10ம் வகுப்பு இயல் 1 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு இயல் 1 அன்னை மொழியே, தமிழ்ச்சொல் வளம், இரட்டுற மொழிதல், எழுத்து, சொல் பாட வினா விடைகள்.

2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1-ல் அதிகம் கேட்கப்பட்ட முக்கியமான குறுவினாக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

முக்கியமான 10 குறுவினாக்களும், பாடபுத்தகத்தில் உள்ள 5 குறுவினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி எண்.1 

பெருஞ்சித்திரனாா் நடத்திய இதழ்கள் யாவை? 

தென்மொழி 

தமிழ்சிட்டு 

தமிழ்நிலம் 

 

கேள்வி எண்.2

 பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

  • அரும்பு    -    (பூவின் தோற்ற நிலை)
  • போது       -    (பூ விாிய தொடங்கும் நிலை)
  • மலா்         -     (பூ மலா்ந்த நிலை)
  • வீ               -     (செடியிலிருந்து பூ கிழே விழுந்த நிலை) 
  • செம்மல் -    (பூ வாடிய நிலை

கேள்வி எண்.3

இரட்டுற மொழிதல் என்றால் என்ன?

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழிதல் எனப்படும்.

இதனை சிலேடை என்றும் அழைப்பா்.

 

கேள்வி எண்.4

தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

  • இலை         -    (புளி, வேம்பின் இலை)
  • தாள்            -    (நெல், புல்லின் இலை)
  • தோகை     -    (சோளம், கரும்பின் இலை)
  • ஓலை         -    (தென்னை, பனையின் இலை)
  • சண்டு       -    (காய்ந்த தாளும், தோகையும்)
  • சருகு         -    (காய்ந்த இலை

 

கேள்வி எண்.5

மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

1. தனிமொழி

2. தொடா்மொழி

3. பொதுமொழி

 

கேள்வி எண்.6

பெருஞ்சித்திரனாா் இயற்றிய நூல்கள் சிலவற்றை எழுதுக?

  1. உலகியல் நூறு
  2. பாவியக்கொத்து
  3. நூறாசிாியம்
  4. கனிச்சாறு
  5. எண்சுவை எண்பது
  6. மகபுகுவஞ்சி
  7. பள்ளிப்பறவைகள்     
 

கேள்வி எண்.7

செய்யுளிசை அளபெடை விளக்குக?

செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தலே செய்யுளிசை அளபெடை என்பா். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவா். 

எ.கா. ஓஒதல், உறாஅா்க்கு, நல்ல படாஅபறை

 

கேள்வி எண்.8

காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களை எழுதுக?

சுள்ளி             -    காய்ந்த குச்சி

விறகு             -    காய்ந்த சிறுகிளை

வெங்கழி     -    காய்ந்த கழி

கட்டை          -    காய்ந்த கொம்பும், கவையும், அடியும்

 

கேள்வி எண்.9

அன்னை மொழியே பாடலில் அமைந்துள்ள விளிச் சொற்களை எழுதுக?

அன்னை மொழியே!

செந்தமிழே!

நறுங்கனியே!

பேரரசே!

தென்னன் மகளே!

மாண்புகழே!

எண்தொகையே!

நற்கணக்கே!

மண்ணுஞ் சிலம்பே!

 

கேள்வி எண்.10

தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?

தாள்        -    நெல், கேழ்வரகின் அடி

தண்டு    -    கீரை, வாழையின் அடி

கோல்     -    நெட்டி, மிளகாய்செடியின் அடி

தூறு        -    குத்துச் செடி, புதாின் அடி

கழி         -    கரும்பின் அடி

கழை     -    மூங்கிலின் அடி

அடி         -    புளி, வேம்பின் அடி

 

பாட புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு உண்டான விடைகள்

கேள்வி எண்.11

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?

ஒரு நிகழ்ச்சிக்காக தொடா்வண்டியில் வந்திறங்கிய தமிழறிஞா் கி.வா.ஜகந்நாதன் அவா்களை மாலையிட்டு வரவேற்றனா். அப்போது அவா் அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே என்றாா். 

 

கேள்வி எண்.12

வேங்கை என்பதைத் தொடா் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக?

வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கிறது (தனிமொழி)

வேம்+கை - வேகின்ற கை எனவும் பொருள் தருகிறது (தொடா்மொழி)

தனிமொழிக்கும், தொடா் மொழிக்கும் பொதுவாய் அமைவதால் பொதுமொழியாகவும் இருக்கின்றது.   

 

கேள்வி எண்.13

மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள ஐம்பெரும் காப்பியங்களின் பெயா்களை எழுதுக?

இடம்பெற்றுள்ள காப்பியங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை

இடம்பெறாத காப்பியங்கள்

சீவகசிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

 

கேள்வி எண்.14

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடா்களில் சாியான தொடா்களை சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடாிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக. 

சாியான தொடா்கள்

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

பிழையான தொடா்

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

பிழைக்கான காரணம்

பல சீப்பு வாழைப்பழங்கள் சோ்ந்ததுதான் ஒரு தாறு. ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் இருக்காது. 

 

கேள்வி எண்.15

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறா்மேல் 

வடுக்கண் வற்றாகும் கீழ்

இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக?

இக்குறளில் அமைந்துள்ள அளபெடை இன்னிசை அளபெடை

இலக்கணம்

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். 

 ------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.