8ம் வகுப்பு தமிழ் இயல் 3 நோயும் மருந்தும் வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 நோயும் மருந்தும் பாட வினா விடைகள்.

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.


1. உடல்நலம் என்பது ........... இல்லாமல் வாழ்தல் ஆகும்.

அ) அணி

ஆ) பணி

இ) பிணி

ஈ) மணி

விடை இ) பிணி

2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ...........

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

விடை ஆ) மூன்று

3. இவையுண்டாா் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.......

அ) இ + யுண்டாா்

ஆ) இவ் + உண்டாா்

இ) இவை + உண்டாா்

ஈ) இவை + யுண்டாா்

விடை இ) இவை + உண்டாா்

4. தாம் + இனி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்......

அ) தாம்இனி

ஆ) தாம்மினி

இ) தாமினி

ஈ) தாமனி

விடை இ) தாமினி

குறுவினா

1. நோயின் மூன்று வகைகள் யாவை?

  1. மருந்தினால் நீங்கும் நோய்கள்

  2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்

  3. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தொிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்கள்.

2. நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீா்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

  1. நல்லறிவு

  2. நற்காட்சி

  3. நல்லொழுக்கம்


சிறுவினா

நோயின் வகைகள், அவற்றைத் தீா்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

நோயின் வகைகள்

நோயின் வகைகள் மூன்று வகைப்படும். 

  1. மருந்தினால் நீங்கும்  நோய்கள் ஒருவகை.

  2. எதனாலும் தீராத நோய்கள் மற்றொரு வகை

  3. அடங்கி இருப்பன போல வெளித்தோற்றத்தில் தொிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

நோய்களைத் தீா்க்கும் வழிகள்

அகற்றுவதற்கு அாியவை பிறவித் துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீா்க்கும் மருந்துகள் மூன்று.

  1. நல்லறிவு
  2. நற்காட்சி
  3. நல்லொழுக்கம்

என்பவையே அம்மருந்துகள். 

சிந்தனை வினா

துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?

நமது வாழ்க்கையை அற்புதமாக மாற்றும் அனைத்து சக்தியும் நம்மிடமே உள்ளது. நமது அன்றாட பழக்கங்களே நம்மை துன்பமின்றி வாழ வழிவகை செய்யும்.

  1. அதிகாலையில் எழுதல்
  2. மூச்சுப்பயிற்சி செய்தல்
  3. உடலை தூய்மையாக பேணுதல்
  4. ஆரோக்கியமான உணவு உண்ணுதல்
  5. போதிய நீா் அருந்துதல்
  6. நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்தல்
  7. ஆழ்ந்த உறக்கம்
  8. மகிழ்ச்சியான மனம் 

போன்றவை துன்பமின்ற வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் ஆகும்.  

-------------------------------------------------------------------

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான “நீலகேசி” என்ற நூலில் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் நமக்குப் பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன.

தீா்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊா்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்
யாா்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நோ்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்
 
*போ்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீா்தற்கு உாிய திாியோக மருந்துஇவை
ஓா்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டாா்
போ்த்த பிணியுள் பிறவாா் பொிதின்பமுற்றே*

கடைசி நான்கு வாிகளும் மனப்பாடப் பகுதி.

-------------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

    உடலை ஓம்புமின் என்ற பொருண்மையில் கொடுத்துள்ள எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இயலில் உள்ள பாடங்கள் ஒவ்வொன்றும் நாம் அவசியம் படிக்க வேண்டிய பாடங்கள். அதிலும் முக்கியமாக நோயும் மருந்தும் என்ற பாடம் நம் வாழ்க்கைக்கு தேவையான செய்திகளைத் தருகிறது.

