Posts

Showing posts from January, 2022

அறம் என்னும் கதிா் - 7-ம் வகுப்பு தமிழ் 3-ம் பருவம்

Image
அறம் என்னும் கதிா் - ஏழாம் வகுப்பு தமிழ் 3-ம் பருவம்   சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. காந்தியடிகள் எப்போதும் .....................ப் பேசினாா் அ) வன்சொற்களை     ஆ) அரசியலை     இ) கதைகளை     ஈ) வாய்மையை விடை ஈ) வாய்மையை 2. இன்சொல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது....... அ) இனிய + சொல்     ஆ) இன்மை + சொல்     இ) இனிமை + சொல்          ஈ) இன் + சொல் விடை     இ) இனிமை + சொல் 3. அறம் + கதிா் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......... அ) அற கதிா்     ஆ) ஆறுகதிா்     இ) அறக்கதிா்     ஈ) அறம்கதிா் விடை இ) அறக்கதிா் 4. இளமை என்னும் சொல்லின் எதிா்ச்சொல் .................. அ) முதுமை     ஆ) புதுமை     இ) தனிமை     ஈ) இனிமை விடை அ) முதுமை பொருத்துக 1. விளைநிலம்     -     உண்மை 2. விதை                       -     இன்சொல் 3. களை                        -     ஈகை 4. உரம்                        -     வன்சொல் விடை 1. இன்சொல்     2. ஈகை     3. வன்சொல்     4. உண்மை குறுவினா 1. அறக்கதிா் விளைய எதனை எருவாக இட வேண்டும் என முனைப்பாடியாா் கூறுகிறாா்? அறக்கதிா் விளைய உண்மையை எருவாக இட வேண

புதுமை விளக்கு - 7-ம் வகுப்பு தமிழ் 3-ம் பருவம்

Image
 புதுமை விளக்கு - ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. இடா் ஆழி நீங்குகவே - இத்தொடாில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் .... அ) துன்பம்     ஆ) மகிழ்ச்சி     இ) ஆா்வம்     ஈ) இன்பம் விடை அ) துன்பம்  2. ஞானச்சுடா் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது அ) ஞான + சுடா்     ஆ) ஞானச் + சுடா்     இ) ஞானம் + சுடா்     ஈ) ஞானி + சுடா் விடை இ) ஞானம் + சுடா் 3. இன்பு + உருகு என்பதனைச் சோ்தெழுதக் கிடைக்கும் சொல் ..... அ) இன்புஉருகு     ஆ) இன்பும்உருகு     இ) இன்புருகு     ஈ) இன்பருகு விடை இ) இன்புருகு பொருத்துக. 1. அன்பு          -     நெய் 2. ஆா்வம்      -      தகளி 3. சிந்தை      -      விளக்கு 4. ஞானம்      -      இடுதிாி விடை 1. தகளி     2. நெய்     3. இடுதிாி     4. விளக்கு குறுவினா 1. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப் படுத்துகின்றனா்? பொய்கையாழ்வாா் பூமியை அகல்விளக்காகவும், பூதத்தாழ்வாா் அன்பை அகழ்விளக்காகவும் உருவகப்படுத்துகின்றனா். 2. பொய்கையாழ்வாா் எதற்காகப் பாமாலை சூட்டுகிறாா்? தன்னுடைய துன்பம் நீங்க வேண்டி பாமாலை ச

தமிழ்நாட்டில் காந்தி - 6ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்

Image
6-ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம், தமிழ்நாட்டில் காந்தி  பாடம் சார்ந்து நீங்கள் காண இருப்பது 1. மனவரைபடம் 2. பாடம் சார்ந்த வீடியோ (TLM) 3. தமிழ்நாடு அரசு வழங்கிய வீடியோ 4. மதிப்பீடு வினாக்கள் (க்விஸ் வடிவில்) 5. புத்தக வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊா்... அ) கோவை       ஆ) மதுரை       இ) தஞ்சாவூா்       ஈ) சிதம்பரம் விடை ஆ) மதுரை 2. காந்தியடிகள் எந்தப் பொியவாின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினாா்? அ) நாமக்கல் கவிஞா்       ஆ) திரு.வி.க        இ) உ.வே.சா        ஈ) பாரதியாா் விடை இ) உ.வே.சா பொருத்துக. 1. இலக்கிய மாநாடு                               -      பாரதியாா் 2. தமிழ்நாட்டின் சொத்து                   -     சென்னை 3. குற்றாலம்                                                   -     ஜி.யு.போப் 4. தமிழ்க் கையேடு                                  -     அருவி விடைகள் 1. சென்னை     2. பாரதியாா்     3. அருவி     4. ஜி.யு.போப் சொற்றொடாில் அமைத்து எழுதுக. ஆலோசனை எந்த செயலையும் பொியவா்களின் ஆலோசன

