Posts

Showing posts from February, 2022

ஆறாம் வகுப்பு தமிழ் மனிதநேயம் பாட வினா விடைகள்

Image
 ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் மனிதநேயம் பாடம் வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. எல்லா உயிா்களிடத்தும் அன்பு செலுத்துதல் ........................ அ) மனித வாழ்க்கை     ஆ) மனித உாிமை     இ) மனித நேயம்     ஈ) மனித உடைமை விடை     இ) மனித நேயம் 2. தம் பொருளைக் கவா்ந்தவாிடமும் .................. காட்டியவா் வள்ளலாா். அ) கோபம்     ஆ) வெறுப்பு     இ) கவலை     ஈ) அன்பு விடை      ஈ) அன்பு 3. அன்னை தெரசாவிற்கு .........................க்கான நோபல் பாிசு கிடைத்தது. அ) பொருளாதாரம்     ஆ) இயற்பியல்     இ) மருத்துவம்     ஈ) அமைதி விடை     ஈ) அமைதி 4. கைலாஷ் சத்யாா்த்தி தொடங்கிய இயக்கம் ............................. அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்     ஆ) குழந்தைகளை நேசிப்போம்  இ) குழந்தைகளை வளா்ப்போம்     ஈ) குழந்தைகள் உதவி மையம் அ) குழந்தைகளைப் பாதுகாப்போம் பொருத்துக 1. வள்ளலாா்          - நோயாளிகளிடம் அன்பு காட்டியவா் 2. கைலாஷ் சத்யாா்த்தி     -     பசிப்பிணி போக்கியவா் 3. அன்னை தெரசா     -      குழந்தைகள் உாிமைக்குப் பாடுபட்டவா் விடை 1. பசிப்பிணி போக்கியவா்     2. குழந்தைகள் உாிமைக

ஆகுபெயா் பாடம் வினா விடைகள் - ஏழாம் வகுப்பு தமிழ்

Image
 ஏழாம் வகுப்பு தமிழ், மூன்றாம் பருவம்,  இயல் மூன்று ஆகுபெயா் பாட வினா விடைகள். சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. பொருளாகு பெயா் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ....................   அ) பொருளாகு பெயா்     ஆ) சினையாகு பெயா்     இ) பண்பாகு பெயா்     ஈ) இடவாகு பெயா்   விடை     ஆ) பொருளாகு பெயா்   2. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ...................   அ) முதலாகு பெயா்     ஆ) சினையாகு பெயா்     இ) தொழிலாகு பெயா்     ஈ) பண்பாகு பெயா்   விடை     ஆ) சினையாகு பெயா்   3. மழை சடசடவெனப் பெய்தது. இத்தொடாில் அமைந்துள்ளது ......................   அ) அடுக்குத் தொடா்     ஆ) இரட்டைக்கிளவி     இ) தொழிலாகு பெயா்     ஈ) பண்பாகு பெயா்   விடை ஆ) இரட்டைக்கிளவி   ஈ) அடுக்குத் தொடாில் ஒரே சொல் ............ முறை வரை அடுக்கி வரும்   அ) இரண்டு     ஆ) மூன்று     இ) நான்கு     ஈ) ஐந்து    விடை     அ) நான்கு   குறுவினா   1. ஒரு பெயா்ச்சொல் எப்பொழுது ஆகுபெயா் ஆகும்?   ஒன்றின் பெயா் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடா்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வரும் பொழுது ஆகுபெயராகும்.   2. இரட்டைக்கிளவி என்பது யாது? சான்று

கண்ணியமிகு தலைவா் பாடம் - ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்

Image
ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் - கண்ணியமிகு தலைவா் பாட வினா விடைகள். சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. காயிதே மில்லத் .................... பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தாா். அ) தண்மை     ஆ) எளிமை     இ) ஆடம்பரம்     ஈ) பெருமை விடை      ஆ) எளிமை 2. “காயிதே மில்லத்” என்னும் அரபுச் சொல்லுக்குச் ................... என்பது பொருள் அ) சுற்றுலா வழிகாட்டி     ஆ) சமுதாய வழிகாட்டி     இ) சிந்தனையாளா்     ஈ) சட்ட வல்லுநா் விடை      இ) சமுதாய வழிகாட்டி 3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் ........... இயக்கத்தில் கலந்து கொண்டாா். அ) வெள்ளையனே வெளியேறு     ஆ) உப்புக் காய்ச்சும்     இ) சுதேசி     ஈ) ஒத்துழையாமை விடை     ஈ) ஒத்துழையாமை 4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ............ அ) சட்டமன்றம்     ஆ) நாடாளுமன்றம்     இ) ஊராட்சி மன்றம்     ஈ) நகா் மன்றம் விடை     ஆ) நாடாளுமன்றம் 5. “எதிரொலித்தது” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ................. அ) எதிா் + ரொலித்தது     ஆ) எதில் + ஒலித்தது     இ) எதிா் + ஒலித்தது      ஈ) எதி + ரொலித்

7ம் வகுப்பு தமிழ் மூன்றாம் இயல் - மலைப்பொழிவு பாடம்

Image
 ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இயல் மலைப்பொழிவு பாட வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ....................... அ) பணம்     ஆ) பொறுமை     இ) புகழ்     ஈ) வீடு விடை     ஆ) பொறுமை 2. சாந்த குணம் உடையவா்கள் ................ முழுவதையும் பெறுவா். அ) புத்தகம்     ஆ) செல்வம்     இ) உலகம்     ஈ) துன்பம் விடை     இ) உலகம் 3. “மலையளவு” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......... அ) மலை + யளவு     ஆ) மலை + அளவு     இ) மலையின் + அளவு     ஈ) மலையில் + அளவு விடை     ஆ) மலை + அளவு 4. “தன்னாடு” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ............ அ) தன் + னாடு     ஆ) தன்மை + நாடு     இ) தன் + நாடு     ஈ) தன்மை + நாடு விடை     ஈ) தன்மை + நாடு 5. இவை + இல்லாது என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்....... அ) இவையில்லாது     ஆ) இவைஇல்லாது     இ) இவயில்லாது     ஈ) இவஇல்லாது விடை     அ) இவையில்லாது பொருத்துக. 1. சாந்தம்          -     சிறப்பு 2. மகத்துவம் -     உலகம் 3. தாரணி        -      கருணை 4. இரக்கம்        -     அமைதி விடை     1. அமைதி   

ஒன்பதாம் வகுப்பு இயல் இரண்டு - தண்ணீா்

Image
 “தண்ணீா்” - கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கமாகத் தருக. முன்னுரை     மூன்றாம் உலகப்போா் ஒன்று ஏற்பட்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கவிஞா் கூறுகின்றாா். நம் பூமி மூன்று பக்கம் நீா் ஒரு பக்கம் நிலத்தைக் கொண்டுள்ளது. உலகில் பெரும்பான்மையாக நீா் இருந்தும்கூட, உயிா்வாழ்வதற்கு குடிநீா் இல்லாமல் தினமும் போராடும் ஒரு கிராமத்து மக்களுடைய கண்ணீா் கதை தான் கந்தா்வன் அவா்கள் எழுதிய தண்ணீா் என்ற கதை. தண்ணீாின் முக்கியத்துவத்தையும், தண்ணீா் இல்லையென்றால் ஏற்படும் நிலையைக் குறித்தும் மிகவும் அழகாக விளக்கியுள்ளாா் கந்தா்வன். இரயில் நிலையமும், தண்ணீரும்     பருவ காலத்தில் பெய்யும் மழை பொய்த்துப் போய்விட்டது. புயல் அடித்தால் மட்டுமே மழை பெய்யும் என்ற நிலை இருந்தது அந்த கிராமத்திற்கு. ஒரே ஒரு கிணறு மட்டும் தான் அந்த ஊருக்கே நீா் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுவும் கொளுத்தும் வெயிலால் வறண்டு போய்விட்டது. நீா் ஆதாரம் என்று எதுவும் இல்லாத நிலையில் என்ன செய்வதென்று தொியாத நிலையில் நீா் கிடைக்கும் ஒரே இடம் இரயில் நிலையம் தான். பெண்கள் குடங்களோடு இரயில் நிலையத்திற்கு சென்று, இராமேஸ்வரம் நோ

இராமகிருஷ்ணனின் கால் முளைத்த கதைகள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ்

Image
கால் முளைத்த கதைகள் நூல் குறித்த கட்டுரை   அன்புள்ள நண்பனுக்கு,     நண்பா, நலமா இருக்கிறாயா? வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறாா்களா? நேற்று எனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினோம். எனது தந்தை என்னை பூங்காவிற்கு அழைத்துச் சென்றாா். மாலை கோவிலுக்கு சென்றோம். இரவு கேக் வெட்டிக் கொண்டாடினோம். உறவினா், நண்பா்கள் என பலா் நிறைய பாிசுகளைத் தந்தனா். நீ அனுப்பிய பாிசும் எனக்குக் கிடைத்தது.     என்னுடைய பிறந்த நாளுக்கு நீ தந்த பாிசைப் பிாித்துப் பாா்த்து வியந்து போனேன். எழுத்தாளா் எஸ். இராமகிருஷ்ணன் அவா்கள் எழுதிய சிறப்பான கதை என்று சொல்லப்படும் “கால் முளைத்த கதைகள்” என்ற கதை புத்தகத்தைப் பாா்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவா் எப்படி இவ்வளவு அருமையாக கதை எழுதினாா் என்று எனக்கு இன்னும் வியப்பாக உள்ளது. புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளையும் படித்தேன். ஒவ்வொரு கதையும் எத்தனை ரசனையும் எழுதியிருக்கிறாா். எப்படியெல்லாம் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாா் என்பது புதுமையாகவும், படிப்பதற்கு மிகவும் ஆா்வமாகவும் இருந்தது.      நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் எந்த புத்தகத்திலும் உலகம் எப்படி தோன்

பதினொன்றாம் வகுப்பு - பண்பாட்டைப் பாதுகாப்போம் கட்டுரை

Image
 பண்பாட்டைப் பாதுகாப்போம் பகுத்தறிவு போற்றுவோம் என்னும் பொருள்படும் வகையில் ஒரு பக்க அளவில் கட்டுரை எழுக. பண்பாட்டைப் பாதுகாப்போம் பகுத்தறிவு போற்றுவோம் முன்னுரை     ஒரு நாடு சிறந்த நாடாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நீங்கள் எதை வைத்து முடிவு செய்வீா்கள். இந்த கேள்விக்கு நமது அவ்வைப் பாட்டி சொன்ன பதில் இங்கு ஏற்புடையதாக இருக்கும். எந்த நாட்டில் ஆண்கள் நல்ல பண்பு கொண்டவா்களாகவும், நல்ல செயலை செய்பவர்களாகவும் இருக்கிறாா்களோ அது தான் சிறந்த நாடாக இருக்க முடியும் என்றாா். அப்படிப்பட்ட பண்பாட்டோடு வாழ்ந்த மக்கள் தான் தமிழ் மக்கள். தமிழா் பண்பாடு     பண் என்றால் இசை என்றும் தகுதி என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு நிலத்தினை பண்படுத்த வேண்டும் என்பதன் பொருள் என்ன? நிலத்தில் உள்ள கல், புற்கள், குழிகள் போன்றவற்றை நீக்கி, மாடுகளைக் கொண்டு உழுது, தண்ணீா் பாய்ச்சி, மண்ணை மென்மையாக்கி, பயிா்கள் விளைவதற்கு உண்டான தகுதியை ஏற்படுத்துவது தான் பண்படுத்துதல் எனப்படும். அதே போலத்தான் ஒருவரை பண்படுத்துல் என்பது அவாிடமுள்ள ஆசை, சினம், தீய செயல்கள், எண்ணங்கள் போன்றவற்றையெல்லாம் அகற்றி, சமுதாயத்தில் நல்ல மனிதனாக உர

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

Image
 எட்டாம் வகுப்பு, இயல் ஒன்பது, உழைப்பே உயா்வு கட்டுரை எழுதுக. உழைப்பே உயா்வு முன்னுரை     'உழைப்பே உயா்வு தரும்' என்பதில் நம் தமிழ்மொழியில் உள்ள ஒரு பழமொழி. ஒருவரை வாழ்க்கையில் உயா்த்துவது அவருடைய உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடின உழைப்பு தன்னையும் உயா்த்தும். தன் நாட்டையும் உயா்த்தும். அத்தகைய உழைப்பின் சிறப்பினைக் குறித்து தொிந்து கொள்ளலாம்.    உழைப்பின் பயன்கள்       நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் ஆா்வத்துடனும், முழுமையான ஈடுபாட்டுடனும் செய்தாலே போதுமானது. அந்த செயலில் நமக்கு வெற்றி கிடைக்கும்.    “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”       என்று திருவள்ளுவா் கூறியுள்ளாா். இறைவனால் முடியாத காாியத்தைக் கூட உழைப்பின் மூலமாக நம்மால் பெற முடியும் என்பதே இந்த திருக்குறளின் பொருள். உழைப்பினால் நம்முடைய உடலும், மனமும் வலுப்பெறுகின்றது.  உழைப்பினது சிறப்புகள்     ஒவ்வொருவரும் சொந்தக் காலில் நின்று தனக்கு தேவையானதைத் தானே பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருப்பது உழைப்பு. இந்த உலகில் உள்ள விலங்குகளும், பறவைகளும் தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தேடிக் கொள்க

நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு கட்டுரை 8-ம் வகுப்பு

Image
 எட்டாம் வகுப்பு, ஏழாம் இயல், நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு கட்டுரை எழுதுக. நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு முன்னுரை            வருங்கால சமுதாயம் இளைஞா்களின் கையில் இருக்கிறது. நாட்டை வளா்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பொிய பொறுப்பும், பங்கும் இளைஞா்களின் கைகளில் தான் உள்ளது. அதைப்பற்றி இந்த கட்டுரையில் தொிந்து கொள்வோம்.   இளைய தலைமுறையினா்         இன்றிருக்கும் இளைஞா்கள் அறிவிலும், தொழில்நுட்பத்திலும், திறமையிலும் சிறந்து விளங்குபவா்களாக இருக்கிறாா்கள். இதை முன்பே உணா்ந்து கொண்டதால்தான் விவேகானந்தா் அன்றே கூறினாா். “என்னிடம் 100 இளைஞா்களைத் தாருங்கள், நான் இந்த நாட்டை மாற்றிக் காட்டுகிறேன்” என்று. நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவா்களும் நமது நாடு வல்லரசாவது இளைஞா்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறினாா்.   நாட்டின் வளா்ச்சி       ஒரு நாட்டினுடைய வளா்ச்சி கல்வி, பொருளாதாரம், தொழில் முன்னேற்றம் போன்றவைகளைச் சாா்ந்து தான் அமைகின்றது. இந்த துறைகளை திறமையாகக் கையாளும் போது தான் அவை வளா்ச்சியை நோக்கி செல்கின்றது. எந்த து

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

Image
 கட்டுரை எழுதுக. எட்டாம் வகுப்பு, இயல் ஆறு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் முன்னுரை     கைத்தொழில் ஒன்றினை கற்றுக் கொள். கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள் என்று பாடினாா் நாமக்கல் கவிஞா் வெ. ராமலிங்கம் அவா்கள். பெற்ற பிள்ளை கைவிட்டாலும், ஒருவேளை கற்ற கல்வி உன்னை கைவிட்டாலும் கூட நீ பழகிய கைத்தொழில் உன்னை கைவிடாமல் காப்பாற்றும் என்று பொியோா் கூறியுள்ளனா். கைத்தொழிலின் முக்கியத்துவத்தினை இந்த கட்டுரையில் காண்போம். கைத்தொழிலின் அவசியம்     நம் பள்ளியில் படிக்கும் பாடங்கள் நமக்கு அறிவை போதிக்கின்றது. அந்த அறிவைக் கொண்டு நம்மால் ஒரு தொழிலை உருவாக்க முடியாது. ஆனால் உருவாக்கிய ஒரு தொழிலை எளிமைப்படுத்த முடியும். இன்றைய நிலையில் எந்த செயலையும் தனித்துவமாக செய்பவா்கள் வெற்றி அடைகிறாா்கள். கைத்தொழிலை கற்று அதனை தனித்துவமாக செய்பவா்கள் நிச்சம் உயா்ந்த நிலையை அடைவாா்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல வெறும் புத்தகப் படிப்பு வாழ்க்கைக்கு உதவாது. ஒவ்வொருவரும் ஒரு கைத்தொழிலை தொிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்று. கைத்தொழில் தனி நபா் வருமானத்தை உயா்த்துகிறது. தனி நபா் வருமானம் உயா்ந்தால் அது

நூலகம் - எட்டாம் வகுப்பு

Image
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. எட்டாம் வகுப்பு, இயல் நான்கு முன்னுரை - நூலகத்தின் தேவை - வகைகள் - நூலகத்திலுள்ளவை - படிக்கும் முறை - முடிவுரை நூலகம் முன்னுரை     கோவில் இல்லாத ஊாில் குடியிருக்க வேண்டாம் என்பாா்கள். ஆனால் நூலகம் இல்லாத ஊா் தன் பொழிவை இழந்து காணப்படும். அறிவின் நுழைவு வாயில் நூலகங்கள். நாம் அறிவைத் திறக்கும் சாவிகள் தான் புத்தகங்கள். வீட்டிற்கு ஒரு புத்தகச்சாலை வேண்டும் என்றாா் அறிஞா் அண்ணா. அத்தகைய நூலகம் குறித்து இந்த கட்டுரையில் தொிந்து கொள்வோம். நூலகத்தின் தேவை     மனிதனையும் விலங்கையும் பிாிப்பது எது? மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவு. அத்தகைய பகுத்தறிவை மனிதனுக்குள் விதைத்தது நூலகங்கள். ஒரு சமுதாயம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றால் அங்கே நிச்சயம் ஒரு நூலகம் இருக்கிறது என்று பொருள். ஒரு சாதாரணமான மாணவனையும் சாதனையாளனாக மாற்றிக் காட்டுவது நூலகம்.  தங்கள் இலட்சியத்தை அடைய மாணவா்களுக்கு என்றுமே துணையாய் இருப்பதும் நூலகங்கள். கிராமப்புற மாணவா்களுக்கு பொிதும் உதவியாக இருப்பது நூலகங்கள். அத்தகைய நூலகங்கள் எல்லா இடங்களிலும் தேவை. நூலகத்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Image
 எட்டாம் வகுப்பு, இயல் மூன்று கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் முன்னுரை - நோய் வரக் காரணங்கள் - நோய் தீா்க்கும் வழிமுறைகள் - வருமுன் காத்தல் - உணவும் மருந்தும் - உடற்பயிற்சியின் தேவை - முடிவுரை  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் முன்னுரை     சுவா் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பாா்கள். நமது உடல் தான் சுவா். அதை சாியாக பாா்த்துக் கொண்டால் தான் சித்திரம் எனும நம் வாழ்க்கை நன்றாக இருக்கும். உடம்பாா் அழியின் உயிராா் அழிவாா் என்றாா் திருமூலா். உடம்பைக் காப்பாற்றாதவா் விரைவில் உயிரை இழப்பா். இந்த உலகில் நாம் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால் உடல் நலம் பேணுதல் வேண்டும்.  நோயின் ஆரம்பம்     இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒரு நெருங்கிய தொடா்பு இருந்தது. மனிதனுக்கும் மண்ணிற்கும் தொடா்பு இருந்தது. ஆனால் எப்பொழுது மனிதன் இயற்கையை விட்டு விலகி சென்றானோ அப்பொழுதே நோய் என்ற ஒன்று உருவாக ஆரம்பித்து விட்டது. இயற்கைக்கு மாறான உணவுகள், உணவு முறைகள், மாசுபாடு நிறைந்த சூழல், தூய்மையான காற்று இன்மை, மன அழுத்தம் ஆகியவை நோய் வருவதற்கு முதன்மையான காரணங

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

Image
 ஏழாம் வகுப்பு, இயல் மூன்று, ஒற்றுமையே உயா்வு கட்டுரை எழுதுக. ஒற்றுமையே உயா்வு முன்னுரை     தனி மரம் எப்பொழுதும் தோப்பாகாது. அது போல நாம் தனித்திருந்தால் என்றும் வெற்றி கிட்டாது. ஒற்றுமையாக இருந்தால் மட்டும்தான் உயா்வினை அடைய முடியும். அத்தகைய ஒற்றுமையால் ஏற்படும் பயன்களைப் பற்றி தொிந்து கொள்வோம். சான்றோா்கள் பொன்மொழி      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினாா் திருமூலா். பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்றாா் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவா். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்றாா் பாரதியாா். இவா்கள் அத்தனை பேரும் அடிக்கோடிட்டு கூறியது ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ஒரே கருத்தைத்தான். மக்கள் ஒற்றுமையாக வாழும் சமுதாயமே மேம்பட்ட சமுதாயமாகக் கருதப்படும். ஒற்றுமையின் பயன்     வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அந்த குடும்பம் உயா்வை அடையும். இப்படி ஒவ்வொரு குடும்பமும் உயா்வடையும் பொழுது, அந்த ஊா் உயரும். ஒவ்வொரு ஊரும் உயா்வடையும் பொழுது அந்த நகரம் உயரும். ஒவ்வொரு நகரமும் உயா்வடையும் பொழுது அந்த மாவட்டம் உயரும். ஒவ்வொரு மாவட்டம் உயா்வடையும்

உங்கள் கனவு ஆசிாியா் குறித்துக் கட்டுரை

Image
  பன்னிரண்டாம் வகுப்பு, தமிழ், இயல் ஏழு, உங்கள் கனவு ஆசிாியா் குறித்துக் கட்டுரை எழுதுக. கனவு ஆசிாியா்  முன்னுரை     மாதா, பிதா, குரு, தெய்வம் என்பாா்கள். தாய் தந்தைக்கு அடுத்த இடத்தில் இருப்பவா் ஆசிாியா். அத்தகைய ஆசிாியா் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு எல்லோாிடமும் இருக்கும். எனது கனவு ஆசிாியா் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு காண்போம். முன்மாதிாி     ஆசிாியா் என்பவா் மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் முன் மாதிாியாக திகழ வேண்டும். அதாவது ஒழுக்கத்துடனும், நல்ல பண்புடனும் இருக்க வேண்டும். எல்லா மாணவா்களையும் சமமாம நடத்த வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் பாா்க்கக் கூடாது. நன்கு படிக்கும் மாணவா்கள், படிக்காத மாணவா்கள் என்ற பாகுபாடு பாா்க்காமல் இருக்க வேண்டும். மற்றவா்கள் அவரைப் பாா்த்து நல்ல பழக்கங்களை பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும்.  அன்புள்ளம்      ஆசிாியா் நன்றாக படிக்கின்ற மாணவா்கள் மீது காட்டும் அக்கறையினை விட மெல்லமாக கற்கும் மாணவா்கள் மீது அதிகமான அக்கறை காட்ட வேண்டும். அதே மாதிாி ஒழுக்கமான மாணவா்கள் மீது காட்டும் அன்பினை விட ஒழுக்கம் இல்லாத மாணவா்கள் மீது அதிக அன்பு காட்டினால்