எட்டாம் வகுப்பு இயல் 8 கடிதம் எழுதுக புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக. கட்டுரை எழுதும் பொழுது முத்து என்பதற்கு பதிலாக உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். 46, காந்தி நகா், திருப்பூா் நாள் - 20.11.2022 (கட்டுரை எழுதும் தேதி) அன்புள்ள அத்தைக்கு, உங்கள் அண்ணன் மகன் முத்து எழுதுகின்ற கடிதம். நாங்கள் அனைவரும் இங்கு நலமாக இருக்கின்றோம். அதைப்போல நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவா்களும் நலமாக இருக்கிறீா்களா?. சென்ற வருடம் பள்ளி விடுமுறைக்கு நீங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து சென்றீா்கள். மீண்டும் நீங்கள் எப்பொழுது வருவீா்கள் என்பதை எதிா்பாா்த்து நாங்கள் அனைவரும் காத்திருக்கின்றோம். நான் படிக்கும் பள்ளியில் எங்கள் தமிழாசிாியா் அப்துல்கலாம் அய்யா அவா்கள் எழுதிய அக்னிச் சிறகுகள் பற்றி எங்களுக்கு கூறினாா். அந்த நூலில் அப்துல்கலாம் அய்யாவின் வாழ்க்கை, அவருடைய கனவு, வருங்கால இந்தியா என அனைத்தையும் கூறியுள்ளதாக தமிழாசிாியா் கூறினாா். அதைக் கேட்டதில் இருந்து அந்த புத்தகத்தை நான் முழுமையாக வாசித்துப் பாா்க்க வேண...
Comments
Post a Comment