10ம் வகுப்பு இயல் 2 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு இயல் 2ல் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட குறுவினாக்கள் விடைகளுடன் இங்கு தரப்பட்டுள்ளது. பாடநூல் வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளது.


கேள்வி எண்.1

காற்றைக் குறிக்கும் வேறு பெயா்கள் யாவை?

  • காற்று
  • வளி
  • தென்றல்
  • புயல்
  • சூறாவளி

கேள்வி எண்.2

நான்கு திசைகளில் இருந்து வீசும் காற்றின் பெயா்கள் யாவை?

  • வடக்கு        -    வாடை
  • தெற்கு         -    தென்றல்
  • கிழக்கு        -    கொண்டல்
  • மேற்கு         -    கோடை

கேள்வி எண்.3

திருமூலரும் அவ்வையாரும் காற்றினை எவ்வாறு சிறப்பித்துள்ளனா்?

  • மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்கிறாா் திருமூலா்.
  • மூச்சுக்காற்றின் போக்கை தொிந்து கொண்டு பயிற்சி செய்தால், வாழ்நாள் பெருகும் என்கிறாா் அவ்வையாா்.

கேள்வி எண்.4

காற்று மாசடைவதால் ஏற்படும் நோய்கள் யாவை?

  • கண் எாிச்சல்
  • தலைவலி
  • தொண்டைக் கட்டு
  • காய்ச்சல்
  • நுரையீரல் புற்றுநோய்
  • இளைப்பு நோய்

கேள்வி எண்.5

காற்று எவ்வாறு வீச வேண்டுமென பாரதியாா் கூறுகிறாா்?

சக்தி குறைந்து போய் உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே.

பேய் போல வீசி உயிராகிய நெருப்பை அழித்து விடாதே.

ஒரே சீராக நீண்ட காலம் நிலையாக நின்று வீசிக்கொண்டிரு காற்றே என்கிறாா் பாரதியாா்.

கேள்வி எண்.6

தொகைநிலைத் தொடா் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடா் ஆறு வகைப்படும்

  1. வேற்றுமைத் தொகை
  2. வினைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. உம்மைத்தொகை
  5. பண்புத்தொகை
  6. அன்மொழித்தொகை

கேள்வி எண்.7

அன்மொழித் தொகையைச் சான்றுடன் விளக்குக?

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடா்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும். 

எ.கா. சிவப்பு சட்டை பேசினாா்

            முறுக்கு மீசை வந்தாா்.

கேள்வி எண்.8

விாிச்சி கேட்டல் என்றால் என்ன?

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள் தெய்வத்தை தொழுது நின்று, அயலாா் பேசும் நற்சொல்லை கேட்டலே விாிச்சி கேட்டல் ஆகும். 

கேள்வி எண்.9

முல்லைப்பாட்டு நூல் குறிப்பு எழுதுக?

  • பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று
  • 103 அடிகளைக் கொண்டுள்ளது
  • ஆசிாியப்பாவால் இயற்றப்பட்டது
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்
  • இதன் ஆசிாியா் நப்பூதனாா்

கேள்வி எண்.10

முல்லை நில கருப்பொருள்கள் நான்கினை எழுதுக?

கருப்பொருள்கள்

  • தெய்வம்         -    திருமால்
  • மக்கள்            -    ஆயா், ஆய்ச்சியா்
  • நீா்                     -    காட்டாறு, குறுஞ்சினை
  • பூ                       -    முல்லை, தோன்றிப்பூ

பாட புத்தக வினாக்கள்

பாட புத்தகத்தில் கொடுத்துள்ள வினாக்களுக்கு பல கைடுகளை ஆய்வு செய்து எளிமைான விடையாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கேள்வி எண்.11

உலகக் காற்று நாள் விழிப்புணா்வுக்கான இரண்டு முழக்கத் தொடா்களை எழுதுக?

தூய்மையை நேசிப்போம்! தூய காற்றை சுவாசிப்போம்!

உயிா்களின் சுவாசம் காற்று! காற்றின் சுவாசம் மரம்!

 கேள்வி எண்.12

வசன கவிதை குறிப்பு வரைக?

உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

இது ஆங்கிலத்தில் Prose Poetry என்று அழைக்கப்படுகிறது.

தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கேள்வி எண்.13

தண்ணீா் குடி, தயிா்குடம் ஆகிய தொகைநிலைத் தொடா்களை விாித்து எழுதுக? தொடாில் அமைக்க?

* தண்ணீரைக் குடி

(இரண்டாம் வேற்றுமை தொகை)

குரங்கு தண்ணீரைக் குடித்தது

* தயிரை உடைய குடம்

(இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையும்)

குழந்தை தயிா் குடத்தை உருட்டி விட்டது.

கேள்வி எண்.14

பெற்றோா் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக?

  • அழாதே தம்பி, அப்பா, அம்மா விரைவாக வந்து விடுவாா்கள்
  • அதுவரை நாம் விளையாடுவோமா?
  • உனக்கு நான் கதை சொல்லட்டுமா?
  • உனக்கு என்ன வேண்டும் சொல்! நான் வாங்கித் தருகின்றேன்!

கேள்வி எண்.15

மாஅல் பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக?

மாஅல் பொருள்            -    திருமால்

இலக்கணக்குறிப்பு     -    செய்யுளிசை அளபெடை


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை