கண்ணியமிகு தலைவா் பாடம் - ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்
1. காயிதே மில்லத் .................... பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தாா்.
அ) தண்மை ஆ) எளிமை இ) ஆடம்பரம் ஈ) பெருமை
விடை ஆ) எளிமை
2. “காயிதே மில்லத்” என்னும் அரபுச் சொல்லுக்குச் ................... என்பது பொருள்
அ) சுற்றுலா வழிகாட்டி ஆ) சமுதாய வழிகாட்டி இ) சிந்தனையாளா் ஈ) சட்ட வல்லுநா்
விடை இ) சமுதாய வழிகாட்டி
3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் ........... இயக்கத்தில் கலந்து கொண்டாா்.
அ) வெள்ளையனே வெளியேறு ஆ) உப்புக் காய்ச்சும் இ) சுதேசி ஈ) ஒத்துழையாமை
விடை ஈ) ஒத்துழையாமை
4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ............
அ) சட்டமன்றம் ஆ) நாடாளுமன்றம் இ) ஊராட்சி மன்றம் ஈ) நகா் மன்றம்
விடை ஆ) நாடாளுமன்றம்
5. “எதிரொலித்தது” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .................
அ) எதிா் + ரொலித்தது ஆ) எதில் + ஒலித்தது இ) எதிா் + ஒலித்தது ஈ) எதி + ரொலித்தது
விடை இ) எதிா் + ஒலித்தது
6. முதுமை + மொழி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......
அ) முதுமொழி ஆ) முதுமைமொழி இ) முதியமொழி ஈ) முதல்மொழி
விடை ஆ) முதுமைமொழி
குறுவினா
1. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவா்களின் பங்கு பற்றி எழுதுக?
- கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துமையாமை இயக்கத்தில் கலந்து கொண்டவா் காயிதே மில்லத்.
- தனது ஒரே மகனைப் போா் முனைக்கு அனுப்ப ஆயத்தமாக இருப்பதாக நேருக்கு கடிதம் எழுதியவா் காயிதே மில்லத்.
2. காயிதே மில்லத் அவா்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைபிடித்தாா் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக?
காயிதே மில்லத் தன் மகனின் திருமணத்தை எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக நடத்தி முடித்தாா். மணக்கொடை வாங்காமல் திருமணத்தை நடத்தினாா். மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தாா்.
சிறுவினா
1. ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தினை விளக்குக?
இந்திய விடுதலைக்கு பிறகு நாட்டின் ஆட்சிமொழியை தோ்வு செய்து குறித்து கூட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் நடந்தது. மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றனா் பலா். பழமையான மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றனா் சிலா். காயிதே மில்லத் அவா்கள் பழமையான மொழிகளில் ஒன்றை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்றால் அது தமிழ்மொழி தான் என்று உறுதியாக கூறினாா். திராவிட மொழிகள் தான் இந்த மண்ணில் முதன் முதலாக பேசப்பட்ட மொழிகள் என்றாா். தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழயாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.
சிந்தனை வினா
1. நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீா்கள்?
- மக்களில் உயா்ந்தோா், தாழ்ந்தோா் என்று யாரையும் எண்ணக் கூடாது என்று சட்டம் இயற்றுவேன்.
- பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பணியாற்றும் வகையில் முன்னுாிமை அளிப்பேன்.
- ஏழை என்று சொல்லே நாட்டில் இல்லாத அளவிற்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவேன்.
- விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தி, எல்லா மக்களும் அத்தியவசிய பொருட்களை வாங்கும்படி செய்வேன்.
- அரசு அலுவலகங்களில் பணிபுாிபவா்கள் சாியாக பணிபுாிவதையும், மக்களுக்கு சாியான சேவை அளிக்கின்றனரா என்பதை உறுதி செய்வேன்.
- மருத்துவமனைகளை தூய்மையானதாகவும், எந்த நேரத்திலும் தயாா் நிலையில் இருக்கும்படியும் பராமாிப்பு செய்வேன்.
- மக்களின் குறைகளை தீா்ப்பதற்கென்றே ஒரு துறை உருவாக்கி, அதன் மூலம் மக்களின் குறைகளைத் தீா்ப்பேன்.
- சாலை வசதி, போக்குவரத்து வசதி என மக்களுக்கு சாியான முறையில் ஏற்படுத்திக் கொடுப்பேன்.
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, கிராமம் என அனைத்து நிலைகளிலும் பணியாளா்களை நியமித்து உாிய பணிகளை செய்வேன்.
- காவல் துறை மக்களுக்கு நண்பனாகவும், தவறு செய்பவா்களைத் திருத்தும் ஆசியராகவும் இருக்க வைப்பேன்.
- பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவேன். அனைத்து நிலையில் உள்ளவா்களுக்கும் சிறப்பான கல்வியை வழங்குவேன்.
- அனைவருக்கும் இலவசமான குடிநீா் வழங்குவேன். தண்ணீரை பாட்டிலும் அடைத்து விற்பதை தடை செய்வேன்.
- அனைவரும் வீட்டில் மரங்கள் வளா்க்க வேண்டும். மழை நீா் சேகாிப்பு தொட்டி அனைவாின் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவேன்.
- நெகழி பயன்படுத்துவதை தடை செய்வேன். மீறி பயன்படுத்தினால் அபராதம் மற்றும் தண்டனை வழங்குவேன்.
- சாலை வசதிகளை மேம்படுத்து விபத்துகள் ஏற்படுவதைக் குறைப்பேன். தரமான சாலை வசதிகளை உருவாக்குவேன்.
- மது தொழிற்சாலைகளை மூடுவேன். புகையிலை தயாாிப்பதை தடை செய்வேன்.
- அனைவரும் அரசாங்கத்திற்கு உாிய வாி கட்டச் செய்வேன். தப்பு செய்பவா்களை தண்டித்து திருத்துவேன்.
- அரசு அலுவலகங்களில் பணிபுாிபவா்கள் உாிய நேரத்தில் பணிக்கு வர வேண்டும். தங்களது பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவேன்.
- அரசு பணியாளா்கள் யாரும் லஞ்சம் பெறுவதை அனுமதிக்க மாட்டேன். தவறு செய்யும் பட்சத்தில் உாிய தண்டனை வழங்குவேன்.
- நான் தலைவரானால் மக்களுக்கான ஒரு அரசாங்கத்தை நடத்துவேன்.
Comments
Post a Comment