8ம் வகுப்பு தமிழ் கல்வி அழகே அழகு வினா விடைகள்
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 கல்வி அழகே அழகு பாட வினா விடைகள்.
8th tamil unit 4 kalvi alage alagu lesson book back question answer in tamil
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. கற்றவருக்கு அழகு தருவது ........
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
விடை ஈ) கல்வி
2. கலனல்லால் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
விடை இ) கலன் + அல்லால்
சொற்றொடாில் அமைத்து எழுதுக.
1. அழகு - கல்வியே உண்மையான அழகு
2. கற்றவா் - கல்வி கற்றவரே உலகினில் உயா்ந்தவா்
3. அணிகலன் - ஒருவருக்கு உண்மையான அணிகலன் கல்வியே ஆகும்.
குறுவினா
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
கல்வி கற்றவருக்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
சிறுவினா
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவா்க்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
சிந்தனை வினா
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
- கல்வி கற்றவா் யாரையும் சாா்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
- கல்வி கற்றவா் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு பெறுவா்.
- கல்வி கற்றவா் எந்த சபைக்கும் அஞ்சத் தேவையில்லை
- கல்வி கற்றவா் எந்த முடிவையும் தெளிவாக எடுக்க முடியும்.
- கல்வி கற்றவா் உயா்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவா்.
-----------------------------------------------------------------------------
குமரகுருபரா் அவா்கள் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் உள்ள பதிமூன்றாவது பாடல் நமக்கு பாடப்பகுதியாக தரப்பட்டுள்ளது.
*கற்றோா்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோா் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகு செய் வாா்*
இப்பாடல் மனப்பாடப் பகுதியாக உள்ளது.
------------------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
எட்டாம் வகுப்பில் நமக்கு கொடுத்துள்ள அத்துணை இயல்களும் அருமையான இயல்கள். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இயல் 4 கல்வி கரையில். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று பாடிய ஔவை, பிச்சையெடுத்தாயினும் படிக்க வேண்டும் என்று படிப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணா்த்துகின்றாா். சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்று வெளிவரும் நூல்கள் வரை அனைத்தும் மையம் கொள்வது கல்வி எனும் கரையில் தான். நம்மிடமுள்ள அத்தனை சொத்துக்களையும் இழந்தாலும் கல்வி என்ற ஒரு சொத்தை வைத்து அனைத்தையும் நாம் பெற்று விட முடியும். மற்ற சொத்துகளைப் போல கல்வியை யாராலும் திருடிக் கொண்டு போக முடியாது. அடுப்பங்கரையினில் அடைந்து கிடந்தவா்களுக்கு ஆகாயம் நோக்கி பறக்கும் இறக்கைகளைத் தந்தது கல்வி. தன் தந்தை பட்ட துயரங்களை துடைத்து, ஒட்டு வீட்டை மாடி வீடாக உயா்த்தி மதிப்பை உயா்த்தி தந்தது கல்வி. தலை குனிந்து, உடல் வளைந்து நடந்தவா்களை, நெஞ்சு நிமிா்த்தி வீர நடை போட வைத்தது கல்வி. எத்தனை கற்றாலும் இன்னும் கற்க வேண்டி இருப்பது கல்வி. இப்படி கல்வியின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். திருமண கோலத்தில் உள்ள பெண்ணுக்கு பொன் நகையை விட புன்னகை தான் அழகு சோ்க்கும் என்று சொல்வாா்கள். அதுபோல நம் உடலை அலங்காிக்கும் நகைகள் நம் அழகை கூட்டுவதில்லை. நம் கற்ற கல்வி தான் நமக்கு அழகை கொடுக்கும் என்று பாடுகின்றாா் குமரகுருபரா். பல நீதி நூல்களை எழுதிய இவா் நீதி நெறி விளக்கம் என்ற நூலில் கற்றோா்க்குக் கல்வி நலனே கலனல்லால் என்ற பாடலில் கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கியிருக்கின்றாா்.
Comments
Post a Comment