6ம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 - 50 வினாக்கள்

ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இயல் 3ல் உள்ள 

  • ஆசிய ஜோதி, 
  • மனித நேயம், 
  • முடிவில் ஒரு தொடக்கம், 
  • அணி இலக்கணம் மற்றும் 
  • மொழித்திறன் வளர்பயிற்சி 

போன்ற பாடங்களில் இருந்து முக்கியமான 50 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல பயிற்சி மாதிரிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. வினாக்கள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதால் மனதில் நன்கு பதியும். ஆகையால் நன்றாகப் பயிற்சி செய்து, பாடங்களைத் தெளிவாகப் படித்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!

பயிற்சி 1

6th Tamil Term 3 Unit 3

Please fill the above data!
Mark :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

பயிற்சி 2

1➤ அன்னை தெரசாவிற்கு ................க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

=> அமைதி

2➤ தமக்கென முயலா நோன்றாள் - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் .............

=> புறநானூறு

3➤ குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி வழங்கியவர் ...........

=> கைலாஷ் சத்யார்த்தி

4➤ மனிதத்தன்மையற்ற செயல் ..............................தொழிலாளர்களாக மாற்றுவது

=> குழந்தைகளைத்

5➤ குழந்தைகளைக் காப்போம் என்ற அமைப்பு .........................க்காக ஏற்படுத்தப்பட்டது.

=> பள்ளி செல்லா குழந்தைகளுக்காக

6➤ வள்ளலார் தொடங்கியது .........................சாலை

=> சத்திய தருமசாலை

7➤ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் ..............

=> வள்ளலார்

8➤ தலைசிறந்த பண்பாக ஆசியஜோதி குறிப்பிடுவது .................

=> இரக்கம்

9➤ லைட் ஆப் ஆசியா என்ற ஆங்கில நூலின் எழுத்தாளர் .....................

=> எட்வின் அர்னால்டு

10➤ கும்பி என்ற சொல்லின் பொருள் .............

=> வயிறு

11➤ ஆசிய ஜோதியில் உயிர்கொலையைத் தடுத்து நிறுத்தக் காரணமாக அமைந்த செயல் .........................அறிவுரை

=> புத்தரின் அறிவுரை

12➤ மன்னராலும் முடியாத செயலாக ஆசியஜோதி குறிப்பிடுவது .....................எழுப்புவது

=> இறந்த உடலை உயிர் கொடுத்து

13➤ சிறுமியை அம்மா தோழிகளுடன் விளையாட அனுமதிக்காதற்குக் காரணம் .....................பலவீனமாக இருந்ததால்

=> இதயம்

14➤ தானமாக கொடுக்கப்பட்ட ஹிதேந்திரனின் உறுப்பு .................

=> இதயம்

15➤ ஹிதேந்திரன் வாழந்த ஊர் ....................

=> திருக்கழுகுன்றம்

16➤ ஹிதேந்திரன் ...................அணிந்திருந்தால் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.

=> தலைகவசம்

17➤ இதயத்தைத் தந்த இளைஞரின் பெற்றோர்............ர்கள்

=> மருத்துவர்கள்

18➤ நவிற்சி என்பதன் பொருள்..........

=> கூறுதல்

19➤ அணி என்பதன் பொருள்.................

=> அழகு

20➤ லாரி என்ற சொல்லிற்கான தமிழாக்கம் .............

=> சரக்குந்து

21➤ ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையை பாடி அழைத்தார் உன் தாத்தா - இதில் பயின்று வந்துள்ள அணி ........................அணி

=> உயர்வு

22➤ ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது ................அணி

=> இயல்பு நவிற்சி

23➤ தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு, அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி - இதில் பயின்று வந்துள்ள அணி .................... அணி

=> இயல்பு நவிற்சி அணி

24➤ சிறுமிக்கு பொருத்தப்பட்ட இளைஞரின் பெயர் ...............

=> ஹிதேந்திரன்

25➤ எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே ...............

=> மனித நேயம்

26➤ தம் பொருளை கவர்ந்தவரிடமும் .................காட்டியவர் வள்ளலார்

=> அன்பு

27➤ கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் .......................

=> குழந்தைகளைப் பாதுகாப்போம்

28➤ உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக ...............நாடுகளில் ...............கி.மீ தூரம் நடைபயணம் செய்தார் கைலாஷ் சத்தியார்த்தி.

=> 103 நாடுகளில் 80,000 கி.மீ

29➤ சத்திய தருமசாலை நிறுவப்பட்ட இடம் .............

=> வடலூர்

30➤ வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல. மற்றவர் மனதில் வாழும் வரை என்றவர் ....................

=> அன்னை தெரசா

31➤ அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் ................

=> கைலாஷ் சத்யார்த்தி

32➤ .......................டன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

=> மனிதநேயத்துடன்

33➤ புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் .................

=> ஆசிய ஜோதி

34➤ ஒருவர் செய்த ............யும் ............யும் ஒருநாளும் அவரை விட்டுப் போகாது

=> நன்மையும் தீமையும்

35➤ மன்னராலும் முடியாத செயல் ............................எழுப்புவது

=> இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து

36➤ கவிமணி என்ற பட்டம் பெற்றவர் ...................

=> தேசிக விநாயகனார்

37➤ ஆசிய ஜோதி .........................வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்

=> புத்தரின்

38➤ எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் ...................யான வாழ்வை வாழ்பவர்

=> நேர்மையான

39➤ ஒருவர் செய்யக்கூடாதது..................வினை

=> தீவினை

40➤ நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா? - இதில் கும்பி என்பதன் பொருள்

=> வயிறு

41➤ பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப்படும் பாடு முழுதும் அறிந்திலீரோ - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ....................

=> ஆசியஜோதி

42➤ .........................மன்னரின் யாகத்திற்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.

=> பிம்பிசார

43➤ நேரிய உள்ளம் இரங்கிடுமேல் இந்த நீள்நிலம் முற்றுமே அண்டிடலாம் - இதில் நீள்நிலம் என்பதன் பொருள் ................

=> பரந்த உலகம்

44➤ ஆசிய ஜோதி என்ற நூலின் ஆசிரியர்......................

=> தேசிக விநாயகனார்

45➤ லைட் ஆப் ஆசியா என்ற நூலின் ஆசிரியர் .................

=> எட்வின் அர்னால்டு

46➤ உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்றவர் .....................

=> கைலாஷ் சத்யார்த்தி

47➤ மற்றவர் மனதில் வாழும் வாழ்வே வாழ்க்கை என்றவர் .................

=> அன்னை தெரசா

48➤ ஆறு சக்கரம் நூறு வண்டி, அழகான ரயிலு வண்டி - இதில் பயின்று வந்துள்ள அணி

=> இயல்பு நவிற்சி அணி

49➤ ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது ....................அணி ஆகும்

=> உயர்வு நவிற்சி அணி

50➤ Humanity என்ற சொல்லின் தமிழாக்கம் .................

=> மனித நேயம்

பயிற்சி 3

சரியா தவறா கண்டறிக

மதிப்பெண்:

1 உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் என்றவர் அன்னை தெரசா True False
2 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர் வள்ளலார் True False
3 ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர் எட்வின் அர்னால்டு True False
4 லாரி என்பதன் தமிழ்ச்சொல் மகிழுந்து True False
5 ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி True False
6 வாழ்க்கை என்பது நீ மற்றவர் மனதில் வாழும் வரை என்றார் அன்னை தெரசா True False
7 வீழும் உடலை எழுப்புவது அரசனால் செய்ய இயலும் செயல் ஆகும் True False
8 பாவலர் மணி என்ற பட்டம் தேசிக விநாயகனாருக்கு வழங்கப்பட்டது True False
9 கும்பி என்ற சொல்லின் பொருள் வயிறு True False
10 குழந்தைகளைப் போற்றுவோம் என்ற அமைப்பை உருவாக்கியவர் கைலாஷ் சத்யார்த்தி True False




Comments

Popular posts from this blog

நூலகம் - எட்டாம் வகுப்பு

தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.