தமிழ் இலக்கணம் (4), அது அஃது இது இஃது வரும் இடங்கள்

தமிழ் இலக்கணம் 4

ஒன்று, இரண்டு ஆகிய சொற்கள் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஓர், ஈர் என்றும், உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஒரு, இரு என்றும் வரும் என்று பார்த்தோம். அதேப்போல் அது, இது ஆகிய சொற்கள் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் எவ்வாறு வரும் என்று காணொலி மூலம் நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.

காணொலியைப் பார்க்க CLICK HERE

இங்கு சில பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியான முறையில் திருத்தி எழுதவும். விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. (முடிந்தவரை நீங்களே விடைகளைக் கண்டுபிடிக்க முயலுங்கள்)

1. அது என்னுடைய ஊஞ்சல்

2. இது யாருடைய மிதிவண்டி

3. அது அணில் என்று எனக்குத் தெரியும்

4. நான் பார்த்தவற்றில் இது அருமையாக உள்ளது.

5. இஃது யார் புத்தகம்?

6. இஃது உன்னுடைய புத்தகங்களா?

7. அஃது கிராமத்திற்குச் செல்லும் வழி

8. அது ஒரு இனிய பாடல்

9. அது என் அண்ணணுடைய ஆடைகள்

10. இது அழகான ஓவியம்

11. அது என்னுடைய எழுதுபொருள்கள்

12. அவை அவளுடைய தோடு

 

விடைகள்

1. அஃது என்னுடைய ஊஞ்சல்

2. இது யாருடைய மிதிவண்டி

3. அஃது அணில் என்று எனக்குத் தெரியும்

4. நான் பார்த்தவற்றில் இஃது அருமையாக உள்ளது.

5. இது யார் புத்தகம்?

6. இவை உன்னுடைய புத்தகங்களா?

7. அது கிராமத்திற்குச் செல்லும் வழி

8. அஃது ஒரு இனிய பாடல்

9. அவை என் அண்ணணுடைய ஆடைகள்

10. இஃது அழகான ஓவியம்

11. அவை என்னுடைய எழுதுபொருள்கள்

12. அஃது அவளுடைய தோடு


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை