ஒன்று இரண்டு சொற்கள் எங்குப் பயன்படுத்த வேண்டும்?
ஓர் ஓரு சொற்கள் எங்கு பயன்படுத்த வேண்டும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
தமிழ் இலக்கணம் 3
ஆங்கிலத்தில் a e i o u எழுத்துகளுக்கு முன் an பயன்படுத்த வேண்டும். மற்ற எழுத்துகளுக்கு முன் a பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. An apple, An Orange, a Tree, a Post office. இதுபோல் தமிழிலும் உண்டு. ஒன்று என்ற சொல்லை உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஓர் என்றும், உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஒரு என்றும் பயன்படுத்த வேண்டும். அதேப் போல்தான் இரண்டு என்ற சொல்லையும் பயன்படுத்த வேண்டும். அதாவது இரண்டு என்ற சொல்லை உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஈர் என்றும், உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் இரு என்றும் பயன்படுத்த வேண்டும்.
கீழ்க்காணும் 10 தொடர்களிலும் உள்ள பிழைகளைத் திருத்தி எழுத முயலுங்கள். விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. (முடிந்தவரை நீங்களே விடையளிக்க முயலுங்கள்)
இவற்றை நீங்கள் காணொலியாக காண விரும்பினால் CLICK HERE
வினாக்கள்
- 1.
ஒரு
அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
- 2.
இரண்டு
மரத்தையும் வெட்டி விட்டனர்.
- 3.
மீண்டும்
ஒரு முறை எழுதிக் காட்டவும்
- 4.
ஒரு
இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
- 5.
இரு
அசைச் சொற்களை எழுதிப் பழகுங்கள்
- 6.
ஒரு
இனிய பாடல் கேட்டேன்
- 7.
இரண்டு
மனம் வேண்டும்.
- 8.
ஒரு
ஆயிரம் முறை நான் கூறியிருப்பேன்.
- 9.
ஒரு
எழுத்து சொற்கள், இரண்டு எழுத்துச் சொற்கள்
- 10. இரண்டு ஆண்டு கடந்து விட்டன.
விடைகள்
- 1.
ஓர்
அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
- 2. இரு மரத்தையும் வெட்டி விட்டனர்.
- 3.
மீண்டும்
ஒரு முறை எழுதிக் காட்டவும்
- 4.
ஓர்
இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
- 5.
ஈரசைச்
சொற்களை எழுதிப் பழகுங்கள்
- 6.
ஓர்
இனிய பாடல் கேட்டேன்
- 7.
இரு மனம் வேண்டும்.
- 8.
ஓராயிரம்
முறை நான் கூறியிருப்பேன்.
- 9.
ஓர்
எழுத்து சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள்
- 10.
ஈராண்டு
கடந்த விட்டன.
Comments
Post a Comment