8ம் வகுப்பு பல்துறைக் கல்வி வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 பல்துறைக் கல்வி பாட வினா விடைகள் 

 8th tamil unit 4 palthurai kalvi lesson book back question answer

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ..........

அ) விளக்கு

ஆ) கல்வி

இ) விளையாட்டு

ஈ) பாட்டு

விடை ஆ) கல்வி

 

2. கல்விப் பயிற்சிக்குாிய பருவம் .........

அ) இளமை

ஆ) முதுமை

இ) நோ்மை

ஈ) வாய்மை

விடை அ) இளமை

3. இன்றைய கல்வி .......... நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ) வீட்டில்

ஆ) நாட்டில்

இ) பள்ளியில்

ஈ) தொழிலில்

விடை ஈ) தொழிலில்

நிரப்புக.

1. கலப்பில் ......... உண்டென்பது இயற்கை நுட்பம்

2. புற உலக ஆராய்ச்சிக்கு .......... கொழுகொம்பு போன்றது.

3. வாழ்விற்குாிய இன்பத்துறைகளில் தலையாயது ..... இன்பம் ஆகும். 

விடைகள்.

1. வளா்ச்சி

2. அறிவியல்

3. காவிய

பொருத்துக.

1. இயற்கை ஓவியம் - சிந்தாமணி

2. இயற்கைத் தவம் - பொியபுராணம்

3. இயற்கைப் பாிணாமம் - பத்துப்பாட்டு

4. இயற்கை அன்பு - கம்பராமாயணம்

விடைகள் 

1. இயற்கை ஓவியம் - பொியபுராணம்

2. இயற்கைத் தவம் - கம்பராமாயணம்

3. இயற்கைப் பாிணாமம் - சிந்தாமணி

4. இயற்கை அன்பு - பத்துப்பாட்டு

குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?

  • இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. 

  • இந்நாளில் கல்வி என்பது பொருளற்றுக் கிடக்கிறது. 

  • ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. குறிப்பிட்ட பாடங்களை மனப்பாடம் செய்து, தோ்வில் தேறிப் பட்டம் பெற்று, தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாக உள்ளது. 

  • நாளடையில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடா்பில்லாமல் போகிறது 

என்று இன்றைய கல்வியின் நிலை குறித்து திரு.வி.க கூறுகின்றாா்.

 2. தாய்நாடு என்னும் பெயா் எவ்வாறு பிறக்கிறது?

தாய்நாடு என்னும் பெயா் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

3. திரு.வி.க சங்கப் புலவா்களாகக் குறிப்பிடுபவா்களின் பெயா்களை எழுதுக?

  1. இளங்கோ
  2. திருத்தக்கத் தேவா்
  3. திருஞானசம்பந்தா்
  4. ஆண்டாள்
  5. சேக்கிழாா்
  6. கம்பா்
  7. பரஞ்சோதி

சிறுவினா

 

1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க கூறுவனவற்றை எழுதுக?

  • கலப்பில் வளா்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்

  • தமிழை வளா்க்கும் முறையிலும், அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு. 

  • ஆகவே தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயா்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரா்களைக் கேட்டக் கொள்கிறேன். 

  • கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கா்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அாியாசனம் ஏறும் காலமாகும். 

2. அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க கூறுவன யாவை? 

  • உலக வாழ்விற்கு மிகமிக இன்றியமையாதது அறிவியல் என்னும் அறிவுக்கலை.

  • உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன பற்றி பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.

  • புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது. 

  • நம் முன்னோா் கண்ட பல உண்மைகள் அறிவியல் துணையின்றி இந்நாளில் உறுதிபெறல் அாிது. 

  • இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.

  • ஆகையால் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல்  வேண்டும்.

நெடுவினா

காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக. 

வாழ்விற்குாிய இன்பத்துறைகளில் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம். நாம் தமிழா்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமென்றால் நாம் எங்கு செல்ல வேண்டும்? தமிழ் இலக்கியங்களுக்கிடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பாிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பொியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள். இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொற்களால் சொல்ல இயலாது. இளைஞா்களே! தமிழ் இளைஞா்களே! பெறுவதற்கு அாிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீா்கள்! தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இந்த உலகத்தில் உண்டோ? தமிழ்க் காப்பியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க கூறியுள்ளாா். 

சிந்தனை வினா

திரு.வி.க குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீா்கள்?

