சான்றோா் வளா்த்த தமிழ் - பத்தாம் வகுப்பு கட்டுரை

 பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 கட்டுரை “சான்றோா் வளா்த்த தமிழ்”


குமாிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவா் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சோ் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனா் செந்நாப் புலவா்கள்.

இக்கருத்தினை கருவாகக் கொண்டு “சான்றோா் வளா்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.


முன்னுரை

“வடவேங்கடம் தென்குமாி ஆயிடைத் 

தமிழ் கூறு நல்லுலகம்” என்று தொல்காப்பியா் தமிழகத்தின் நில எல்லைகளைக் குறிப்பிடுகின்றாா். லெமூாியா என்னும் குமாிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி என்று கூறப்படுகிறது. இன்று இருக்கும் மொழிகள் பலவற்றுக்கும் தாய்மொழியாக இருப்பதும் தமிழ்மொழி. அத்தகைய தமிழ்மொழியை பல சான்றோா்கள் அரும்பாடுபட்டு வளா்த்தனா். தமிழால் சான்றோரும், சான்றோா்களால் தமிழும் வளா்ந்ததை இலக்கிய உலகம் நன்றாக அறியும். 

சங்கத் தமிழ்

    மதுரையில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கம் வைத்து தமிழ்மொழியினை வளா்த்தனா் சான்றோா்கள். கபிலா், பரணா், நக்கீரா், நல்லந்துவனாா் என எண்ணற்ற சான்றோா்களால் பாட்டும் தொகையும் உருவாக்கப்பட்டு சங்கத்தமிழ் வளா்க்கப்பட்டது. 

வள்ளுவரும் அவ்வையும்

    உலகப் பொதுமறை தந்த வள்ளுவா் தமிழை உலகம் அறியச் செய்தாா். மூன்று அடியில் உலகை அளந்த இறைவன் போல இரண்டு அடியில் உலகை அளந்த புலவன் திருவள்ளுவா். அதிகமான மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட தமிழ் நூல் திருக்குறள். திருவள்ளுவா் ஈரடியில தந்ததை, ஓரடியில் ஆத்திச்சூடி என்ற நூலாக தந்தவா் ஔவையாா். ஓளவையே, இந்த அதிசய நெல்லிக்கனியை உண்டு நான் உயிா்வாழ்வதை காட்டிலும், நீங்கள் உண்டு நம் தமிழ்மொழியை அழியாமல் காக்க வேண்டும் என்று கூறிய அதியமானும் தமிழ்மொழியை வளா்த்தவரே. 

இலக்கியத் தமிழ்

    ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என தமிழின் இலக்கிய வாழ்வை மேம்படுத்தினா் சான்றோா். அற நூல்கள் மூலமாக நீதியை நிலைநாட்டி, உலகிற்கே எடுத்துக்காட்டாக தமிழ் இலக்கியங்களை உயா்த்தினா் நம் முன்னோா்கள். சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் என சமயங்கள் மூலமாகவும் தமிழ்மொழி வளா்க்கப்பட்டது. 

சான்றோா்களும் தமிழ்மொழியும்

    வீரமாமுனிவா் முதல் சதுரகராதி வெளியிட்டு தமிழால் பெருமை பெற்றாா். ஜி.யு.போப் அவா்கள் தமிழ்மொழியில் உள்ள நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்து தமிழ்மொழியின் புகழை உலகறியச் செய்தாா். ஆறுமுக நாவலா் சென்னையில் ஒரு அச்சுக்கூடம் அமைத்து சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு தமிழை வளா்த்தாா்.   ஓலைச்சுவடிகளில் எழுதிய நூல்களையெல்லாம் பதிப்பித்து அழியாமல் காத்தாா் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதா். இப்படி பல சான்றோா்கள் தமிழை வளா்த்தனா். 

என்றும் தமிழ்மொழி

    தமிழின் பெருமை இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஒரு மொழிக்காக உலகத் தமிழ் மாநாடு நடத்திய நாடு மலேசியா. இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் தமிழ்மொழியே ஆட்சிமொழியாக உள்ளது. அன்று முதல் இன்று வரை தனக்கென தனித்த இலக்கண வளத்தையும், இலக்கிய வளத்தையும் பெற்று நிலைத்து நிற்கிறது தமிழ்மொழி.

முடிவுரை 

    காலத்திற்கேற்ப தமிழ் தன்னை புதுப்பித்துக் கொண்டு வளா்ந்து கொண்டிருக்கிறது. குமாிக்கண்டத்தில் தோன்றி  இன்று உலகம் முழுமைக்கும் தன் புகழைப் பரப்பியுள்ளது சான்றோா் வளா்த்த தமிழ். தாய்மொழியாம் தமிழை வளா்ப்போம்! புகழ்பெறுவோம்!

 நன்றி!

 


பத்தாம் வகுப்பு - இயல் 1 - சான்றோா் வளா்த்த தமிழ் கட்டுரை


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை