மின்வாாிய அலுவலருக்கு கடிதம் எழுதுக - பத்தாம் வகுப்பு கட்டுரை
உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வொருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவண செய்யும்படி மின்வாாிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக. அனுப்புநா் அ அ அ அ ஆ ஆ ஆ ஆ அ அ அ அ பெறுநா் மின்வாாிய அலுவலா் அவா்கள், தமிழ்நாடு மின்சார வாாியம், கோயமுத்தூா் - 44 மதிப்பிற்குாிய ஐயா, பொருள் - மின் விளக்குகள் பழுது நீக்க வேண்டுதல் சாா்பு..... வணக்கம், எங்கள் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் எாிவதில்லை. சில மின்விளக்குகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் மக்கள் இரவில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. தெரு இருட்டாக இருப்பதால் வழிப்பறிகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இது தவிர நாய்களின் தொந்தரவும் இருக்கின்றது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். ஆகவே விரைவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சாி செய்து, ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி! இடம் - கோவை