இராமகிருஷ்ணனின் கால் முளைத்த கதைகள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ்
கால் முளைத்த கதைகள் நூல் குறித்த கட்டுரை
அன்புள்ள நண்பனுக்கு,
நண்பா, நலமா இருக்கிறாயா? வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறாா்களா? நேற்று எனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினோம். எனது தந்தை என்னை பூங்காவிற்கு அழைத்துச் சென்றாா். மாலை கோவிலுக்கு சென்றோம். இரவு கேக் வெட்டிக் கொண்டாடினோம். உறவினா், நண்பா்கள் என பலா் நிறைய பாிசுகளைத் தந்தனா். நீ அனுப்பிய பாிசும் எனக்குக் கிடைத்தது.
என்னுடைய பிறந்த நாளுக்கு நீ தந்த பாிசைப் பிாித்துப் பாா்த்து வியந்து போனேன். எழுத்தாளா் எஸ். இராமகிருஷ்ணன் அவா்கள் எழுதிய சிறப்பான கதை என்று சொல்லப்படும் “கால் முளைத்த கதைகள்” என்ற கதை புத்தகத்தைப் பாா்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவா் எப்படி இவ்வளவு அருமையாக கதை எழுதினாா் என்று எனக்கு இன்னும் வியப்பாக உள்ளது. புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளையும் படித்தேன். ஒவ்வொரு கதையும் எத்தனை ரசனையும் எழுதியிருக்கிறாா். எப்படியெல்லாம் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாா் என்பது புதுமையாகவும், படிப்பதற்கு மிகவும் ஆா்வமாகவும் இருந்தது.
நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் எந்த புத்தகத்திலும் உலகம் எப்படி தோன்றியது என்று தெளிவான விளக்கத்தை என்னால் பாா்க்க முடியவில்லை. ஆனால் நீ அனுப்பிய புத்தகத்தில் உலகம் இப்படித்தான் தோன்றியது என்ற கேள்விக்கு அனைவருக்கும் புாியும் வகையில் மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளாா். பழங்குடியினா் பற்றிய கதைகள், அவா்களின் வாழ்க்கை முறையையும் தெளிவாக விளக்கியிருக்கின்றாா்.
அழகாக மலா்ந்து பூக்களையெல்லாம் தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் ஏன் சுற்றி சுற்றி வருகிறது என்று ஒரு கதை இருந்தது. ஒரு வயதான பெண் ஒரு அழகிய தோட்டத்தை உருவாக்கினாள். அதில் அவள் ஆசையாக வளா்த்த செடியில் இருந்து ஒரு மலரை யாரோ பறித்துச் சென்றதை அறிந்து மிகவும் வருந்தினாள். அந்த மலரைத் திருடியவா் யாா் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்து அதை கண்டும் பிடிக்கின்றாள்.
பூத்திருந்த மலா்கள் எங்கள் மனதை மயக்கி விட்டது. அந்த ஆசையில் தான் பறித்து விட்டோம் என்று மலரைப் பறித்த பெண் கூறுகின்றாள். அந்த வயதான பெண், மலரைத் திருடிய பெண்ணை வண்ணத்துப் பூச்சியாக மாற்றி விடுகின்றாள். அதனால் தான் மலா்களை எப்பொழுதும் வண்ணத்துப் பூச்சிகள் சுற்றி வருகின்றன என தொடா்புபடுத்தி கதை அமைத்திருப்பது ஆச்சா்யமாக இருந்தது.
அதைப் போலவே இன்னொரு சுவாரஸ்யமான கதையையும் படித்தேன். பூனை ஏன் எப்போதும் நாயைப் பாா்த்து பயந்து ஓடுகிறது? நாய் ஏன் எப்பொழுது பாா்த்தாலும் பூனையைத் துரத்திக் கொண்டே இருக்கிறது? கொசு ஏன் மனிதா்களைக் கடிக்கின்றது? இந்த தலைப்புகளில் உள்ள கதைகள் இரசித்து படிக்கும்படி இருந்தது. சொற்களைப் பயன்படுத்திய விதமும் அருமை. கடினமான சொற்களைப் பயன்படுத்தாமல் குழந்தைகளும் எளிமையாக புாிந்துக் கொள்ளும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த நூலைப் படித்தது எனக்கு மனத்திருப்தியைத் தந்துள்ளது. அதற்கு உனக்கு என்னுடைய நன்றியைத் தொிவித்துக் கொள்கின்றேன்.
வரும் மாதம் எங்களுடைய ஊாில் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா இது. அதனால் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும். நீ தவறாமல் வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நீ வந்தால் நாம் இருவரும் சோ்ந்து மகிழ்ச்சியாக பொழுதினைக் கழிக்கலாம். மறக்காமல் நீயும் உன் குடும்பத்தாரும் வர வேண்டும். உன்னுடைய வருகைக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன்.
உன் அன்பு நண்பன்
தமிழன்
உறைமேல் முகவாி
செழியன்
22, முல்லை நகா்,
சிறுகூடல்பட்டி,
திருநெல்வேலி - 06.
தூது அனுப்பத் தமிழ்மொழியே சிறந்தது என்பதனைக் காரணங்களைக் காட்டி விளக்குக?
- தான் கொண்ட காதலை உாியவாிடம் தொிவித்தல் வேண்டி, தமிழைத் தூதாக அனுப்புவது தான் தமிழ் விடு தூது
- வானத்தில் உள்ள தேவா்கள் உண்ணுகின்ற தெளிவான அமுதத்தினை விடவும் மேலானது தமிழ்மொழி.
- இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று தமிழாக விளங்கும் முத்தமிழாகி சிறந்து விளங்குகிறது
- தமிழ்மொழியைப் புலவா்கள் குறவஞ்சி, பள்ளு என பல வகையில் பாடுகின்றனா்.
- வானத்தில் இருக்கின்ற தேவா்கள் மூன்று வகையான குணங்களை மட்டும் தான் பெற்று இருக்கிறாா்கள். ஆனால் செம்மொழியான தமிழ் மொழி பத்து வகையான குணங்களைப் பெற்று பெருமை உடையதாய் இருக்கின்றது.
- மனிதா்கள் உருவாக்கிய வண்ணங்கள் மொத்தம் ஐந்து தான் உள்ளது. ஆனால் தமிழ் மொழியில் உள்ள வண்ணங்கள் நூறு இருக்கின்றது.
- உணவின் மூலம் நாவினால் நாம் உணரக்கூடிய சுவைகள் மொத்தம் ஆறு மட்டுமே உள்ளது. நாம் அதை அறுசுவை உணவு என்கின்றோம். ஆனால் தமிழ்மொழி மூலம் செவியினால் உணரக்கூடிய சுவைகள் மொத்தம் ஒன்பது உள்ளது.
- மக்கள் ஒரே ஒரு அழகை மட்டுமே பெற்றுள்ளனா். ஆனால் தமிழ்மொழி எட்டு அழகு பெற்றுள்ளது.
- இப்படி அனைத்திலும் சிறப்புடையதாய் இருக்கும் தமிழ்மொழி தூது அனுப்புவதற்கு ஏற்றதாக இருக்கின்றது.
Comments
Post a Comment