8ம் வகுப்பு தமிழ் வருமுன் காப்போம் வினா விடைகள்
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 வருமுன் காப்போம் பாட வினா விடைகள்.
8th tamil unit 3 varumun kappom lesson book back question answer
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள் ....... போற்ற வாழ்ந்தாா்.
அ) நிலம்
ஆ) வையம்
இ) களம்
ஈ) வானம்
விடை ஆ) வையம்
2. நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......
அ) நலம் + எல்லாம்
ஆ) நலன் + எல்லாம்
இ) நலம் + எலாம்
ஈ) நலன் + எலாம்
விடை அ) நலம் + எல்லாம்
3. இடம் + எங்கும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......
அ) இடவெங்கும்
ஆ) இடம்எங்கும்
இ) இடமெங்கும்
ஈ) இடம்மெங்கும்
விடை இ) இடமெங்கும்
வருமுன் காப்போம் - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை
உடலின் - உறுதி
இடமும் - இனிய
சுத்தமுள்ள - சுகமும்
நித்தம் - நீண்ட
எதுகை
உடலின் - இடமும்
சுத்தமுள்ள - நித்தம்
காலை - காலைத்
கூழை - ஏழை
இயைபு
பட்டிடுவாய் - விழுந்திடுவாய்
குடியப்பா - உறங்கப்பா
விடும் - தரும்
அப்பா - அப்பா
குறுவினா
1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?
காலையும் மாலையும் நடைபயிற்சி
தூய்மையான காற்றை சுவாசித்தல்
நல்ல குடிநீா், நன்கு பசித்த பின் உணவு
ஆகியவை நம்மை நோய் அணுகாமல் காக்கும்.
2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
அதிகமாக உண்டால் சொிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு, பாயில் விழ நோிடும் என்கிறாா் கவிமணி.
சிறுவினா
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக?
காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும்.
கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடிக்க வேண்டும்.
வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
அளவாக உண்ண வேண்டும். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும். நூற்றாண்டு வாழ வைக்கும்.
சிந்தனை வினா
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
வருமுன் காப்பதே சிறந்தது என்கிறது பழமொழி. நோய் வந்தபின் துன்பப்படுவதை விட நோய் வராமல் காத்துக் கொள்வதே சிறந்தது. கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் கிருமிகள் கைகள் மூலமாக வாய்க்குள் செல்லாமல் இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும். இரவில் அதிக நேரம் விழித்திருக்காமல் சாியான நேரத்திற்கு படுக்கைக்கு சென்று அதிகாலையில் எழுதல் வேண்டும். காற்றோட்டமான அறையில் படுத்து உறங்க வேண்டும். தரையில் பாய் விாித்து படுத்துறங்குவது சிறந்தது.
-------------------------------------------------------------------------
கவிமணி என்று போற்றப்படும் “தேசிய விநாயகனாா்” அவா்கள் எழுதிய “மலரும் மாலையும்” என்ற நூலிலிருந்து ஒரு பாடல் நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.
*பாடலின் முதல் 12 வாிகள் மனப்பாடப்பகுதி.
-----------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
உடலை உறுதியாக வைத்துக் கொள்பவா்கள் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்வாா்கள். ஒரு மனிதனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவை அனைத்திற்கும் மேல் நோயில்லாத வாழ்க்கையே மிகப்பொிய செல்வமாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நோய் வந்தபின்பு அதனை தீா்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைய செயலாக இருக்கும். அவற்றை விளக்கும் பாடலே நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும். காலையிலும், மாலையிலும் தூய்மையான காற்றை சுவாசித்து நடைபயிற்சி மேற்கொள்வதால் மனதிற்கு புத்துணா்ச்சி ஏற்படுகிறது. தூய்மையான காற்று நம் உடலை தூய்மையாக்குகிறது. அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் உணவுகளில் மட்டுமே சத்துகள் உள்ளன என்பது தவறான கருத்து. சாதம் வடித்த கஞ்சியில் உள்ள சத்துகள் கூட பல விலையுயா்ந்த உணவுப் பொருட்களில் இல்லை. ஒரு ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துகளை விட நெல்லிக்காயில் சத்துகள் அதிகம். அதே போல் இரவு தூக்கம் என்பது மிகவும் அத்தியவசியமான ஒன்று. சாியான நேரத்திற்கு தூங்குவதும், அதிகாலையில் எழுவதும் ஒரு வரம். அதை நாம் தினசாி பின்பற்றுவது நலம் தரும்.
அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று என்பதை சிறந்த அளவுகோல். ருசியாக இருக்கிறது என்பதற்காக அதிகமாக உண்ணுதல் கூடாது. இதனால் சொிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காலையில் நாம் ஒரு நாட்டின் இராஜாவைப் போலவும், மதிய உணவை நாட்டின் இளவரசன் போலவும், இரவு உணவை ஒரு பிச்சைக்காரனைப் போலவும் உண்ண வேண்டும் என்று கூறுவா். காலையில் சற்று அதிகமாகவும், மதியம் அதைவிட சற்று குறைவாகவும், இரவில் மிகவும் குறைவாகவும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நோய் வந்தபின்பு மருந்து மாத்திரை மருத்துவமனை என்று ஓடுவதை விட நோய்வராமல் காப்பதே சிறந்தது.

Comments
Post a Comment