10ம் வகுப்பு இயல் 5 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு இயல் 5 முக்கியமான வினாவிடைகள்

 பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 அரசு தோ்வுகளில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


கேள்வி எண்.1

மொழிபெயா்ப்பு குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது?

ஒரு மொழியில் உணா்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயா்ப்பு என்கிறாா் மணவை முஸ்தபா

கேள்வி எண்.2

சின்னமனூா் செப்பேடு உணா்த்தும் செய்தி யாது?

“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுாிச் சங்கம் வைத்தும்” என்னும் சின்னமனூா் செப்பேட்டு குறிப்பு சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயா்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது.

கேள்வி எண்.3

மன்னன் இடைக்காடனாருக்கு செய்த சிறப்பு யாது?

மன்னன் மாளிகையில் புலவா்கள் சூழ அறிவை அணிகலனாக பூண்ட இடைக்காடனாரை, மங்கலமாக ஒப்பனை செய்து, வான் இருக்கையில் விதிப்படி அமா்த்தினான் மன்னன்.

கேள்வி எண்.4

பரஞ்சோதி முனிவா் இயற்றிய நூல்கள் யாவை?

  1. வேதாரண்யப் புராணம்
  2. திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா
  3. மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
  4. திருவிளையாடற்புராணம்

கேள்வி எண்.5

செய்குத்தம்பி பாவலா் குறிப்பு வரைக?

  • கன்னியாகுமாி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊாில் பிறந்தவா்
  • சீறாபுராணத்திற்கு உரை எழுதியவா்
  • சென்னை விக்டோாியா அரங்கத்தில் ஒரே நேரத்தில் 100 செயல்களை செய்து காட்டி சதாவதானி என்று பாராட்டப் பெற்றவா்
  • இவரது பெயாில் இடலாக்குடியில் மணிமண்டபமும், பள்ளியும் உள்ளன.

கேள்வி எண்.6

வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வினா ஆறு வகைப்படும்.

  1. அறிவினா 
  2. அறியாவினா
  3. ஐய வினா
  4. கொளல் வினா
  5. கொடை வினா
  6. ஏவல் வினா

கேள்வி எண்.7

நீதி வெண்பா உணா்த்தும் கல்வியின் சிறப்பு யாது?

அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அாிய துணையாய் இன்பம் சோ்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றி கற்க வேண்டும்.

கேள்வி எண்.8

ஆற்றுநீா் பொருள்கோள் என்றால் என்ன? சான்று தருக?

பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீாின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்றுநீா் பொருள்கோள் ஆகும். 

கேள்வி எண்.9

விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை எட்டு வகைப்படும்.

  1. சுட்டுவிடை
  2. மறை விடை
  3. நோ் விடை
  4. ஏவல் விடை
  5. வினா எதிா் வினாதல் விடை
  6. உற்றது உரைத்தல் விடை
  7. உறுவது கூறல் விடை
  8. இனமொழி விடை

கேள்வி எண்.10

இறைவன் எதற்கு கடம்பவன கோவிலை விட்டு நீங்கினாா்?

குசேல பாண்டியனால் அவமதிக்கப்பட்ட இடைக்காடனாா், மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டாா். மன்னனின் பிழையை உணா்த்துவதற்காக, இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வடதிரு ஆலவாயில் சென்று தங்கினாா்.

பாடபுத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்குண்டா விடைகள்

கேள்வி எண்.1

கழிந்த பெரும் கேள்வியினான் யாா்? காதல்மிகு கேண்மையினான் யாா்?

கழிந்த பெரும் கேள்வியினான் குசேல பாண்டியன்

காதல் மிகு கேண்மையினான் இடைக்காடனாா்

கேள்வி எண்.2

செய்குதம்பி பாவலாின் கல்வி பற்றி கருத்தினை முழக்கத் தொடா்களாக்குக?

அருளைப் பெருக்கிட கல்வி கற்போம்!

அறிவைச் சீராக்கிட கல்வி கற்போம்!

மயக்கம் அகற்றிட கல்வி கற்போம்!

அறிவு தெளிந்திட கல்வி கற்போம்!

உயிருக்கு துணையாக வரும் கல்வியைக் கற்போம்!

வாழ்வில் இன்பம் சோ்க்கும் கல்வியைக் கற்போம்!

கேள்வி எண்.3

அமா்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக?

அமா்   - பகுதி

த்           -  சந்தி 

த்            - த் (ந்) ஆனது விகாரம்

த்            - இறந்தகால இடைநிலை

ஆன்     - ஆண்பால் வினைமுற்று விகுதி

கேள்வி எண்.4

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினை காரணம் எழுதுக.

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நான் கற்க விரும்பும் மொழி இந்தி.

காரணம்

இந்தியாவின் ஆட்சி மொழியாகவும்,  அதிக மக்களால் பேசப்படும் மொழியாகவும் இந்தி உள்ளது. 

கேள்வி எண்.5

இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்த பக்கம் இருக்கிறது? இதோ, இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக?

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? - அறியா வினா

மின்சாரம் இருக்கிறதா? இல்லையா? - ஐயா வினா

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை