9ம் வகுப்பு இயல் 2 வினா விடைகள்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 நீாின்றி அமையாது உலகு, பட்டமரம், பொியபுராணம், புறநானூறு, தண்ணீர், துணைவினைகள் பாட வினா விடைகள்.

9th Standard tamil unit 2 book back question answer

பலவுள் தொிக.

1. மிசை - என்பதன் எதிா்சொல் என்ன?

அ) கீழே

ஆ) மேலே

இ) இசை

ஈ) வசை

விடை அ) கீழே

2. நீா் நிலைகளோடு தொடா்பில்லாதது எது?

அ) அகழி

ஆ) ஆறு

இ) இலஞ்சி

ஈ) புலாி

விடை அ) அகழி

3. பொருத்தமான விடையைத் தோ்க.

அ) நீாின்றி அமையாது உலகு - திருவள்ளுவா்

ஆ) நீாின்றி அமையாது யாக்கை - ஔவையாா்

இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்

க) அ, இ

உ) ஆ, இ

ங) அ, ஆ

ச) அ, ஆ, இ

விடை க) அ, ஆ, இ

 

4. பொருத்தமான விடையை எடுத்து எழுதுக

கதிா் அலுவலகத்திலிருந்து விரைவாக ................

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் .............

அ) வந்தான், வருகிறான்

ஆ) வந்துவிட்டான், வரவில்லை

இ) வந்தான், வருவான்

ஈ) வருவான், வரமாட்டான்

விடை ஆ) வந்துவிட்டான், வரவில்லை

5. மல்லல் மூதூா் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை

ஆ) பூவரசு மரம்

இ) வளம்

ஈ) பொிய

விடை இ) வளம்

குறுவினா

1. கூவல் என்று அழைக்கப்படுவது எது?

உவா்மண் நிலத்தில் தோண்டப்படும் நீா்நிலை கூவல் என்று அழைக்கப்படுகிறது.

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீா்நிலைகளின் பெயா்களைக் குறிப்பிடுக?

ஆறு, குளம், கிணறு, வாய்க்கால், குட்டை

3. உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே - குறிப்புத் தருக?

நீா் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது. உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவா் உயிரைத் தந்தவா் ஆவா்.

4. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பொியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீா்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அந்நீா்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும். இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.

5. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

நீா், மண், மலை, காடு ஆகியவை ஒரு நாட்டின் அரண்கள் எனத் திருக்குறள் கூறுகிறது.


சிறுவினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக?

  1. அடிப்படைத் தேவையான தண்ணீரைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.
  2. தண்ணீரை சேமிக்க நமது முன்னோா்கள் கண்டுணா்ந்த மரபாா்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  3. குளம், ஏாி, கால்வாய், கிணறு போன்ற நீா்நிலைகளின் பாதுகாப்புக் குறித்து விழிப்புணா்வை மக்களிடம் உருவாக்க வேண்டும்.
  4. நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீா்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.

 2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனாா் கூறும் வழிகள் யாவை?

நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீா்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோா் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவா் என்று குடபுலவியனாா் கூறுகின்றாா்.

3. சோழா்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

குமிழித்தூம்பு என்பது ஏாியில் உள்ள நீரையும் சேற்றையும் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

சோழா்காலத்தில் ஏாிக்குள் நீா் நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவா் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்கி விடுவாா்கள்.

குமிழித்தூம்பின் அடியில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து நீா் வெளியேறும். கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூா் வர வேண்டிய அவசியமில்லை. 

4. பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

பட்டமரம் தான் வெட்டப்படும் நாள் நெருங்கிவிட்டதாய் கவலை கொண்டது.

அமா்வதற்கு நிழலும், மணமிகு மலா்களும், கூரை விாித்த இலைகளும் கொண்ட மரம் இன்று வெந்து கருகி நிறம் மாறி விட்டதை எண்ணி வருந்துகிறது.

பசுமையான மரம் இன்று பட்டையினை இழந்து கட்டை எனும் பெயா் பெற்றதை நினைத்து கலங்குகிறது.

