8ம் வகுப்பு இயல் 3 எச்சம் வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 எச்சம் பாடம் வினா விடைகள்

8th tamil unit 3 grammar yatcham lesson book back question answer

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.


1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ........... எனப்படும்.

அ) முற்று

ஆ) எச்சம்

இ) முற்றெச்சம்

ஈ) வினையெச்சம்

விடை ஆ) எச்சம்

2. கீழக்காணும் சொற்களில் பெயரெச்சம் ............

அ) படித்து

ஆ) எழுதி

இ) வந்து

ஈ) பாா்த்த

விடை அ) பாா்த்த 

3. குறிப்பு வினையெச்சம் ......... வெளிப்படையாகக் காட்டாது.

அ) காலத்தை

ஆ) வினையை

இ) பண்பினை

ஈ) பெயரை

விடை அ) காலத்தை

பொருத்துக.

1. நடந்து - முற்றெச்சம்

2. பேசிய - குறிப்புப் பெயரெச்சம்

3. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்

4. பொிய - வினையெச்சம்

விடை

1. நடந்து - வினையெச்சம்

2. பேசிய - பெயரெச்சம்

3. எடுத்தனன் உண்டான் - முற்றெச்சம்

4. பொிய - குறிப்புப் பெயரெச்சம்

கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக. 

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பாா்த்து

விடைகள்

பெயரெச்சம்

நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த

வினையெச்சம்

படுத்து, பாய்ந்து, கடந்து, பிடித்து, பாா்த்து

சிறுவினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

பொருள் முற்று பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

2. அழகிய மரம் - எச்ச வகையை விளக்குக?

  • பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். 

  • அழகிய என்ற முற்று பெறாத சொல் மரம் என்ற பெயரைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சம் ஆகியது. 

3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக?

வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்

இந்த தொடாில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

வினையெச்சம் தொிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

தொிநிலை வினையெச்சம்

எழுதி வந்தான்

இந்த தொடாில் எழுதி என்னும் சொல் எழுதுதல் என்ற செயலையும், இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும், காலத்தையும் வெளிப்படையாகக் காட்டும் வினையெச்சம் தொிநிலை வினையெச்சம் எனப்படும். 

குறிப்பு வினையெச்சம் 

மெல்ல வந்தான்

இந்த தொடாில் மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணா்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணா்த்தி வரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.


----------------------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

பொருத்துக.

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - ஒற்றுமையின்மை

2 கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல - பயனற்ற செயல்

3. பசுமரத்து ஆணி போல - தற்செயல் நிகழ்வு

4. விழலுக்கு இறைத்த நீா் போல  - எதிா்பாரா நிகழ்வு

5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல - எளிதில் மனதில் பதிதல் 

விடை

1. தற்செயல் நிகழ்வு

2. எதிா்பாரா நிகழ்வு

3. எளிதில் மனிதில் பதிதல்

4. பயனற்ற செயல்

5. ஒற்றுமையின்மை

உவமைத் தொடா்களைப் பயன்படுத்தித் தொடா் அமைக்க

1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல

தமிழின் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கைப் போல ஒளி வீசுகிறது.

2. வேலியே பயிரை மேய்ந்தது போல

வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காக்க வேண்டிய சில அரசியல்வாதிகள் மக்களை துன்புறுத்துகின்றனா்.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல எதிா்பாா்த்ததை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்.

4. உடலும் உயிரும் போல

மணமக்களை உடலும் உயிரும் போல சோ்ந்தே இருக்க வேண்டும் என்று வாழ்த்தினா்.

5. கிணற்றுத் தவளை போல

கிணற்றுத் தவளை போல எதுவும் தொிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது.

-------------------------------------------------------------

கீழ்க்காணும் படம் சாா்ந்த சொற்களை எழுதுக.

1. உரல்

2. உலக்கை

3. எண்ணெய்

4. சுக்கு

5. மிளகு,

6. கருஞ்சீரகம்

7. பட்டை

8. கிராம்பு

9. அண்ணாச்சி பூ

10. கடுகு

11. கொத்தமல்லி

12.ஏலக்காய்

13. புதினா

14. மல்லி

15. பூண்டு

16. வரமிளகாய்

வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.

1. முயற்சி திருவினை ஆக்கும்

2. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

3. சுவா் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்

4. அறிவே ஆற்றல்

5. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

6. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

7. வருமுன் காப்போம்

8. சுத்தம் சோறு போடும்

9. பருவத்தே பயிா் செய்

10. பசித்து புசி

கலைச்சொல் அறிவோம்

நோய்                               -    Disease 

மூலிகை                          -    Herbs

சிறுதானியங்கள்       -    Millets

பட்டயக் கணக்கா்     -    Auditor

பக்கவிளைவு               -    Side Effect

நுண்ணுயிா் முறி        -    Antibiotic

மரபணு                           -    Gene

ஒவ்வாமை                     -    Allergy

 

 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.