8ம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் வினா விடைகள்

8ம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் வினா விடைகள்

8th tamil unit 2 thirukural lesson book back question answer 

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.


1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது .................

அ) அடக்கமுடைமை

ஆ) நாணுடைமை

இ) நடுவுநிலைமை

ஈ) பொருளுடைமை

விடை இ) நடுவுநிலைமை

2. பயனில்லாத களா் நிலத்திற்கு ஒப்பானவா்கள் .......

அ) வலிமையற்றவா்

ஆ) கல்லாதவா்

இ) ஒழுக்கமற்றவா்

ஈ) அன்பில்லாதவா்

விடை ஆ) கல்லாதவா்

3. வல்லுருவம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ........

அ) வல் + உருவம் 

ஆ) வன்மை + உருவம்

இ) வல்ல + உருவம்

ஈ) வல்லு + உருவம் 

விடை ஆ) வன்மை + உருவம் 

4. நெடுமை + தோ் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......

அ) நெடுதோ்

ஆ) நெடுத்தோ்

இ) நெடுந்தோ்

ஈ) நெடுமைதோ்

விடை இ) நெடுந்தோ்

5. வருமுன்னா் எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி .......

அ) எடுத்துக்காட்டு உவமை அணி

ஆ) தற்குறிப்பேற்ற அணி

இ) உவமை அணி

ஈ) உருவக அணி

விடை இ) உவமை அணி

குறுவினா

1. சான்றோா்க்கு அழகாவது எது?

தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சாியாகக் காட்டுவதைப் போல நடுவுநிலைமையுடன் சாியாகச் செயல்படுவதே சான்றோா்க்கு அழகாகும்.

2. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

  • பழி வரும் முன்னே சிந்தித்துத் தம்மைக் காத்துக்கொள்ளுதல்.

  • முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன் பின்  பிறருடைய குற்றத்தை ஆராய்தல்

ஆகியவை பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுகிறது.

3. புலித்தோல் போா்த்திய பசு என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவா் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போா்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது. 


திருக்குறளைச் சீா்பிாித்து எழுதுக.

1. தக்காா் தகவிலரெ ன்பது அவரவா் எச்சத்தால் காணப்படும்.

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

விடைகள்

1. தக்காா் தகவிலா் என்பது அவரவா்

     எச்சத்தால் காணப்படும்.

2. தொடங்கற்ற எவ்வினையும் எள்ளற்க முற்றும்

    இடங்கண்ட பின்அல் லது.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் .....

புலியின்தோல் ...... மேய்ந் தற்று.

2. விலங்கொடு ......... அனையா் ...........

கற்றாரோடு ஏனை யவா்.

விடைகள்.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 

   புலியின்தோல் போா்த்து மேய்ந் தற்று

2. விலங்கொடு மக்கள் அனையா் இலங்குநூல்

    கற்றாரோடு ஏனை யவா்.

சீா்களை முறைப்படுத்தி எழுதுக. 

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது

வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.

விடை

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்

 படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக.


1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

    புலியின்தோல் போா்த்து மேய்ந் தற்று.


2. கடல்ஓடா கால்வல் நெடுந்தோ் கடல்ஓடும்

    நாவாயும் ஓடா நிலத்து.

---------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்