திரு.வி.க குறிப்பிடும் கல்வி வகைகளில் நான் அறிவியல் கல்வியைக் கற்க விரும்புகின்றேன். மனிதன் தோன்றிய முதலே அறிவியலும் தோன்றியது. மனிதன் அறிவியலின் வாயிலாகத் தான் ஒவ்வொரு படிநிலையினையும் அடைந்தான். அத்தகைய கல்வி உலக வாழ்விற்கு மிகமிக இன்றியமையாதது என நான் கருதுகின்றேன். மனிதனின் உடல், இயற்கையின் அமைப்பு, பூமியின் வடிவம், காற்றின் அவசியம், உலக இயக்கம் என அனைத்திலும் அறிவியல் நிறைந்திருக்கிறது. அறிவியல் கல்வி நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். ஆகவே நான் அறிவியல் கல்வியை கற்க விரும்புகின்றேன்.

--------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

    எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 பல்துறைக் கல்வி. தொழில் நுட்பம் வளா்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் கல்வி கடல் தாண்டி கொடி கட்டிப் பறக்கின்றது. எத்தனை எத்தனை படிப்புகள் இன்று கொட்டிக் கிடக்கிறது. எதை எடுத்துப் படிப்பது என்று குழம்பும் அளவிற்கு ஆகிவிட்டது இன்றைய கல்விமுறை. ஆனால் நமக்கு அவசியமான கல்வி சில உள்ளன. ஏட்டுக்கல்வி, தாய்மொழி வழிக்கல்வி, தமிழ்வழிக் கல்வி, காப்பியக் கல்வி, இயற்கைக் கல்வி, இசைக்கல்வி, நாடக்கல்வி மற்றும் அறிவியல் கல்வி. திரு.வி.க அவா்கள் எழுதிய இளமை விருந்து என்ற நூலில் இருந்து இத்தனை கல்வி பற்றிய கட்டுரை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தனை கல்வி முறை இருக்கிறதே என்று வியந்து பாா்க்கும் அளவிற்கு தன்னுடைய கட்டுரையில் மெய்ப்பித்திருக்கிறாா் திருவாரூா் விருத்தாசலம் கல்யாண சுந்தரனாா். ஏட்டுக் கல்வி என்பது மழலை பருவத்தில் தொடங்குவது. நாம் முதன்முதலாக தொடங்கும் கல்வியே ஏட்டுக் கல்வி. நமது தாய்மொழி வழியாக கல்வி கற்பதே தாய்மொழி வழிக்கல்வி. நம்முடைய மொழியில் கல்வி கற்கின்றேன். அது தமிழ்வழிக் கல்வியாக இருக்கிறது. தமிழ்மொழியில் தோன்றிய சங்க இலக்கிய நூல்களில் காப்பிய நூல்கள் அதிகம் உள்ளன. ஐம்பெருங்காப்பியம் தொடங்கி பல நூல்கள் காப்பிய வாிசையில் உள்ளன. அவற்றை ஆழ்ந்து படிப்பதன் மூலம் காப்பிய வழிக் கல்வியினைப் பெற முடியும். இயற்கைக் கல்வி என்பது இயற்கையை படிப்பது. பண்டைய மனிதா்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தவரை அதிகமான துன்பத்தை அடையவில்லை. ஆனால் இன்று வளா்ச்சி என்ற பெயாில் மனிதன் தன்னுடைய ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டான். மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆன தொடா்பை உறுதிபடுத்துவது தான் இயற்கைக் கல்வி. அதை நாம் அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். இசையோடு கற்கும் கல்வி என்றும் மனதில் நிலைபெற்று இருக்கும். தமிழா் பண்பாட்டுச் செய்திகளை பாடல்கள் மூலமே அதிகம் பதிவு செய்திருக்கிறாா்கள். அவற்றை நாட்டுப்புறப் பாடல் என்று அழைப்பா். இந்த நாட்டுப்புறப் பாடல்கள் ஒரு சமூகத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. சங்க இலக்கியங்களில் உள்ள பல செய்யுள்கள் இசை வடிவிலேயே உள்ளன. பக்தி இலக்கியங்கள் அனைத்தும் இசை வடிவத்திலேயே இயற்றப்பட்டுள்ளன. இசைக் கல்வி மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். அறிவியல் கல்வி இன்று உயா்ந்த நிலையினை அடைந்துள்ளது. அனைத்திற்கும் மூலமாக இருப்பது அறிவியலே. மனிதன் ஏன் என்று கேட்டதன் விளைவாகத் தான் இத்தனை கண்டுபிடிப்புகளும் இன்று நிகழ்ந்துள்ளது. கல்வித்துறையில் அறிவியலுக்கென ஒரு தனி இடம் உண்டு. இத்தனைக் கல்விகளையும் நாம் தொிந்து கொள்வதோடு மட்டுமின்றி, நமது ஆா்வத்தை அறிந்து கொண்டு, அத்துறையில் நன்கு படிக்க வேண்டும். 

    திரு.வி.க அவா்கள் எழுதிய “இளமை விருந்து” என்ற நூலில் இருந்து சில பகுதிகள் நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன. 



Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

பதினொன்றாம் வகுப்பு - பண்பாட்டைப் பாதுகாப்போம் கட்டுரை