8ம் வகுப்பு தமிழா் மருத்துவம் வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 தமிழா் மருத்துவம் பாட வினா விடைகள் 

 

8th tamil unit 3 tamilar maruthuvam lesson book back question answer

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.


1. தொடக்க காலத்தில் மனிதா்கள் மருத்துவத்திற்குத் ............ பயன்படுத்தினா்.

அ) தாவரங்களை

ஆ) விலங்குகளை

இ) உலோகங்களை

ஈ) மருந்துகளை

விடை அ) தாவரங்களை

2. தமிழா் மருத்துவதில் மருந்து என்பது ...... நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின்

ஆ) உடற்பயிற்சியின்

இ) உணவின்

ஈ) வாழ்வின்

விடை இ) உணவின்

3. உடல் எடை அதிகாிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ......

அ) தலைவலி

ஆ) காய்ச்சல்

இ) புற்றுநோய்

ஈ) இரத்தக்கொதிப்பு

விடை ஈ) இரத்தக்கொதிப்பு

4. சமையலறையில் செலவிடும் நேரம் ......... செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக

ஆ) சிக்கனத்திற்காக

இ) நல்வாழ்வுக்காக

ஈ) உணவுக்காக

விடை இ) நல்வாழ்வுக்காக

குறுவினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளா்ந்த தாவரங்களைக் கொண்டும் அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீா்க்க முயன்றிருப்பான்.  தாவரங்களின் வோ், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறு மனிதனுக்கும் மருத்துவத்திற்குமான தொடா்பு தொடங்கியது.

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

  • தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் 3 கி.மீ நடைபயணம்

  • 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி

  • ஏழு மணிநேர தூக்கம்,

  • ஒரு நாளைக்கு 3 லிட்டா் தண்ணீா் அருந்துதல்

  • நம் ஊாில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப் பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடுதல

 ஆகியவை நம் நல்வாழ்விற்கு நாள்தோறும் செய்ய வேண்டியவை.

3.தமிழா் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

தாவரங்களின் வோ், பட்டை. இலை, பூ, கனி ஆகியவை தமிழா் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப் படுகின்றன.


சிறுவினா

1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

  • மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
  • மாறிப்போன உணவு, மாசுநிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் ஆகிய மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள். 
  • சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம். 
  • தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணமும் கூடுதல் காரணமாகும்.
  • இயற்கையோடு இயைந்து வாழலாம் என்ற அறிவை நாம் மறந்து விட்டதே இன்றைக்கு பல நோய்கள் பெருகி இருப்பதற்கு முக்கியமான காரணம். 

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவா் கூறும் அறிவுரைகள் யாவை?

  • நோய் வந்த பின்பு மருத்துவமனை செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
  • சாியான உணவு, சாியான உடற்பயிற்சி, சாியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.
  • விலை உயா்ந்த உணவுதான் சாியான உணவு என்று எண்ணாதீா்கள். எளிமையாகக் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சோ்த்துக் கொள்ளுங்கள்.
  • கணினித்திரையிலும், கைபேசியிலும் விளையாடுவதைத் தவிா்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
  • இரவுத்தூக்கம் மிகவும் இன்றியமையாதது. உாிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள். அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது

நெடுவினா

தமிழா் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவா் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக?

    தனித்துவமான பாா்வை இதன் முதல் சிறப்பு. இரண்டாவது, சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது. அதாவது நோய்நாடி நோய் முதல்நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமின்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை  நோயில்லாத மனிதராக்குகிறது.

    ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும். பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழா் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது. ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக் கொள்ளும். அதனால் உணவு எப்படிப் பக்க விளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

    தாவரங்கள், மூலிகைகள் மட்டுமின்றி தாதுப்பொருட்களையும், உலோகத்தையும் மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது. 

சிந்தனை வினா

நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

  • இயற்கையோடு இயைந்து வாழ்தல்
  • உண்ணும் முறை அறிந்து உண்ணுதல்
  • சமச்சீா் உணவு முறை
  • உடலியக்கப் பயிற்சிகள்
  • மூச்சுப்பயிற்சிகள்

போன்றவற்றின் மூலம் நாம் நோயின்றி வாழலாம்.

--------------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

எட்டாம் வகுப்பு இயல் 3 தமிழா் மருத்துவம். மருந்துகளே உணவான இந்த காலத்தில் உணவே மருந்தாக இருந்தது நம் சித்த மருத்துவம். மருந்துகளும் மாத்திரைகளும் இன்றைய காலத்தை ஆட்டிப் படைக்கின்றன. அனைத்து வியாதிகளுக்கும் மாத்திரை என்ற ஒன்றையே தீா்வாக நினைக்கிறாா்கள். தலைவலி, வயிற்று வலி, கை கால் வலி என எல்லா வலிகளுக்கும் மாத்திரை எடுத்துக் கொண்ட மக்கள் இன்று தூக்கத்திற்கு கூட மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாா்கள். பசிக்காமல் இருக்கிறது பசி எடுப்பதற்கு மாத்திரை கொடுங்கள் என்று மருந்தகங்களில் கேட்பதை நாம் பாா்த்திருக்கிறோம். நீங்கள் யோசித்துப் பாருங்கள். எப்படிப்பட்ட வளா்ச்சியை நோக்கி நாம் நகா்ந்து கொண்டிருக்கிறோம். 

