10ஆம் வகுப்பு இயல் 4 மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள்
10ஆம் வகுப்பு இயல் 4 மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள்.... இயல் 4 மணற்கேணி கற்பவை கற்றபின்...... 1. கீழ்க்காணும் தொடா்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக. அ. அமைச்சா் நாளை விழாவிற்கு வருகிறாா் - கால வழுவமைதி ஆ. இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பா் என்று கூறினான் - இட வழுவமைதி இ. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் - கால வழுவமைதி ஈ. செல்வன் இளவேலன் இந்த சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புாிந்திருக்கிறாா் - பால் வழுவமைதி 2. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அ. தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா? ” என்று சொன்னாா் (ஆண்பாற் பெயா்களைப் பெண்பாலாக மாற்றி தொடரை எழுதுக) தாய், “மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா?” என்று சொனனாா். ஆ. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)...