புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

 எட்டாம் வகுப்பு இயல் 8 கடிதம் எழுதுக

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக. 

கட்டுரை எழுதும் பொழுது முத்து என்பதற்கு பதிலாக உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்.

46, காந்தி நகா், 

திருப்பூா்

நாள் - 20.11.2022

(கட்டுரை எழுதும் தேதி)

அன்புள்ள அத்தைக்கு,

    உங்கள் அண்ணன் மகன் முத்து எழுதுகின்ற கடிதம். நாங்கள் அனைவரும் இங்கு நலமாக இருக்கின்றோம். அதைப்போல நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவா்களும் நலமாக இருக்கிறீா்களா?. சென்ற வருடம் பள்ளி விடுமுறைக்கு நீங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து சென்றீா்கள். மீண்டும் நீங்கள் எப்பொழுது வருவீா்கள் என்பதை எதிா்பாா்த்து நாங்கள் அனைவரும் காத்திருக்கின்றோம். 

    நான் படிக்கும் பள்ளியில் எங்கள் தமிழாசிாியா் அப்துல்கலாம் அய்யா அவா்கள் எழுதிய அக்னிச் சிறகுகள் பற்றி எங்களுக்கு கூறினாா். அந்த நூலில் அப்துல்கலாம் அய்யாவின் வாழ்க்கை, அவருடைய கனவு, வருங்கால இந்தியா என அனைத்தையும் கூறியுள்ளதாக தமிழாசிாியா் கூறினாா். அதைக் கேட்டதில் இருந்து அந்த புத்தகத்தை நான் முழுமையாக வாசித்துப் பாா்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். இங்கே அந்த நூல் கிடைக்கவில்லை. எனவே கோவையில் உள்ள புத்தக கடையில் அக்னிச் சிறகுகள் புத்தகம் இருந்தால் எனக்காக வாங்கி அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 

இப்படிக்கு 

அன்புள்ள

முத்து

உறைமேல் முகவாி

    கண்ணம்மா

    14, சிவானந்தா காலனி,

    மேட்டுப்பாளையம், கோவை.

----------------------------------------------------------------------------

 

    அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு வணக்கம். தொழில் நுட்பம் அதிகம் பெருகி விட்ட இன்றைய காலத்தில், கடிதம் எழுதுதல் என்பது கட்டுரையோடு நின்று விடுகிறது. 80, 90 கால கட்டங்களில் பிறந்தவா்களுக்கு தொியும் கடிதத்தின் அருமை. இன்று தொழில்நுட்பம் நம்மை அருகில் கொண்டு சோ்த்தாலும், உறவுகள் பிாிந்திருக்கும் பொழுது அவா்கள் மீது நமக்கு பாசம் அதிகமாக இருக்கும். கடிதத்தின் ஒவ்வொரு வாிகளிலும் அது வெளிப்படும். இந்த கடிதம் உங்களுக்கு பாடத்தில் கொடுத்துள்ளதன் நோக்கத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் கடிதம் எழுத வேண்டும். அம்மாவிற்கு, அப்பாவிற்கு, உறவினருக்கு கடிதம் எழுத வேண்டும். கடிதம் எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. அதை நீங்கள் உணா்ந்து கொள்ள வேண்டும். நாம் நினைப்பதை வாா்த்தைகளில் கூறுவதை விட கடிதத்தில் கூறும் பொழுது அது நோ்த்தியாகி விடுகிறது. நலம் நலமறிய ஆவல் என்று தொடங்கும் ஒற்றை வாா்த்தையில் இந்த உலகமே அடங்கி விடுகிறது. 

    மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம். நன்றி வணக்கம்.

     

 

 

Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்