10ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 மொழித்திறன் வினா விடைகள்

 10ஆம் வகுப்பு தமிழ் இயல் 1

மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள்

பகுதி 1 - கற்பவை கற்றபின்

பகுதி 2 - மொழியை ஆள்வோம்

பகுதி 3 - மொழியோடு விளையாடு

------------------------------------------------------------

பகுதி 1

கற்பவை கற்றபின்

1. தேன், நூல், பை, மலர், வா - இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்து தொடர்மொழிகளாக்குக.

அ) தேன் -  தேன் இனிப்பாக இருக்கும்

ஆ) நூல் - நூல் பல கற்க வேண்டும்

இ) பை - பையை எடுத்து வா

ஈ) மலர் - மலர் பறித்து வந்தேன்

உ) வா - வா கடைக்குப் போகலாம்


2. வினை அடியை விகுதிகளுடன் இணைத்து தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண், சிரி, படி, தடு

அ) காண் - காணல், காணுதல், காணாமை

ஆ) சிரி - சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை

இ) படி - படிப்பு, படித்தல், படிக்காமை

ஈ) தடு - தடுப்பு, தடுத்தல், தடுக்காமை


3. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க. 

அண்ணன்  -  எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)

தம்பி             -  கடைக்கு (தனிமொழி)

அண்ணன்  -  கடையில் என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி)

தம்பி             -  புத்தகம் வாங்குகின்றேன் (தொடர்மொழி)

அண்ணன்  -  எதற்கு? (தனிமொழி)

தம்பி             -  பரிசு கொடுப்பதற்காக (தொடர்மொழி)

அண்ணன்  -  யாருக்குப் பரிசு கொடுக்கிறாய்? (தொடர்மொழி)

தம்பி             -  என்னுடைய நண்பனுக்கு (தொடர்மொழி)


4. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன். ஓரிடத்தில் அமர்வேன். மேலும் கீழும் பார்ப்பேன். சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். 

இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

வினைமுற்று                        தொழிற்பெயர்

அழைக்கும்                 -        அழைத்தல்

ஏறுவேன்                      -        ஏறுதல்

அமர்வேன்                   -        அமர்தல்

பார்ப்பேன்                  -        பார்த்தல்

எய்தும்                           -        எய்தல்


5. கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் - இத் தொழிற்பெயர்களை வகைப்படுத்துக. 

அ) கட்டு, சொட்டு                -    முதனிலைத் தொழிற்பெயர்

ஆ) வழிபாடு, கோறல்        -    விகுதி பெற்ற தொழிற்பெயர்

இ) கேடு   - முதனிலை திரிந்த தொழிற்பெயர்

----------------------------------------------------

பகுதி 2

மொழியை ஆள்வோம்

1. மொழிபெயர்ப்பு

1. If you talk to a man in a language he understands, that goes to his head. if you talk to him in his own language that goes to his heart - Nelson Mandela..

நீங்கள் ஒரு மனிதனிடம் அவன் புரிந்து கொள்ளும் மொழியில் பேசினால், அது அவன் தலைக்குச் செல்லும். அதுவே அவன் தாய்மொழியில் பேசினால் அவன் இதயத்திற்குச் செல்லும் - நெல்சன் மண்டேலா.

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going - Rita Mae Brown.

மொழி, கலாச்சாரத்தின் வழிகாட்டி. அது மக்கள் எங்கிருந்து வந்தார்கள் எங்கு செல்கிறார்கள் என்பதைச் சொல்லும். - ரீட்டா மே பிரவுன்.


2. பிழைகளைத் திருத்தி எழுதுக.

“தேணிலே ஊரிய செந்தமிழின் - சுவை 

தேரும் சிலப்பதி காமதை 

ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம் 

ஓதி யுர்ந்தின் புருவோமே”


“தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை 

தேறும் சிலப்பதி காமதை 

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம் 

ஓதி யுர்ந்தின் புறுவோமே”


3. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

(குவியல், குலை, மந்தை, கட்டு)

அ) கல் - கற்குவியல்

ஆ) பழம் - பழக்குலை

இ) புல் - புற்கட்டு

ஈ) ஆடு - ஆட்டுமந்தை 


4. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

அ. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள். 

கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருப்பவரை அழைத்து வாருங்கள்.

ஆ. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

இ. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

ஈ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார். 

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார். 


5. தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தி மீள எழுதுக.

அ. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

புவியில் வாழும் மானிடர் சிலர் பழமிருக்கக் காய் உண்பதைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

ஆ. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைத் தந்து மங்காப் பெருமை பெற்றான். 

இ. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போல மகிழ்ச்சி கொண்டனர்.

ஈ. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனுண்டன.

உ. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

ஆ போல அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும். 

------------------------------------------------------


பகுதி 3

மொழியோடு விளையாடு

1. சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

  1. தேன்மழை
  2. பொன்விளக்கு
  3. வான்மழை
  4. மணிமேகலை
  5. மணிவிளக்கு
  6. பொன்விலங்கு
  7. செய்வான்
  8. செய்தேன்
  9. பூவிலங்கு
  10. பூமழை


2. எண்ணுப்பெயர்களை கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக. 

1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை 

நான்கு - ச

2. எறும்புந்தன் கையால் எண்சாண் 

எட்டு - அ

3. ஐந்துசால்பு ஊன்றிய தூண்

ஐந்து - ரு

4. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி 

நான்கு, இரண்டு - ச, உ

5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பு பரணி 

ஆயிரம் - க000


3. அகராதியில் காண்க.

1. அடவி - காடு

2. அவல் - பள்ளம்

3. சுவல் - முதுகு

4. செறு - வயல், கோபம்

5. பழனம் - வயல்

6. புறவு - சிறு காடு


4. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. 



5. இன்சொல்வழி, தீய சொல் வழி - இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

நான் எப்பொழுதும் இன்சொல்லே பேசுவேன். 

இன்சொல் பேசுவதால் ஏற்படும் நன்மைகளை என் நண்பர்களுக்கு எடுத்துக் கூறுவேன்.

தீய சொற்கள் பேசுவதை விடுத்து, நல்ல சொற்களை பேச வேண்டும் என்று கூறுவேன்.

 6. படிப்போம்! பயன்படுத்துவோம்!

1. Vowel - உயிரெழுத்து

2. Consonant - மெய்யெழுத்து

3. Homograph - ஒப்பெழுத்து

4. Monolingual - ஒரு மொழி

5. Conversation - உரையாடல்

6. Discussion  - கலந்துரையாடல்

-----------------------------------------------

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.