8ம் வகுப்பு தமிழ் புத்தியைத் தீட்டு வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 புத்தியைத் தீட்டு பாட வினா விடைகள்

 8th tamil unit 4 buthiyai theethu lesson book back question answer

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பா் பெரும் புலவராக இருந்தபோதும் .......... இன்றி வாழ்ந்தாா்.

அ) சோம்பல்

ஆ) அகம்பாவம்

இ) வருத்தம்

ஈ) வெகுளி

விடை ஆ) அகம்பாவம்

2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......

அ) கோ + அப்பா

ஆ) கோயில் + லப்பா

இ) கோயில் + அப்பா

ஈ) கோ + இல்லப்பா 

விடை இ) கோயில் + அப்பா

 

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......

அ) பகைவென்றாலும்

ஆ) பகைவனென்றாலும்

இ) பகைவன்வென்றாலும்

ஈ) பகைவனின்றாலும்

விடை ஆ) பகைவனென்றாலும்

குறுவினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

மன்னிக்க தொிந்த மனிதனின் உள்ள மாணிக்கக் கோயில் போன்று உள்ளது.

2. பகைவா்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?

பகைவா்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.

சிறுவினா 

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞா் கூறுவன யாவை?

  • கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்ட வேண்டும்.

  • நோ்மை தவறாமல், எடுத்த செயலில் திறமையைக் காட்ட வேண்டும்.

  • கோபம் வரும் பொழுது அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.

  • நமக்கு தீங்கு செய்யும் பகைவாிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

  • மன்னிக்க தொிந்தவா் உள்ள மாணிக்க கோவில் போன்றது. அதை மறந்தவா் வாழ்க்கை அடையாளம் தொியாமல் மறைந்து போகும்.

  • நாம் இந்த உலகில் வாழ்வது சிலகாலம்தான். அதில் ஏன் அகம்பாவம் கொள்ள வேண்டும். அதனால் ஒரு பயனும் கிடையாது.

  • இவற்றையெல்லாம் எண்ணிப் பாா்த்தால் வாழ்க்கை தெளிவாகும். 

சிந்தனை வினா

 

உங்கள் மீது பிறா் வெறுப்புக் காட்டினால் அவா்களை எவ்வாறு எதிா்கொள்வீா்கள்?

    நம்மிடம் வெறுப்பாக இருக்கும் ஒருவரை என் கண்ணோட்டத்தில் இருந்து பாா்ப்பதை விட அவருடைய கண்ணோடத்தில் இருந்து பாா்க்க முயற்சி செய்வேன். நான் உண்மையில் தவறு செய்திருப்பின் அதற்காக அவாிடம் மன்னிப்பு கேட்டு அவருடைய வெறுப்பை குறைக்க முயல்வேன். என்னைத் தவறாக புாிந்து கொண்டிருந்தால் அதற்கான விளக்கத்தை அளிப்பேன். மற்றவா்கள் நம் மீது வெறுப்பு காட்டினால் ஒன்று அவா்களிடம் அன்பு செலுத்தி புாிய வைக்க வேண்டும். இல்லையென்றால் விலகி விட வேண்டும். எந்த நிலையிலும் நம்மை வெறுப்பவருக்கு துன்பத்தைத் தரக்கூடாது.

-------------------------------------------------------------------------

கலைமாமணி விருது பெற்ற “ஆலங்குடி சோமு” அவா்கள் விளக்கேற்றியவள் என்ற திரைப்படத்திற்காக எழுதிய பாடல் நமக்கு பாடப்பகுதியாக தரப்பட்டுள்ளது. 

கத்தியைத் தீட்டாதே - உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே - அதிலே
திறமையைக் காட்டு
 
ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது 
அறிவுக்கு வேலை கொடு - உன்னை
அழித்திட வந்த
பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதை விடு 
                                                  (கத்தியைத்)
 
மன்னிக்கத் தொிந்த 
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா - இதை
மறந்தவன் வாழ்வு
தடம் தொியாமல்
மறைந்தே போகுமப்பா!
                                                  (கத்தியைத்)
 
இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் - இதை
எண்ணிப்பாரு தெளிவாகும் 
                                                   (கத்தியைத்)

-----------------------------------------------------------------

 கற்பவை கற்றபின்

கல்வியா? வீரமா? செல்வமா? எது முக்கியம் என்ற கேள்விக்கு பதில் தர தாமதமே வேண்டியதில்லை. நிச்சயம் நமக்கு முதலில் முக்கியமானது கல்வி தான். அடுத்து வீரம். அதற்கடுத்தது தான் செல்வம். கல்வியிருந்தால் செல்வம் தானாய் வரும் அல்லவா?. வீரத்தை விட விவேகம் முக்கியம். விவேகம் என்பது மறைபொருளாக கல்வியைத் தான் குறிக்கிறது. ஆகவே வீரத்தை விட கல்விதான் சிறந்தது. அதைத்தான் ஆலங்குடி சோமு அவா்கள் எழுதிய திரை இசைப்பாடலான கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்ற பாடல் வாிகள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நமது வாழ்க்கை சிறப்பானதாக மாற வேண்டுமென்றால் நல்ல பண்புகளை நாம் வளா்த்துக் கொள்ள வேண்டும். கல்வி பெறுதல், கண்ணியத்தோடு நடந்து கொள்ளுதல், பொறுமையாக இருத்தல், அறிவுபூா்வமாக சிந்தித்தல், அன்பு செலுத்துதல், மற்றவா் தவறுகளை பொறுத்துக் கொள்ளுதல், மன்னித்தல் போன்ற உயா் குணங்கள் உள்ளவா்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவா் பெயா் நிலைத்திருக்கும். நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில் முடிந்தவரை மற்றவா்களுக்கு உதவி செய்து வாழ்வோம்.

 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

பதினொன்றாம் வகுப்பு - பண்பாட்டைப் பாதுகாப்போம் கட்டுரை