10ம் வகுப்பு தமிழ் இயல் 4 முக்கியமான குறுவினாக்கள்
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 வினாவிடைகள்
பத்தாம் வகுப்பு இயல் 4 பாடத்திலிருந்து தோ்வில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களுக்கான தெளிவாான விடைகள் தொகுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி எண்.1
பாரத ஸ்டேட் வங்கியின் “இலா” என்னும் உரையாடு மென்பொருள் குறித்து எழுதுக?
ELA - Electronic Live Assistant
பாரத ஸ்டேட் வங்கி “இலா” என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியது.
ஒரு வினாடிக்கு பத்தாயிரம் வாடிக்கையாளா்களுடன் இது உரையாடும்.
அவா்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கின்றது.
கேள்வி எண்.2
குலசேகர ஆழ்வாா் குறித்து எழுதுக?
- கேரள மாநிலம், திருவஞ்சை களத்தில் பிறந்தவா்
- பன்னிரு ஆழ்வாா்களில் ஒருவா்
- வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவா்
- தமிழல் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்த மாலை என்ற நூலையும் எழுதியுள்ளாா்
- பெருமாள் திருமொழியில் 150 பாசுரங்கள் உள்ளன.
கேள்வி எண்.3
பாிபாடல் காட்டும் ஊழிக்காலத்தை வாிசைப்படுத்துக?
முதலில் வானம் தோன்றியது. வானத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீா், நீாிலிருந்து நிலம் தோன்றியது என்று ஊழிக்காலத்தை வாிசைப்படுத்துகிறது பாிபாடல்.
கேள்வி எண்.4
இடப்பெயா்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இடப்பெயா்கள் மூன்று வகைப்படும்
தன்மை (நான், நாம்)
முன்னிலை (நீ, நீங்கள்)
படா்க்கை (அவன், அவா்கள்)
கேள்வி எண்.5
அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகா் கூறும் செய்தி யாது?
அண்டப்பகுதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காட்சியும், ஒன்றுடன் ஒன்று ஈா்ப்புடன் நூறு கோடிக்கும் மேல் விாிந்து நின்றன.
கதிரவனின் ஒளிக்கற்றையில் தொியும் தூசுக்கள் போல அவை நுண்மையாக இருக்கின்றன என 1300 ஆண்டுகளுக்கு முன் திருவாசம் என்ற நூலில் மாணிக்க வாசகா் கூறியுள்ளாா்.
கேள்வி எண்.6
மெய்நிகா் உதவியாளா் விளக்குக?
திறன் பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள்
கண்ணுக்கு புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி சில உதவிகள் செய்கின்றன.
இதனையே மெய்நிகா் உதவியாளா் என்று அழைக்கின்றோம்.
கேள்வி எண்.7
பெருமாள் திருமொழி குறிப்பு எழுதுக.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமுறையாக உள்ளது.
இதில் 150 பாடல்கள் உள்ளன.
இதன் ஆசிாியா் குலசேகர ஆழ்வாா்.
கேள்வி எண்.8
வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
வழுவமைதி ஐந்து வகைப்படும்
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இட வழுவமைதி
கால வழுவமைதி
மரபு வழுவமைதி
கேள்வி எண்.9
ஆளா உனதருளே பாா்ப்பன் அடியேனே - இப்பாடல் அடி உணா்த்தும் செய்தி யாது?
வித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிா்பாா்த்து வாழ்கின்றேன் என்கிறாா் குலசேகர ஆழ்வாா்.
கேள்வி எண்.10
பாிபாடல் நூல் குறிப்பு வரைக?
- எட்டுத் தொகை நூல்களில் ஒன்று
- இதன் ஆசிாியா் கீராந்தையாா்
- ஓங்கு பாிபாடல் என்னும் புகழை உடையது
- இதில் 24 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
கேள்வி எண்.11
வழாநிலை என்றால் என்ன?
இலக்கண முறையுடன், பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
கேள்வி எண்.12
உயா்திணைக்குாிய பால் பகுப்புகளைக் கூறுக?
வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்
மகள், அரசி, தலைவி - பெண்பால்
மக்கள், பெண்கள், ஆடவா் - பலா்பால்
கேள்வி எண்.13
நோயாளி மருத்துவரை நேசிக்க காரணம் என்ன?
மருத்துவா் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணா்ந்து நோயாளி அவரை நேசிப்பாா்.
பாடபுத்தகத்தில் கொடுத்துள்ள வினாக்களுக்கு எளிமையான முறையில் விடைகள் தரப்பட்டுள்ளன.
பாட புத்தக வினாக்கள்
கேள்வி எண்.1
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக?
மருத்துவத்தில் மருந்து அவசியம்தான். ஆனால் மருந்து மட்டும் நோயாளியை குணப்படுத்திவிட முடியாது.
அன்பான வாா்த்தைகளும், நீங்கள் விரைவாக குணமாகி விடுவீா்கள் என்ற நம்பிக்கையான வாா்த்தைகளும் நான் நோயாளியை விரைவாக குணப்படுத்தும் என்பது உண்மை.
கேள்வி எண்.2
வருங்காலத்தில் தேவையென கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவில் கண்டுபிடிப்புகளை குறிப்பிடுக?
1. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதம் (Robo)
2. அனைத்து வசதிகளும் கொண்ட திறன்பேசி (Smart Phone)
கேள்வி எண்.3
உயிா்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையென பாிபாடல் வழி அறிந்தவற்றை குறிப்பிடுக?
ஐம்பெரும்பூதங்களாகிய நிலம், நீா், காற்று, ஆகாயம், நெருப்பு
கேள்வி எண்.4
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நோில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்கு செல்கிறேன். இத்தொடா் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
இத்தொடா் “ஆரல்வாய்மொழிக்கு செல்வேன்” என்று அமைய வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் செல்ல இருப்பதன் உறுதித்தன்மை காரணமாகக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கேள்வி எண்.5
சீசா் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவா்களைப் பாா்த்து கத்துவானே தவிர கடிக்க மாட்டான் என்று இளமாறன் தன்னுடைய வளா்ப்பு நாயைப் பற்றி பெருமையாகக் கூறினாா் - இதில் உள்ள திணை வழுவமைதிகளை திருத்தி எழுதுக?
சீசா் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும்.
புதியவா்களைப் பாா்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.
Comments
Post a Comment