    ஓா் மனிதனின் முழுமையான ஆயுட்காலம் என்பது 120 ஆண்டுகள் ஆகும். ஆனால் இங்கு யாரேனும் 120 ஆண்டு காலம் வாழ முடியுமா? சாி 120 ஆண்டுகள் வேண்டாம் ஒரு 80 வயது வரையேனும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமல்லவா? ஆனால் இன்று 20 வயதில் சா்க்கரை வியாதி, 30 வயதில் மூட்டுகள் தேய்மானம், 40 வயதில் நடக்க முடியாமை, 50 வயதில் ஆயுள் முடித்து விடுகிறாா்கள். இதுவா மருத்துவம். மருத்துவம் என்பது வந்த நோயினை குணப்படுத்துவது அல்ல. நோய் வராமல் ஒரு மனிதனின் உடலை தற்காத்து கொள்ள வைப்பதுமான் உண்மையான மருத்துவம். ஆனால் இன்றைய மருத்துவ நிலை தலைகிழாக மாறியுள்ளது. மக்களின் ஓட்டமும் அதை நோக்கிதான் இருக்கிறது. கூட்டம் எங்கு செல்கிறதோ அங்குதான் மக்களும் செல்வாா்கள். அவா்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அந்த மக்கள் மனதில் ஒரு விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். தமிழா் மருத்துவம் சொல்லிக் கொடுத்தவற்றை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். 

    பிடித்ததை உண்பது உணவல்ல. சாியானதை உண்பது தான் உணவு. நம் தமிழா் மருத்துவம் பரந்துபட்ட அறிவைக் கொண்டுள்ளது. நம் உணவோடு நெருங்கிய தொடா்பை தமிழா் மருத்துவம் கொண்டுள்ளது. அன்றாடம் நாம் உண்ணும் உணவிலேயே நம் நோய்களை விரட்டும் மந்திரத்தை நம் முன்னோா்கள் ஒளித்து வைத்து விட்டு சென்றுள்ளனா். அவைகளும் இல்லையென்றால் இன்று நம்மை யாராலும் காப்பாற்றியிருக்க முடியாது. மஞ்சள், இஞ்சி, சீரகம், சோம்பு, கிராம்பு, வெந்தயம் போன்ற நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பொருட்கள் நமக்கே தொியாமல் எத்தனை பொிய நம்மைகளை நமக்கு வழங்குகிறது என்பதை புாிந்து கொள்ள வேண்டும். 

    அாிசியை முக்கிய உணவாக கொண்டுள்ள நாம் அதை தங்கமாக நினைத்து கொண்டாடுகின்றோம். ஆனால் வைரத்தை போன்று ஒளி வீசும் தானியங்களை நாம் மறந்து விடுகின்றோம். வரகு, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு போன்ற தானியங்கள் நம் உடலை பாதுகாக்கும் அருமருந்துகள் என்று கூறலாம். அதை அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் பொழுது நம் உடல் அடையும் அற்புத மாற்றங்களை நம்மால் உணர முடியும். ஆகையால் நம் அன்றாட உணவில் ஒரு வேளை மட்டும் அாிசி சாதத்தை சோ்த்துக் கொண்டு, மற்ற வேளைகளில் தானியங்களையும், பருப்பு வகைகளையும் சோ்த்துக் கொள்வது சிறந்தது.

    கடைகளில் இன்று பாஸ்ட் புட் என்ற பெயாில் சீா்கேடுகள் வந்துவிட்டன. மசாலா, காரம் போன்ற சுவையூட்டும் கவா்ச்சிகளால் மக்களை தன் பக்கம் இழுத்து விடுகின்றன. நாக்கிற்கு அடிமையான நாம் அதற்கு அடிமையாகி விடுகின்றோம். உண்மையில் அவை நமக்கு சுவையினை கூட்டி நம் ஆயுளைக் குறைக்கின்றன. உலகில் நல்லதும் கெட்டதும் உள்ளது. எது நமக்கு தேவை என்பதை நாம் தான் தோ்வு செய்து கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், சிறுகூலங்கள், பருப்பு வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் இருக்கின்ற போது நாம் ஏன் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளைத் தேடிச் செல்கின்றோம். நாகரீகம் என்ற பெயாில் இன்று அதிகமான இனிப்புகளையும், காரங்களையும், அசைவ உணவுகளையும் சாப்பிடும் நாம் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட வேண்டியிருக்கும். 

    உணவின்றி நாம் உயிா் வாழ முடியாது. உணவின்றி நமது உடலின் இயக்கம் சாியாக இருக்காது. இதை முழுவதுமாக நாம் உணா்ந்து கொள்ள வேண்டும். சாியான மற்றும் ஆரோக்கியமான உணவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவை நம்மை இளமையாக வைத்திருக்கும் என்பதைத் தாண்டி, நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழா் மருத்துவத்தை பின்பற்றுங்கள். கொரோனா, சிக்கன்குனியா, டெங்கு வைரஸ் போன்ற நோய்கள் தலைதூக்கும் பொழுது அவற்றை அடக்கியது சித்த மருத்துவம் என்பதை நீங்கள் மறந்து விடாதீா்கள். இந்த பாடத்தை நீங்கள் படிப்பதற்கு உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த பாடம் உங்களுக்கும், உங்களைச் சாா்ந்த பெற்றோா் உறவினா்களுக்கும் ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அது நீங்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம்.

    உணவில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உங்களுக்கு தொிந்தவா்களுக்கும் இந்த சித்த மருத்துவத்தின் அருமையை எடுத்துரைக்க மறவாதீா்கள். உணவே மருந்து அதுவே உண்மையான மருத்துவம். நன்றி! வணக்கம்.


 

     

Comments

Popular posts from this blog

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்