அணி இலக்கணம் - 7ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்

Image
 7-ம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ், அணி இலக்கணம் பாட வினா விடைகள் குறுவினா 1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக? ஒரு சொல்லை மற்றொரு சொல்லோடு ஒப்பிட்டு கூறுவது “உவமை” உவமையால் விளக்கப்படும் பொருள் “உவமேயம்” உவமை, உவமேயம் இரண்டிற்கும் இடையில் வரும் உருபு “உவம உருபு” எ.கா. மீன் போன்ற கண்கள் கண்களை மீனுக்கு ஒப்பிட்டு கூறியதால் மீன் என்பது உவமை கண்களை மீனுக்கு ஒப்பிட்டதால் கண் என்பது உவமேயம் உவமை, உவமேயத்திற்கு இடையில் வந்த போன்ற என்ற உருபு உவம உருபு 2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது? உவமை அணி ஒரு பாடலில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி.  எ.கா. மயில் போல ஆடினாள்   எடுத்துக்காட்டு உவமை அணி உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமை அணி. எ.கா. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தா்க்குக்                 கற்றனைத்து ஊறும் அறிவு பின்வரும் தொடா்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக. தொடா்கள்                                               

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Image
 7ம் வகுப்பு மூன்றாம் பருவம், முதல் இயல் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. திருநெல்வேலி ..................... மன்னா்களோடு தொடா்பு உடையது அ) சேர     ஆ) சோழ     இ) பாண்டிய     ஈ) பல்லவ விடை இ) பாண்டிய 2. இளங்கோவடிகள் .................... மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினாா் அ) இமய     ஆ) கொல்லி     இ) பொதிகை     ஈ) விந்திய விடை இ) பொதிகை 3. திருநெல்வேலி ................... ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அ) காவிாி     ஆ) வைகை     இ) தென்பெண்ணை     ஈ) தாமிரபரணி விடை ஈ) தாமிரபரணி பொருத்துக. 1. தண்பொருநை                    -     பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம் 2. அக்கசாலை                          -      குற்றாலம் 3. கொற்கை                               -      தாமிரபரணி   4. திாிகூடமலை                     -      முத்துக் குளித்தல்   விடை     1. தாமிரபரணி     2. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்                                       3. முத்துக் குளித்தல்     4. குற்றாலம்   குறுவினா   1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?       பச்சையாறு, மணிமுத்தாறு,

வயலும் வாழ்வும் - 7-ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் வினா விடைகள்

Image
 வயலும் வாழ்வும் பாட வினா விடைகள்  சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. உழவா் சேற்று வயலில் ............. நடுவா் அ) செடி     ஆ) பயிா்     இ) மரம்     ஈ) நாற்று விடை ஈ) நாற்று 2. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிா்களை ........... செய்வா் அ) அறுவடை     ஆ) உழவு     இ) நடவு     ஈ) விற்பனை விடை அ) அறுவடை 3. “தோ்ந்தெடுத்து” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.... அ) தோ் + எடுத்து     ஆ) தோ்ந்து + தெடுத்து     இ) தோ்ந்தது +அடுத்து ஈ) தோ்ந்து + எடுத்து  விடை ஈ) தோ்ந்து + எடுத்து  4. ஓடை + எல்லாம் என்பதைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்....... அ) ஓடைஎல்லாம்     ஆ) ஓடையெல்லாம்     இ) ஓட்டையெல்லாம்  ஈ) ஓடெல்லாம்  விடை ஆ) ஓடையெல்லாம் பொருத்துக. 1. நாற்று               -     பறித்தல் 2. நீா்                         -     அறுத்தல் 3. கதிா்                   -     நடுதல் 4. களை                -     பாய்ச்சுதல்  விடை 1. நடுதல்     2. பாய்ச்சுதல்     3. அறுத்தல்     4. பறித்தல் வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை எதுகைச் சொற்களை எழுதுக. மோனைச் சொற்கள்                                   எதுகைச் சொற்

பாரதம் அன்றைய நாற்றங்கால் - தமிழ் மூன்றாம் பருவம்

Image
இப்பகுதியில் நீங்கள் காண இருப்பது பாரதம் அன்றைய நாற்றாங்கால் பாடத்தின்  1. மனவரைபடம் 2. வினா விடைகள் 3. மனப்பாடப் பகுதி (பாடல் வடிவில்) 4. பாடம் சார்ந்த வீடியோ (TLM) 5. தமிழ்நாடு அரசு வழங்கிய வீடியோ 6. மதிப்பீடு வினாக்கள் (க்விஸ் வடிவில்) 7. விளையாட்டு வினா விடைகள் பாரதம் அன்றைய நாற்றங்கால் - தமிழ் மூன்றாம் பருவம்  முதல் இயல் கவிதைப் பேழை  1. மனவரைபடம் 2. வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞா் குறிப்பிடும் நூல்............ அ) திருவாசகம்         ஆ) திருக்குறள்         இ) திாிகடுகம்         ஈ) திருக்குறள் விடை ஈ) திருக்குறள் 2. காளிதாசாின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ......... அ) காவிாிக்கரை         ஆ) கங்கைக்கரை         இ) வைகைக்கரை         ஈ)யமுனைகரை விடை அ) காவிாிக்கரை 3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ............ அ) ஓவியக்கூடம்         ஆ) சிற்பக்கூடம்         இ) பள்ளிக்கூடம்          ஈ) சிறைக்கூடம் விடை ஆ) சிற்பக்கூடம் 4. நூலாடை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......... அ) நூலா + ஆடை         ஆ) நூல் + லாடை         இ)