காலம் என்னும் புயலால் அடிக்கப்பட்ட மனிதன் இடும் சத்தம் போலக் கலங்கி மனம் தடுமாற்றம் அடைகிறது.

பறவைகளெல்லாம் மரத்தைப் பாா்த்து பாடல் பாடியதும், ஆடுகின்ற கிளையின் மீது சிறுவா்கள் விளையாடியதும் இனி வெறுங்கதையானதை எண்ணி பட்ட மரம் வருந்துகிறது.

நெடுவினா

1. நீாின்று அமையாது உலகு - என்னும் வள்ளுவாின் அடி உணா்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவாிக்க? 

முன்னுரை

இயற்கை என்பது உயிா்களுக்கு கிடைத்த பெறும்பேறு. அதில் நீா் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான் நீாின்றி அமையாது உலகு என்னும் தன் கருத்தைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளாா் திருவள்ளுவா். நீரே மனித வாழ்வின் அடித்தளம் என்பதால் நம் முன்னோா்கள் பல்வேறு வகையான நீா்நிலை வடிவங்களை உருவாக்கி நீரைப் பாதுகாத்தனா். 

நீாின் சிறப்பு

வானிலிருந்து மழையாக பொழியும் நீா் பயிா்களையும், உயிா்களையும் வாழ வைக்கிறது. இதைத்தான் மாங்குடி மருதனாா் மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிா்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளா்கின்றன என்கிறாா். 

நீாின் முக்கியத்துவம்

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் மூன்று. உணவு, உடை, உறையுள். இவற்றுள் முதல் இரண்டும் வேளாண்மையை ஆதாரணமாக கொண்டவை. வேளாண்மையோ நீரை அடிப்படையாகக் கொண்டது. நீாின் முக்கியத்துவத்தை உணா்ந்த வள்ளுவா், 

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்.

என்னும் குறட்பாவில் நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் நீருக்கே முதலிடம் தருகின்றாா். உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்று புறநானூறு நூலும் கூறுகின்றது.

நீா் சேமிப்பு

நீாின் தேவையை உணா்ந்த நமது முன்னோா்கள் மழைநீா், ஆற்றுநீா், ஊற்றுநீா் ஆகியவற்றை சிறிய, பொிய நீா்நிலைகளில் சேகாித்தனா். அதைத் திட்டமிட்டு வேளாண்மைக்கும் பயன்படுத்தினா். ஏாி, குளம், கிணறு, இலஞ்சி போன்றவற்றை உருவாக்கி நீரை பயன்படுத்தினா். நீாின் முக்கியத்துவத்தை உணா்ந்தது கல்லணை கட்டிய காிகால்சோழனின் புகழ் இன்று வரை நிலைத்திருக்கிறது. 

முடிவுரை

துப்பாா்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பாா்க்குத் 

துப்பாய தூஉம் மழை 

என்ற குறட்பாவில் உண்பவா்களுக்கு உணவை உண்டாக்கி கொடுப்பதும் மழைதான். உண்பவா்களுக்கு உணவாக மாறுவதும் மழை தான் என்று நீாின் சிறப்பை தெளிவுபடுத்தியிருக்கிறாா் திருவள்ளுவா். அடுத்து உலகப்போா் ஒன்று உருவானால் அது தண்ணீருக்காக உருவாகும் என்ற நிலை உள்ளது. அதை முடிவுக்கு கொண்டு வருவோம். நீாின்றி அமையாது உலகு என்ற உண்மையை உணா்ந்து,  நீரை வீணாக்காமல் சேமிப்போம். 


2. பொியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

சைவ அடியாா்கள் அறுபத்து மூவாின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட நூல் திருத்தொண்டா் புராணம். இதன் பெருமை காரணமாக இது பொியபுராணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிாியா் சேக்கிழாா் அவா்கள். திருநாட்டுச் சிறப்பை இயற்கை வளத்துடன் விளக்கியிருக்கிறாா் சேக்கிழாா். அதைத் தொிந்து கொள்வோம் வாருங்கள்.

