9ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 மொழித்திறன் வினா விடைகள்
9ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள்
பகுதி 1 கற்பவை கற்றபின்
பகுதி 2 மொழியை ஆள்வோம்
பகுதி 3 மொழியோடு விளையாடு
-------------------------------------------------------
பகுதி 2
மொழியை ஆள்வோம்
1. பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature - Gerard De Nerval
ஒவ்வொரு பூவும் இயற்கையில் மலரும் போது சிறப்பு பெறுகிறது - ஜெரால்டு டீ நேர்வால்
2. Sunset is still my favorite colour, and rainbow is second - Mattie Stepanek
சூரிய உதயம் எனக்குப் பிடித்த நிறம். வானவில்லின் அழகும் இரண்டாவதாக பிடிக்கும்.
3. An early morning walk is blessing for the whole day - Henry David Thoreau
அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வது என்பது அன்றையதினம் முழுவதும் ஆசிர்வாதத்தைத் தரும் - ஹென்றி டேவிட் தோரேவ்.
4. Just living is not enough.. One must have sunshine, freedom, and a little flower - Hans Christian Anderson.
வாழ்க்கை மட்டும் போதுமானதல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் உதயம், விடுதலை, மகிழ்ச்சி வேண்டும் - ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன்
பிழை நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை - கட்டினார்
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை - வைத்தான்
3. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை - வைத்திருக்கின்றனர்.
4. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை - தப்பினேன்.
பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க..
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல் நல்லோர் சொன்ன அறிவுரை தீயோர்க்கும் போய்ச் சேரும்.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
எதிரியானாலும் அடிபட்டு கிடந்தவரை காப்பாற்றியவரைக் கண்ட போது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் என்று தெரிந்து கொண்டேன்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் என்பதுபோல் பொறுமையாகச் செய்யும் எந்த செயலும் வெற்றி பெறும்.
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
படித்து விட்டு விளையாடச் செல் என்று அப்பா கூறியது கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது என்று புரிந்து கொண்டேன்.
-----------------------------------------------------
பகுதி 3
மொழியோடு விளையாடு
சொல்லுக்குள் சொல் தேடு
1. ஆற்றங்கரையோரம் - ஆறு, கரை, ஓரம்
2. கடையெழு வள்ளல்கள் - கடை, ஏழு, வள்ளல்
3. எடுப்பார்கைப்பிள்ளை - எடுப்பார், கை, பிள்ளை
4. தமிழ்விடுதூது - தமிழ், விடு, தூது
5. பாய்மரக்கப்பல் - பாய், மரம், கப்பல்
6. எட்டுக்கால்பூச்சி - எட்டு, கால், பூச்சி
அகராதியில் காண்க.
1. கந்தி - கழுகு
2. நெடில் - மூங்கில்
3. பாலி - ஆலமரம்
4. மகி - பூமி
5. கம்புள் - சங்கு
6. கைச்சாத்து - கையெழுத்து
சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.
1. அரிசி போடுகிறேன்
புறாவிற்கு அரிசி போடுகின்றேன்.
காலையில் புறாவிற்கு அரிசி போடுகின்றேன்.
2. மழை பெய்தது.
நேற்று மழை பெய்தது
நேற்று காலை மழை பெய்தது
3. வானவில்லைப் பார்த்தேன்.
அழகிய வானவில்லைப் பார்த்தேன்.
நேற்று அழகிய வானவில்லைப் பார்த்தேன்.
4. குழந்தை சிரித்தது.
அழுத குழந்தை சிரித்தது.
என்னைப் பார்த்து, அழுத குழந்தை சிரித்தது
5. எறும்புகள் போகின்றன.
எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
உணவை எடுத்து கொண்டு எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
6. படம் வரைந்தான்.
மாறன் படம் வரைந்தான்
மாறன் அழகிய படம் வரைந்தான்
அகராதியில் காண்க.
1. இமிழ்தல் - கக்குதல்
2. இசைவு - இணக்கம்
3. துவனம் - நெருப்பு
4. சபலை - மின்னல்
5. துகலம் - பங்கு
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக
(விலங்கு, எழுதி, அகல், கால், அலை)
1. எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தை விட்டு அகல்
2. எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம். பார்த்து உன் கால் ஐ வை.
3. கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
4. வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும். வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
5. எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.
குவிந்து - குவித்து, சேர்ந்து - சேர்த்து, பணிந்து - பணித்து, பொருந்து - பொருத்து, மாறு - மாற்று
1. விரிந்து - விரித்தது
1. மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன. மயில் தோகையை விரித்தது.
குவிந்து - குவித்து
ஆற்றோரம் குவிந்து கிடந்த மணலை, வீட்டின் அருகே குவித்து வைத்தோம்.
சேர்ந்து - சேர்த்து
சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, பணத்தைச் சேர்த்து வைத்தனர்
பணிந்து - பணித்து
மாணவர்கள் பணிந்து நடக்க வேண்டுமென ஆசிரியர் பணித்தார்.
பொருந்து - பொருத்து
சொற்களை சரியான சொற்களோடு பொருந்துமாறு பொருத்திக் காட்டு
மாறு - மாற்று
தீய வழிக்கு மாறுகின்ற நண்பர்களை நல்வழியில் மாற்று.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
படிப்போம்! பயன்படுத்துவோம்!
1. Conical Stone - குமிழிக் கல்
2. Water Management - நீர் மேலாண்மை
3. Irrigation Technology - பாசனத் தொழில்நுட்பம்
4. Tropical Zone - வெப்ப மண்டலம்
--------------------------------------------------
Comments
Post a Comment