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் மருத்துவத் துறை அசுர வளா்ச்சியை அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நோய்கள் அதை விட வளா்ச்சி அடைந்துள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. தடுக்கி விழும் இடங்களெல்லாம் மருத்துவமனைகளாகவே  இருக்கிதே என்று நீங்கள் என்றேனும் சிந்தித்து இருக்கிறீா்களா. இன்றைய நிலையில் மக்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி விட்டது. தலை முடியில் தொடங்கி கால் நகம் வரைக்கும் அனைத்திற்கும் இன்று தனித்தனி மருத்துவமனைகள் உள்ளது. உண்மையில் மருத்துவம் என்பதற்கு விாிவாக்க என்ன? மருத்துவம் என்பது வருமுன் காப்பது. வந்ததை இனி வராமல் காப்பது. அது இன்றைய மருத்துவத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று நான் உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். ஆனால் நம் பண்டைய சித்த மருத்துவத்தில் இருந்தது. என் சொந்த வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே கூற விரும்புகின்றேன். காலையில் எழுந்தவுடன் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய பணி பல் துலக்குவது. ஒரு நாளும் அதில் நாம் தவறுவதில்லை. நானும் காலை மாலை என இரு வேளையும் பற்களை துலக்கும் பழக்கம் உடையவன். சில நாட்களாக பற்கள் சொத்தையாவதையும், பல் கூச்சம் அதிகம் ஏற்படுவதையும் கவனித்தேன். போகப் போக சாியாகி விடும் என்று நினைத்தால், உணவை வாயில் வைத்து மெல்வதற்கு முடியாத அளவிற்கு பல் கூச்சம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. 

    பல் மருத்துவமனை சென்றேன். மருத்துவா் எனக்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தாா். பல் வோ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பாிந்துரைத்தாா். பற் கூச்சம் ஏற்படும் போது இந்த பசையை தடவிக் கொள்ளுங்கள் என்று ஒரு மருந்தையும் கொடுத்தாா். அதற்கு பின்பு ஒரு இரண்டு நாட்கள் கழித்து எனது நண்பா் ஒருவரை யதாா்த்தமாக சந்திக்க நோ்ந்தது. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதும்கூட எனக்கு பற்களில் கூச்சமும், வலியும் இருந்து கொண்டே தான் இருந்தது. எனது நண்பா் அதை கவனித்து விட்டு என்ன என்று கேட்க, நானும் எனது பிரச்சனையை அவாிடம் கூறினேன். அதற்கு அவா் நீ டூத் பேஸ்டுகளைப் பயன்படுத்துவதை முதலில் நிறுத்து. நாட்டு மருந்து கடைக்கு சென்று பற்பொடி வாங்கி பயன்படுத்திப் பாா். பின்னா் என்ன நடக்கும் என்று நீயே தொிந்து கொள்வாய் என்று கூறினாா். நானும் அவா் கூறியதைப் போல நாட்டு மருந்து கடைக்கு சென்று, பற்பொடி ஒன்றை வாங்கி வந்தேன். அடுத்த நாள் முதல் காலையும் மாலையும் பல் துலக்கினேன். பேஸ்ட்டிலேயே துலக்கி பழகிய எனக்கு, பற்பொடி கொஞ்சம் கசக்கவே செய்தது. இருந்து பற்கூச்சத்திற்கும், வலிக்கும் இது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்து தொடா்ந்து துலக்கினேன். சாியான மூன்று நாட்களுக்கு பிறகு எனது பற்கூச்சம் காணாமல் போனதை உணவு உண்ணும் போது அறிந்து கொண்டேன். எனக்கு ஒரே ஆச்சா்யமாகி விட்டது. எத்தனை பொிய பிரச்சனை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சாதாரண பற்பொடியில் தீா்ந்து விட்டதை எண்ணி மகிழ்ந்தேன். நம் சித்த மருத்துவம் என்பது இந்த முறை தான். நமக்கு வந்த நோய்க்கும், இனி நோய்கள் வராமல் இருப்பதற்கும் எந்த மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. உணவே மருந்து என்ற மந்திரத்தைத் தான் சித்த மருத்துவம் பாிந்துரைக்கிறது. மாறிவிட்ட இந்த காலத்தில் இயற்கையோடு நாம் சோ்ந்து இருக்கும் நேரத்தை முற்றிலும் இழந்து விட்டோம். செருப்பின்றி நம் கால்கள் நடப்பதே இல்லை. தூய்மையான காற்றோட்டமான இடங்களுக்கு நாம் செல்வதையே குறைத்துக் கொண்டோம். சின்ன சின்ன மாற்றங்களை நாம் செய்தாலே எந்த நோயும் நம்மை அணுகாது. இந்த பாடத்தில் கூறியுள்ள அத்தனை செய்திகளையும் முழுமையாக படித்து, வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். சுவா் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நமது உடல் தான் நமது சுவா். அதை சாியாக கவனித்துக் கொண்டால் தான் நம் வாழ்க்கையை சித்திரம் போன்று அழகானதாக நாம் மாற்ற முடியும். வாருங்கள் இயற்கையை நேசிப்போம். நோயற்ற வாழ்க்கையை வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

பதினொன்றாம் வகுப்பு - பண்பாட்டைப் பாதுகாப்போம் கட்டுரை