9ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 மொழித்திறன் வினா விடைகள்

 9ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள்

பகுதி 1 - கற்பவை கற்றபின்

பகுதி 2 - மொழியை ஆள்வோம்

பகுதி 3 - மொழியோடு விளையாடு

-------------------------------------------------------

பகுதி 2

மொழியை ஆள்வோம் 

1. மொழிபெயர்க்க.

1. Linguistics - மொழிப்புலமை

2. Literature  - இலக்கியம்

3. Philologist - மொழியியற் புலமையாளர்

4. Polyglot - பன்மொழிப் புலமையாளர்

5. Phonologist - ஒலியியல் ஆய்வாளர்

6. Phonetics - ஒலிப்பு முறைகள்


2. அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் .......................... (திகழ்)

விடை - திகழ்கிறது

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ..................... (கலந்துகொள்)

விடை - கலந்து கொள்வாள்

3. உலகில் மூவாயிரம் மொழிகள் .......................... (பேசு)

விடை - பேசப்படுகின்றன.

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ........................... (செல்)

விடை - செல்கின்றனர்

5. தவறுகளைத் .................................. (திருத்து)

விடை - திருத்துக.


3. தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி .......................

விடை - முதுமையில் செல்வம் 

2. சித்திரமும் கைப்பழக்கம் .....................

விடை - செந்தமிழும் நாப்பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு ...................

விடை - சொல்லாடல் செய்யாதே

4. கற்றோர்க்குச் சென்ற ....................

விடை - இடமெல்லாம் சிறப்பு

-----------------------------------------------------

பகுதி 3

மொழியோடு விளையாடு 

கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க. 

நான் வந்தேன், வருகிறேன், வருவேன்

நாங்கள் வந்தோம், வருகிறோம், வருவோம்

நீ வந்தாய் வருகிறாய் வருவாய்

நீங்கள் வந்தீர்கள் வருகிறீர்கள் வருவீர்கள்

அவன் வந்தான் வருகிறான் வருவான்

அவள் வந்தாள் வருகிறாள் வருவாள்

அவர் வந்தார் வருகிறார் வருவார்

அது வந்தது வருகிறது வரும்

அவை வந்தன வருகின்றன வரும்


2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



3. அகராதியில் காண்க.

1. நயவாமை - புகழாமை, விரும்பாமை

2. கிளத்தல் - கூறுதல்

3. கேழ்பு - நன்மை

4. செம்மல் - தலைவன், இறைவன்

5. புரிசை - மதில், மதில்சுவர்


3. படிப்போம்! பயன்படுத்துவோம்!

1. Comparitive Grammar - ஒப்பிலக்கணம் 

2. Lexicon - பேரகராதி 

3. Vowels - உயிரொலிகள்

4. Consonants - மெய்யொலிகள்

------------------------------------------------

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.