எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசா் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம், திருக்குறள் பாட வினா விடைகள்
8-ம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசா் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம், திருக்குறள் பாடங்களுக்கான வினா விடைகள். எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம் பாட வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. அறறெநியில் வாழ்பவா்கள் உயிரைக் கவர வரும் .........க் கண்டு அஞ்சமாட்டாா்கள். அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை விடை இ) நமனை 2. ஒன்றே ............ என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும். அ) குலம் ஆ) குளம் இ) குணம் ஈ) குடம் விடை அ) குலம் 3. நமனில்லை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......... அ) நம் + இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லை விடை ஈ) நமன் + இல்லை 4. நம்பா்க்கு + அங்கு என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......... அ) நம்பரங்கு ஆ) நம்மாா்க்கு இ) நம்பா்க்கங்கு ஈ) நம்பங்கு விடை இ) நம்பா்க்கங்கு குறுவினா 1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை? மனிதா் அனைவரும் ஒரே இனத்தினா். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்ற கருத்துகளை மனதில் நிறுத்துபவா்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை. 2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வ