பேச்சுமொழியை இப்படி எழுத்துமொழியா மாத்தலாம்

பேச்சுமொழியை இவ்வளவு எளிமையா எழுத்துமொழியா மாத்தலாமா? சூப்பர்ல....


தமிழ் இலக்கணம் 6

    கீழ்க்கண்ட தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் அனைத்தும் பேச்சுமொழிச் சொற்கள். அவற்றை எழுத்துமொழிக்கு மாற்ற முயலுங்கள். விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. 

1. சோத்துப்பானை உடைந்து விட்டது.

2. பாட்டிக்கு வெத்தலை வாங்கி வா  

3. காத்தாடி விரைவாகச் சுத்துகிறது

4. அழகான ஆத்தங்கரை மரம்

5. பெயரை மாத்தி எழுதிவிட்டேன்.

6. அப்பா எனக்கு ஒத்தடம் கொடுத்தார்

7. பெண்கள் நெல் குத்தினர்

8. கோவிலைச் சுத்திச் சுத்தி வந்தேன்

9. நேத்து நீ எங்கே சென்றாய்?

10. குப்பை கொட்டியதால் நாத்தமடிக்கிறது

11. இது ஒரு வத்திப்போன குளம்

12.  அவன் ஒரு ஏமாத்துப்பேர்வழி  

13.  என் சித்தப்பா ஓர் ஆசிரியர் 

14. நெத்தி வியர்வை சிந்தினேன்.

15. தென்னங்கீத்து செய்வது எப்படி?

16. வயித்துவலியால் துடித்தான்

17. பாம்புப்புத்து பார்த்திருக்கிறாயா?

18.  நான் பெத்த மகள் மாலா

19. ஒத்தை பனைமரம்

20. குத்துயிராய்க் கிடந்தான்


    மேலே உள்ள தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் அனைத்தும் பேச்சுமொழிச் சொற்கள். அந்தச் சொற்களில் த எழுத்திற்கு பதில் ற எழுத்து பயன்படுத்தினால் போதும். பேச்சுமொழி எழுத்து மொழியாக மாறிவிடும். பாருங்க. 

1. சோற்றுப்பானை உடைந்து விட்டது.

2. பாட்டிக்கு வெற்றிலை வாங்கி வா  

3. காற்றாடி விரைவாகச் சுற்றுகிறது

4. அழகான ஆற்றங்கரை மரம்

5. பெயரை மாற்றி எழுதிவிட்டேன்.

6. அப்பா எனக்கு ஒற்றடம் கொடுத்தார்

7. பெண்கள் நெல் குற்றினர்

8. கோவிலைச் சுற்றிச் சுற்றி வந்தேன்

9. நேற்று நீ எங்கே சென்றாய்?

10. குப்பை கொட்டியதால் நாற்றமடிக்கிறது

11. இது ஒரு வற்றிப்போன குளம்

12.  அவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி  

13.  என் சிற்றப்பா ஓர் ஆசிரியர் 

14. நெற்றி வியர்வை சிந்தினேன்.

15. தென்னங்கீற்று செய்வது எப்படி?

16. வயிற்றுவலியால் துடித்தான்

17. பாம்புப்புற்று பார்த்திருக்கிறாயா?

18.  நான் பெற்ற மகள் மாலா

19. ஒற்றைப் பனைமரம்

20. குற்றுயிராய்க் கிடந்தான்











Comments

Popular posts from this blog

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.