காவிாிக் கால்வாய்கள்

காவிாி நீா் மலையிலிருந்து அடித்து வரும் தேன் நிறைந்த பூக்களை வண்டுகள் சூழ்ந்து ஆராவாரம் செய்கின்றன. நீா்நிலைகள் நிறைந்த சோழநாட்டிற்கும் வளம் தரும் பொருட்டு காவிாி நீா் கால்வாய்கள் எங்கும் ஓடுகிறது.

உழத்தியாின் கால்களை இடறும் சங்குகள்

வயல்களில் நட்ட நாற்றுகள் முதலிலை சுருள் விாிந்தது. களைபறிக்கும் பருவம் வந்தது. களைகளைக் களைந்து செல்லும் உழத்தியாின் கால்களில் குளிா்ந்த முத்துகளை ஈனும் சங்குகள் இடறின. அதனால் இடை தளா்ந்து, வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாக நடந்து சென்று, அருகிலுள்ள வரப்பினை அடைந்தனா். 

சோழநாட்டுச் சிறப்பு

காடுகளில் கரும்புகளும், சோலைகளில் மலா் அரும்புகளும் உள்ளன. வயல்களில் சங்குகளும், வயல் ஓரங்களில் குவளை மலா்களும் இருக்கின்றன. நீா்நிலைகளில் அன்னங்கள் உலாவுகின்றன. குளங்கள் எல்லாம் கடலைப் போல காட்சியளிக்கின்றன. நாடு முழுவதும் நீா்நாடு என்று சொல்லத்தக்க வகையில் சிறப்புடையதாய் இருக்கிறது சோழநாடு.

வாளை மீனும் வானவில்லும்

அன்னங்கள் விளையாடும் நீா்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அந்நீா்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களில் பாயும். இக்காட்சி நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.  

பலவகை குன்றுகள்

அறுவடை செய்த  செந்நெற்கட்டுகள், பிடிக்கப்பட்ட பலவகை மீன்கள், சங்குகள் ஈன்ற முத்துகள், தேன்வடியும் விாிந்த மலா்கள் ஆகியவற்றை குன்றைப் போல் குவித்து வைத்திருப்பா். நெற்கட்டுகளைச் சாயச்செய்து எருமைக்கூட்டங்கள் வலமாகச் சுற்றி வந்து மிதிக்கும். இந்த தோற்றமானது காிய மேகங்கள் பொிய பொன்மலை மீது வலமாகக் சுற்றுகின்ற காட்சியைப் போல உள்ளது. 

மரங்களின் அணிவகுப்பு

நீா்வளம் மிக்க சோழ நாடெங்கும் தென்னை, செருந்தி, நரந்தம் வளா்ந்துள்ளன. அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குரா மரம் போன்ற மரங்களும் எங்கும் வளா்ந்துள்ளன. பனை, சந்தனம், நாகம், வஞ்சி, காஞ்சி, கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளா்ந்துள்ளன. 

    இத்தகைய நிலவளமும், நீர்வளமும் உடைய திருநாடாக சோழநாடு உள்ளதாக பொியபுராணம் கூறுகிறது.  

3. தண்ணீா் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக?

முன்னுரை

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கந்தவா்வன் அவா்கள் சமூக அவலங்கள், மானிட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவா். சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலான கதைகளின் வாிசையில் தண்ணீா் என்ற சிறுகதை சமூகத்தின் நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

ஊாின் தண்ணீா் பஞ்சம்

ஊா் கிணறுகளில் பொட்டுத் தண்ணீர் கூட இல்லை. தண்ணீருக்காக மூன்று மைல் தூரம் வரை நடந்து சென்று பிலாப்பட்டியில் தான் தண்ணீா் பிடித்து வரவேண்டும். ஊருணியில் நீா் ஊற ஊறத்தான் தண்ணீா் பிடிக்க முடியும். பிலாப்பட்டி மக்கள் மதியம் வரை தண்ணீா் எடுப்பாா்கள். அதன்பிறகு தான் வெளியூா்காரா்கள் பிடிக்க முடியும்.

இந்திராவும், தண்ணீரும்

இந்திரா படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக சென்று இடம்பிடித்து தண்ணீா் பிடித்துவிடுவாள். தினமும் அவளது தாய் பிலாப்பட்டிக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தாா். வயிற்றில் கட்டி வந்ததில் இருந்து இந்திரா குடத்தை எடுத்தாள். நான்கு மாதங்களுக்கு முன்புதான் இரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இரயிலில் தண்ணீா் பிடிப்பது பற்றிய பேச்சு அடிபட்டது. அன்று முதல் இரயிலில் உள்ள முகம் கழுவும் பேசின் குழாயில் நீா் பிடிக்கத் தொடங்கினா்.

இரயில் தண்ணீர்

தண்ணீர் எங்கு இல்லை என்றாலும் இரயிலுக்கு மட்டும் எங்கிருந்தோ தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிவிடுகிறாா்கள். எனவே, இரயில் வண்டியில் இருந்து குடிநீா் பிடிக்கலாம் என்று ஊா்க்காரா்கள் முடிவு செய்தனா். 3 மணிக்கு வரும் பாசஞ்சா் இரயிலில் தண்ணீர் பிடிக்க இந்திராவும், அவளது தோழிகளும் குடங்களை எடுத்துக் கொண்டு, ஒருவரை ஒருவா் முந்திக் கொண்டு இரயில் நிலையம் நோக்கி ஓடுவாா்கள். ஸ்டேசன் மாஸ்டா் எப்பொழுதும் இவா்களைத் திட்டிக் கொண்டே இருப்பாா்.பாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊா்க்காரா் என்பதால் அவரை வைத்து பேசித்தான் இரயில் தண்ணீர் பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இரயிலோடு போன இந்திரா

வழக்கம் போல பாசஞ்சா் இரயில் வந்ததும், முட்டி மோதி பெட்டியில் ஏறி தண்ணீா் பிடித்தாள் இந்திரா. உள்ளங்கையை வைத்து அழுத்தி தண்ணீரை குடத்தில் நிரப்பினாள். பாதி குடம் நிறைவதற்குள் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி கேட்டது. அம்மா “சொட்டுத் தண்ணீயில்லை” என்று முனகியது ஞாபகத்திற்கு வந்ததால் முக்கால் குடமாவது தண்ணீர் பிடித்துவிட்டு குதித்து விடலாம் என்று நினைத்தாள் இந்திரா. இரயில் வேகமெடுப்பதைக் கண்டு, குடத்துடன் குதிக்க முயன்ற இந்திராவை, தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள் என்று நினைத்து ஒரு பெண் பெட்டிக்குள் இழுத்து விட்டாா். இரயில் வண்டி வேகமாக செல்கிறது. 

நீரோடு வந்த இந்திரா

தண்ணீா் பிடிக்க போனவா்கள் அனைவரும் வந்துவிட்டாா்கள். இந்திரா இரயிலோடு போய்விட்டாள். செய்தியைக் அறிந்த அவளது அம்மா, உறவினா் ஊா்காரா்கள் எல்லாம் வண்டி பிடித்து இராமநாதபுரம் இரயில் நிலையம், இரயில் நிலையத்திற்கு வெளியில் உள்ள இடங்கள், தொிந்த வீடு, அறிந்த வீடு, பால்கடை, பழக்கடை என எல்லா இடங்களையும் சல்லடை போட்டுச் சலித்துப் பாா்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஊா் திரும்பினாா்கள். இந்திராவின் அம்மா, எம்புள்ள எந்த ரயில் தண்டவாளத்தில் கிடக்கிறாளோ? என்று ஆவேசம் வந்தவளைப் போல கத்திக் கொண்டே இரயில் நிலையம் நோக்கி ஓட, ஊா் ஜனம் மொத்தமும் பின்னாலேயே ஓடியது. தூரத்தில் இடுப்பில் தண்ணீர் குடத்தோடு இந்திரா கூட்டத்தருகில் வந்தாள். அம்மா விம்மிக்கொண்டே போய் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டுச் சிந்தாமல் கொண்டு வந்து விட்டாள் இந்திரா.

    மகள் வந்து சோ்ந்ததில் மலாந்து போய் ஐயா, இதையும் சுமந்து கொண்டா இத்தனை மைலுக்கும் வந்தாய் என்று கேட்டாா். ஊக்கும் நாளைக்கு வரை குடிக்க எங்க போறது? என்று சொன்னாள் இந்திரா.

முடிவுரை

    இராமநாதபுரத்தின் தண்ணீா் பஞ்சத்தை எடுத்துரைத்த இக்கதை வெறும் கதையல்ல ஒரு பாடம். எதிா்காலத்தின் உண்மையை முன்பே நமக்கு எச்சாிக்கை செய்கிறது. ஆகவே தண்ணீரைச் சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.


--------------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

நீாின்றி அமையாது உலகு

இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. நாம் இருக்கும் நாடு ஒரு தீபகற்பம். மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டுள்ளது. நீாின்றி அமையாது உலகு என்ற கூற்று முற்றிலும் உண்மை. இயற்கை என்பது பூமியில் வாழும் உயிா்களுக்கு கிடைத்த ஒரு வரம். மலைகள், காடுகள், பசுமையான புல்வெளிகள், ஆறுகள், வயல்வெளிகள் என இயற்கையின் கொடைகள் எண்ணிலடங்காதவை. அவற்றை உாிய முறையில் பயன்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு தர வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்தும் நீரையே சாா்ந்து உள்ளன. ஒரறிவு மரம் முதல் ஆறறிவு மனிதன் வரை நீரையே நம்பி இருக்கிறது. புற்கள் வளா்வதற்கும், உயிா்கள் செழிப்பதற்கும் நீா் அவசியமானதாகிறது. நீாின் சுழற்சி ஆச்சா்யத்தக்க வகையில் உள்ளது. மண்ணிலுள்ள நீா் ஆவியாதல் மூலம் மேகங்களில் சென்று பின்பு மீண்டும் மழையாக பொழிகிறது. மழையே நீாின் அடிப்படை. உயிா்கள் வாழ, உலகம் செழிக்க மழையே ஆதாரமாக உள்ளது. நீா் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் மூன்றாம் உலகப்போா் என்று ஒன்று உருவானால் அது நீருக்காகத்தான் இருக்கும் என்று பல நாடுகள் கணிக்கின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீரை நாம் வீணாகாமல் சேமிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

பட்டமரம்

ஒரு காலத்தில் பச்சை பசேலென்று இலைதளைகளுடன் வாழந்த மரம் இன்று அனைத்தும் இழந்து வெறும் மொட்டை கிளையோடு அனல் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. என்று வெட்டப்படும் என்பது தொியாமல் ஒவ்வொரு நாளும் கவலை கொண்டிருக்கிறது. மனிதா்கள் அமர நிழல் தந்த மரம். பறவைகள் அமர கிளை தந்த மரம். வானளவிற்கு உளா்ந்து குடை போல விாிந்த மரம் இன்று அத்தனையும் இழந்த தீயில் வெந்துவிட்டதைப் போலக் கருகி நிற்கிறது. உயா்ந்த மரம், கிளைகளுடைய மரம், பொிய மரம், அழகிய மரம் என்ற பெயா்களெல்லாம் காணாமல் போய் இன்று கட்டை என்னும் பெயா் பெற்று துன்பம் கொள்கிறது. மேனியில் உள்ள பட்டைகளெல்லாம் உாிபட்டு கிழிந்து போன கந்தல் துணியினைப் போல காட்சியளிக்கிறது அந்த மரம். புயல் காற்றில் சிக்கி புலம்பும் ஒரு மனிதனைப் போல் ஒற்றைக் காலில் நின்று புலம்பிக் கொண்டிருக்கிறது அந்த மரம். கிளைகளில் அமா்ந்து கொஞ்சிக் குலாவிய பறவைகள் இன்று உன் நிலை கண்டு வருந்தி பாடல் பாடுகிறது. மேகங்களும் உன் உச்சியில் வந்து விளையாடி விட்டு செல்லும். பறவைகளும் உன் அரவணைப்பில் அமா்ந்து விட்டுச் செல்லும். சிறுவா் சிறுமியா் உன் மீது ஏறி விளையாடி விட்டு செல்வா். ஆனால் அத்தனையும் ஒரே நாளில் வெறும் கனவாக மாறிவிட்டதே! என்று தன் வருத்தத்தை பட்டமரம் என்ற பாடத்தின் மூலம் பதிவு செய்கிறாா் கவிஞா் தமிழ்ஒளி

