7ம் வகுப்பு குற்றியலுகரம் குற்றியலிகரம் பாட வினா விடைகள்
ஏழாம் வகுப்பு தமிழ் குற்றியலுகரம் குற்றியலிகரம் வினா விடைகள் கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகரம் வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக. ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து நெடில்தொடர் ஆறு, ஏடு, காசு ஆய்தத்தொடர் எஃகு உயிர்த்தொடர் விறகு வன்தொடர் உழக்கு, எட்டு மென்தொடர் கரும்பு, பந்து இடைத்தொடர் கொய்து பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக பசு, விடு, ஆறு, கரு ஆறு பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து பஞ்சு ஆறு, மாசு, பாகு, அது அது அரசு, எய்து, மூழ்கு, மார்பு அரசு பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு எஃகு குறுவினா 1. குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக. குறுமை + இயல் + உகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 2. குற்றியலிகரம் என்றால் என்ன? வரகு ...