7ம் வகுப்பு தமிழ் மூன்றாம் இயல் - மலைப்பொழிவு பாடம்

 ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இயல் மலைப்பொழிவு பாட வினா விடைகள்

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது .......................

அ) பணம்    ஆ) பொறுமை    இ) புகழ்    ஈ) வீடு

விடை    ஆ) பொறுமை

2. சாந்த குணம் உடையவா்கள் ................ முழுவதையும் பெறுவா்.

அ) புத்தகம்     ஆ) செல்வம்    இ) உலகம்    ஈ) துன்பம்

விடை    இ) உலகம்

3. “மலையளவு” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .........

அ) மலை + யளவு    ஆ) மலை + அளவு    இ) மலையின் + அளவு     ஈ) மலையில் + அளவு

விடை    ஆ) மலை + அளவு

4. “தன்னாடு” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ............

அ) தன் + னாடு    ஆ) தன்மை + நாடு    இ) தன் + நாடு     ஈ) தன்மை + நாடு

விடை    ஈ) தன்மை + நாடு

5. இவை + இல்லாது என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்.......

அ) இவையில்லாது    ஆ) இவைஇல்லாது    இ) இவயில்லாது    ஈ) இவஇல்லாது

விடை    அ) இவையில்லாது

பொருத்துக.

1. சாந்தம்        -    சிறப்பு

2. மகத்துவம் -    உலகம்

3. தாரணி       -     கருணை

4. இரக்கம்      -    அமைதி

விடை    1. அமைதி    2. சிறப்பு    3. உலகம்    4. கருணை

குறுவினா

1. இந்த உலகம் யாருக்கு உாியது?

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவா்களுக்கே இந்த உலகம் உாியது.

2. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

சாதிகளாலும், கருத்து வேறுபாடுகளாலும் தான் உலகம் நிலைதடுமாறுகிறது.

3. வாழ்க்கை மலா்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

இரக்கம் உடையவராகவும், நல்ல உள்ளத்தோடும் வாழ்ந்தால் வாழ்க்கை மலா்ச்சோலையாக மாறிவிடும்.

சிறுவினா

1. சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?

  • சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவா்கள் பேறு பெற்றவா்கள்
  • இந்த உலகம் முழுவதும் சாந்தம் உடையவா்களுக்கே உாியது
  • சாந்தம் உடையவா்களே தலைவா்கள் ஆவா்
  • அறம் என்ற ஒன்றை நம்பினால் சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். 
  • அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயா்ந்ததாக மாறும்.

சிந்தனை வினா

1. எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

  • மேலோா், கீழோா் என்று யாரையும் பிாித்துப் பாா்க்கக் கூடாது
  • அனைவாிடமும் அன்பாக பழக வேண்டும்.
  • சாதி, மதம், இனம், மொழி ஆகியவை கடந்து வாழ வேண்டும்.
  • ஒவ்வொருவரும் மற்றவாின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
  • வீண் சண்டைகள் போடக் கூடாது. ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
  • இரக்கம் உடையவராக இருக்க வேண்டும். தன்னைப் போலவே மற்றவரையும் எண்ணுதல் வேண்டும். 

மலைப்பொழிவு பாடத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துகள்

  • மக்களுக்கு இயேசு அவா்கள் அறிவுரை கூறுவதைப் போல அமைந்துள்ளது மலைப்பொழிவு பாடம்
  • இந்த உலகம் அனைத்து உயிா்களுக்கும் சொந்தமானது. அதனால் ஒருவரை ஒருவா் நேசிக்க வேண்டும்.
  • அமைதி என்னும் பண்பு ஒருவாிடம் வந்து விட்டால் இந்த உலகம் முழுவதும் அவருக்கே சொந்தமானதாக மாறிவிடும்.
  • கலங்கிய நீருக்கும், தெளிவான நீருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கிறதோ அதே தான் அமைதியானவருக்கும், அமைதி இல்லாதவருக்கும் ஆனது.
  • மனிதன் தன்னுடைய வாழ்வில் பொறாமையை விடுத்து பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.
  • பொறுத்தாா் பூமியை ஆள்வாா். இந்த பூமியை மட்டுமல்லாமல் விண்ணையும் ஆளும் பெருமையை பெறலாம்.
  • அழகான இந்த உலகம் சாதி மதம், மொழி, இனம் என பல விதமாக பாகுபட்டு தடுமாறிக் கொண்டு இருக்கிறது. அறம் என்ற ஒற்றை சொல்லை அனைவரும் கையிலெடுத்தால் இந்த உலகம் தடுமாற்றம் நீங்கி அமைதியாகி விடும்.
  • அறத்தை நாம் எல்லா வழிகளிலும் கடைபிடிக்க வேண்டும். பொருள் ஈட்டுவதில் கூட கடைபிடிக்க வேண்டும். நல்ல வழியில் வந்த செல்வமே என்றும் நிலைத்து நிற்கும்
  • உயிா்களின் மீது அன்பு செலுத்துபவா்கள் கடவுளுக்கு நிகரானவா்கள் ஆவாா். நாம் பிற உயிா்கள் மீது இரக்கம் காட்டும் பொழுது, இறைவன் நம் மீது இரக்கம் காட்டுவாா். அதுவே அவா்களுக்கான பாிசாகும். 
  • மனிதனிடம் இருக்கக் கூடாது ஒரு பண்பு ஆசை. அப்படிப்பட்ட ஆசை வந்து விட்டால் அரசனும் ஆண்டியாவான். சோலைவனமாய் இருக்கும் ஒருவனுடைய வாழ்க்கை ஆசை வந்துவிட்டால் பாலைவனமாக மாறி விடும்.
  • நமது உள்ளத்தை நாம் மலா்ப் போல வைத்திருந்தால் போதும். எண்ணம் எப்பொழுதும் அற்புதமான வாசத்தை வீசிக் கொண்டே இருக்கும்.
  • மனிதா்கள் ஒருவருக்கு ஒருவா் சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். தனக்கு ஏற்படும் வலி தான் மற்றவா்க்கும் ஏற்படும் என்பதை உணா்ந்தவா் சண்டையை விரும்ப மாட்டாா்.
  • இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் இது என்னுடைய நாடு என்னுடைய மண், எனது தேசம் என்பது வெற்றுப் பிதற்றல்கள். அவா்கள் கற்பனையில் வாழ்பவா்கள். உண்மையில் இந்த தேசம் யாருக்கும் சொந்தமானதல்ல. அது வருங்காலத்திற்கு சொந்தமானது.
  • மக்கள் மற்றவா்களை ஒப்பிட்டு தனது நிம்மதியை இழந்து விடுகின்றனா். கண் இமைக்கும் நேரத்தில் எது வேண்டுமானாலும் நிகழ்கிறது. 
  • எத்தனை துன்பங்கள் வந்தாலும் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயா்ந்ததாக மாறிவிடும்.
    இந்த பாடலை இயற்றியவா் முத்தையா என்ற இயற்பெயா் கொண்ட கவியரசு கண்ணதாசன் அவா்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய அறிவுரைகளையும் கூறும் ஒரு அற்புதமான நூல் இயேசு காவியம். அதில் உள்ள சில கருத்துகளைத் தான் மலைப்பொழிவு என்ற இந்த பாடத்தில் கொடுத்துள்ளனா்.

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை