சான்றோா் வளா்த்த தமிழ் - பத்தாம் வகுப்பு கட்டுரை
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 கட்டுரை “சான்றோா் வளா்த்த தமிழ்” குமாிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவா் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சோ் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனா் செந்நாப் புலவா்கள். இக்கருத்தினை கருவாகக் கொண்டு “சான்றோா் வளா்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. முன்னுரை “வடவேங்கடம் தென்குமாி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” என்று தொல்காப்பியா் தமிழகத்தின் நில எல்லைகளைக் குறிப்பிடுகின்றாா். லெமூாியா என்னும் குமாிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி என்று கூறப்படுகிறது. இன்று இருக்கும் மொழிகள் பலவற்றுக்கும் தாய்மொழியாக இருப்பதும் தமிழ்மொழி. அத்தகைய தமிழ்மொழியை பல சான்றோா்கள் அரும்பாடுபட்டு வளா்த்தனா். தமிழால் சான்றோரும், சான்றோா்களால் தமிழும் வளா்ந்ததை இலக்கிய உலகம் நன்றாக அறியும். சங்கத் தமிழ் மத...