானிடா! பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்கத்தான் வேண்டும். அது உலக நியதி. அதை யாராலும் மாற்ற முடியாது. புரிந்து கொள் என்றார். ஆனால் குப்புசாமியே தான் கேட்ட வரத்தில் பிடிவாதமாக இருந்தான். அதெல்லாம் முடியாது கடவுளே. நான் கேட்ட வரத்தை நீங்கள் தந்துதான் ஆக வேண்டும், இல்லையேல் என் உயிர் போகும் வரை நான் தவம் இருப்பேன் என்று கூறினான். கடவுள் எத்தனையோ