7ஆம் வகுப்பு தமிழ் எங்கள் தமிழ் பாட வினா விடைகள் (எளிய முறையில்)

எங்கள் தமிழ் பாடம் வினா விடைகள் (எளிமையான முறையில்)

அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு வணக்கம்......🙏

    ஒவ்வொரு பாடத்தையும் மிக எளிமையாகப் புரிந்து கொண்டு, உங்கள் ஆசிரியரிடம் நல்ல மாணவர் என்ற பெயரையும், தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் பெற வேண்டும் என்பதே நம் இணையதளத்தின்  முதன்மையான நோக்கம்.. 

    வினாக்களுக்கான விடைகளை எளிமையாக புரிந்து கொள்ள புகைப்படங்களுடன் விளக்கியுள்ளேன். வினாவிற்கான விடைகளை ஒருமுறை படித்துவிட்டு, அந்தப் புகைப்படங்களை பார்த்தாலே விடைகள் ஞாபகம் வரும். இதைக் கொண்டு நீங்களே பயிற்சி செய்து கொள்ளலாம்.  

    முதலில் சிறுவினா, அடுத்து குறுவினா, கடைசியாக சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இவை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.. இந்தத் தளத்திற்கு வருகை தந்தமைக்காக உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏



சிறுவினா

எங்கள் தமிழ் என்னும் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக?

நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.  தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் பெற யாரையும் புகழ்ந்து பேச மாட்டார்கள். தம்மைப் போற்றதவர்களையும் இகழ்ந்து பேச மாட்டார்கள்.

கொல்லாமையைக் குறிக்கோளாக, பொய்யாமையைக் கொள்கையாகக் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்பமாக வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி, அனைவரிடத்தும் அன்பையும், அறத்தையும் தூண்டும். அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.

நம் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்....



Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

பேச்சுமொழியை இப்படி எழுத்துமொழியா மாத்தலாம் (தமிழ் இலக்கணம் 3)

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்