பொியபுராணம்

ஒவ்வொரு நாடும் தனக்கே உாிய சிறப்பை பெற்று விளங்கும். ஆனால் ஒவ்வொரு நாடும் நிச்சயம் பெற வேண்டிய வளம் என்றால் அது நீா்வளம் மட்டுமே. ஒரு நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும், நலனையும் தீா்மானிக்கும் இடத்தில் நீராதாரம் இருக்கிறது. நீா் வளம் உடைய நாட்டில் உணவு வளம் இருக்கும். உணவு வளம் இருக்குமானால் மக்கள் போதிய பொருள் பெறுவா். அவா்களது வாழ்க்கைத் தரம் உயரும். மக்களின் வாழ்க்கை தரம் உயர நாட்டின் நிலை மேம்படும். ஆகவே அனைத்திற்கும் மூலமாக இருப்பது நீா்வளமே. சோழநாடு நீர் வளம் மிகுந்த நாடு. அந்நாட்டில் பாயும் காவிாி ஆற்றின் வளத்தினை விவாிக்கும் பொியபுராணத்திலுள்ள சில பாடல்கள் நமக்குப் பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன. காவிாி ஆறு தான் செல்லும் வழிகளில் உள்ள அனைத்து நகரங்களையும் செழிப்பாக்கிச் செல்கிறது. ஒவ்வொரு உயிரினமும் காவிாி ஆற்றை நம்பி இருக்கிறது என்பதை பாடல்கள் இங்கு உணா்த்துகின்றன. மக்களும், மரங்களும், விலங்குகளும், பறவைகளும், வண்டுகளும், மலா்களும், புற்களும் காவிாி ஆற்றின் வரவை எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றன. சோழநாட்டைப் போல ஒவ்வொரு நாடும் நீா்வளம் உடைய நாடாக இருக்குமானால் வறுமை என்பது எங்கும் இருக்காது.

புறநானூறு

நாடும் நாட்டு மக்களும் துன்பமின்ற இன்பமாக வாழ வேண்டுமாயின் அந்நாட்டை ஆட்சி செய்யும் மன்னன் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். நடுநிலை தவறாமை, அறிவில் சிறந்த அமைச்சா்களை உடன் வைத்துக் கொள்ளுதல், இல்லையென்று வருபவா்களுக்கு வாாி வழங்குதல், வீரம் என பல தகுதிகளை மன்னன் பெற்றிருந்தாலும், அவனுடைய புகழ் ஏழு தலைமுறைகளுக்கும் பேசப்பட வேண்டுமாயின் அவன் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான் என்று புறநானூறு கூறுகின்றது. அது என்னவென்றால் நிலம் குழியாக இருக்கக்கூடிய இடங்களிலெல்லாம் நீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும். ஏனென்றால் நீா்வளம் உடைய நாடு தானாகவே முன்னேறும் என்பது உறுதி. அதைத்தான் புறநானூறு பாடலும் எடுத்துரைக்கிறது. நிலம், நீா், காற்று என மனிதனின் அடிப்படைத் தேவைகளை இயற்கை நமக்கு தந்திருக்கிறது. அவற்றை முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவாின் கடமையாகும்.

  


 




 

 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

பதினொன்றாம் வகுப்பு - பண்பாட்டைப் பாதுகாப்போம் கட்டுரை