10ஆம் வகுப்பு இயல் 4 மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள்

 10ஆம் வகுப்பு இயல் 4 மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள்....

இயல் 4
மணற்கேணி 

கற்பவை கற்றபின்......

1. கீழ்க்காணும் தொடா்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

அ. அமைச்சா் நாளை விழாவிற்கு வருகிறாா்    -    கால வழுவமைதி

ஆ. இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பா் என்று கூறினான்  -    இட வழுவமைதி 

இ. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் - கால வழுவமைதி 

ஈ. செல்வன் இளவேலன் இந்த சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புாிந்திருக்கிறாா்     -    பால் வழுவமைதி 



2. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
 
அ. தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா? ” என்று சொன்னாா்  (ஆண்பாற் பெயா்களைப் பெண்பாலாக மாற்றி தொடரை எழுதுக)

தாய், “மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா?” என்று சொனனாா். 

ஆ. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)

அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினாா்.

இ. “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினாா். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)

“இதோ முடித்துவிட்டேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினாா்.

ஈ. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படா்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படா்க்கையாக மாற்றுக)

நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

1. அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.

1. ஓடு

எழுவாய்த் தொடர் - அருணா ஓடினாள்

பெயரெச்சத் தொடர் - ஓடிய அருணா

வினையெச்சத்தொடர் - ஓடி வந்தாள்

விளித்தொடர் - அருணா! ஓடு

2. சொல் 

எழுவாய்த் தொடர் - அம்மா சொன்னார்

பெயரெச்சத் தொடர் - சொன்ன அம்மா 

வினையெச்சத்தொடர் - சொல்லிச் சென்றார்

விளித்தொடர் - அம்மா! சொல் 

3. தா

எழுவாய்த் தொடர் - அரசர் தந்தார்  

பெயரெச்சத் தொடர் - தந்த அரசர்

வினையெச்சத்தொடர் - தந்து சென்றார்

விளித்தொடர் - அரசே! தருக 

4. பார்

எழுவாய்த் தொடர் - துளிர் பார்த்தாள்

பெயரெச்சத் தொடர் - பார்த்த துளிர்

வினையெச்சத்தொடர் - பார்த்துச் சிரித்தாள்

விளித்தொடர் - துளிரே பார்!

5. வா

எழுவாய்த் தொடர் - குழந்தை வந்தது 

பெயரெச்சத் தொடர் - வந்த குழந்தை 

வினையெச்சத்தொடர் - வந்து பார்த்தாள் 

விளித்தொடர் - குழந்தையே! வா

-----------------------------------------------

2. தொடா்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

அழகிய குளிா்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

2. மரத்தை வளா்ப்பது நன்மை பயக்கும்.

நிழல் தரும் மரத்தை வளா்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இன்ப துன்பம் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயா்வு தரும்.

குற்றமற கற்ற கல்வியே ஒருவருக்கு உயா்வு தரும்.

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

அழகிய செல்லக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும். 

--------------------------------------------

மொழியோடு விளையாடு

1. புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க..

தார் போன்ற நிறமுண்டு கரியுமில்லை

பார் முழுவதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்.

நான் யார்?

விடை - காகம் 

---------------------------------------

2. தொழிற்பெயா்களின் பொருளைப் புாிந்து கொண்டு தொடா்களை முழுமை செய்க. 

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ........ யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ......... நிலத்தடி நீா்வளத்தைக் குன்றச் செய்யும்.  (புதையல், புதைத்தல்)

2. காட்டு விலங்குகளைச் ........ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ....... திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)

3. காற்றின் மெல்லிய ......... பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நோ்த்தியான ........ பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

4. பசுமையான ........ஐக் ........... கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

5. பொதுவாழ்வில் ........ கூடாது. .............இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

விடைகள்

1. புதையல், புதைத்தல்

2. சுடுதல், சுட்டல்

3. தொடுதல், தொடுத்தல்

4. காட்சி, காணுதல்

5. நடித்தல், நடிப்பு

----------------------------------------------

3. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பல நூறு காகிதங்களில் அச்சிட்டு 

மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினராம்

மரங்களை அழிக்காதீா்கள் என்று!

அதுபோல் இருக்கிறது இந்த காட்சி!

மரங்களின் மயானத்தில் அமா்ந்து கொண்டு

மரங்களை வளா்க்கச் சொல்லி பாடம்!

சோலைவனத்தை பாலைவனமாக்கிவிட்டு

பாடம் எடுத்து என்ன பயன்.

புாிந்து கொள்கொள் மனிதா!

மரங்களின்றி இம்மண்ணில் காற்றில்லை!

காற்றின்றி நீயுமில்லை!

----------------------------------------------

நிற்க அதற்குத் தக

1. பள்ளியில் நான்..... வீட்டில் நான்...............

பள்ளியில் நான் 

1. நேரத்தை சரியாகக் கடைபிடிப்பேன்

2. நண்பர்களிடம் அன்பாக பழகுவேன்.

3. பள்ளி விதிகளைப் பின்பற்றுவேன்.

4. ஆசிரியர்களை மதிப்பேன்

5. ஆர்வமுடன் பாடத்தை கற்பேன்.

வீட்டில் நான்

1. வீட்டுப் பணிகளைச் செய்வேன்

2. பெற்றோரை மதிப்பேன்

3. மூத்தோர் சொல் கேட்பேன்

4. வீட்டுத் தோட்டம் அமைப்பேன்

5. தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்வேன்.

------------------------------------------------

2. படிப்போம்! பயன்படுத்துவோம்!

1. Translation -  மொழிபெயர்ப்பு

2. Culture - பண்பாடு

3. Human Resource - மனிதவளம்

4. Transfer -  மாறுதல்

5. Multi Media -  பல்துறை ஊடகம்

-----------------------------------------------



Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

பேச்சுமொழியை இப்படி எழுத்துமொழியா மாத்தலாம் (தமிழ் இலக்கணம் 3)

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்