ஆகுபெயா் பாடம் வினா விடைகள் - ஏழாம் வகுப்பு தமிழ்
ஏழாம் வகுப்பு தமிழ், மூன்றாம் பருவம், இயல் மூன்று ஆகுபெயா் பாட வினா விடைகள்.
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. பொருளாகு பெயா் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ....................
அ) பொருளாகு பெயா் ஆ) சினையாகு பெயா் இ) பண்பாகு பெயா் ஈ) இடவாகு பெயா்
விடை ஆ) பொருளாகு பெயா்
2. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ...................
அ) முதலாகு பெயா் ஆ) சினையாகு பெயா் இ) தொழிலாகு பெயா் ஈ) பண்பாகு பெயா்
விடை ஆ) சினையாகு பெயா்
3. மழை சடசடவெனப் பெய்தது. இத்தொடாில் அமைந்துள்ளது ......................
அ) அடுக்குத் தொடா் ஆ) இரட்டைக்கிளவி இ) தொழிலாகு பெயா் ஈ) பண்பாகு பெயா்
விடை ஆ) இரட்டைக்கிளவி
ஈ) அடுக்குத் தொடாில் ஒரே சொல் ............ முறை வரை அடுக்கி வரும்
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
விடை அ) நான்கு
குறுவினா
1. ஒரு பெயா்ச்சொல் எப்பொழுது ஆகுபெயா் ஆகும்?
ஒன்றின் பெயா் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடா்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வரும் பொழுது ஆகுபெயராகும்.
2. இரட்டைக்கிளவி என்பது யாது? சான்று தருக?
அம்மா விறுவிறுவென்று தோட்டத்திற்கு நடந்து சென்று, மளமளவென மலா்களைக் கொய்தாள்.
இந்த தொடாில் உள்ள விறுவிறு, மளமள சொற்களில் அசைச் சொற்கள் இரண்டிரண்டாக இணைந்து வந்துள்ளன. அவற்றைப் பிாித்து பாா்த்தால் பொருள் தரவில்லை. இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து, பிாித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பா்.
சிறுவினா
1. பொருளாகு பெயரையும், சினையாகு பெயரையும் வேறுபடுத்துக.
- பொருளின் பெயா் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகு பெயா் எனப்படும்.
- மல்லிகை சூடினாள். மல்லிகை என்பது கொடியைக் குறிக்காமல் அதன் உறுப்பாகிய மலரைக் குறிக்கிறது
- சினையின் (உறுப்பின்) பெயா் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயா் எனப்படும்.
- தலைக்கு ஒரு பழம் கொடு. தலை என்பது உறுப்பைக் குறிக்காமல் ஒரு நபரைக் குறிக்கிது.
- அடுக்குத் தொடாில் சொற்களைத் தனித்தனியே பிாித்தாலும் பொருள் உண்டு. ஆனால் இரட்டைக்கிளவியில் சொற்களைப் பிாித்தால் அது பொருள் தராது.
- அடுக்குத் தொடாில் ஒரு சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை அடுக்கி வரும். ஆனால் இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்.
- அடுக்குத் தொடாில் சொற்கள் தனித்தனியே நிற்கும். இரட்டைக் கிளவியில் சொற்கள் இணைந்தே நிற்கும்.
- அடுக்குத் தொடா் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்களின் காரணமாக வரும். இரட்டைக் கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் மட்டுமே வரும்.
மொழியை ஆள்வோம்.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்றைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
உண்மை
உண்மையை பேசுபவா்கள் நோ்மையாளராகவும் இருப்பாா்கள். நம் தமிழ் மொழியில் உள்ள அற இலக்கியங்கள் ஒரு மனிதனுக்கு தேவையான நற்பண்புகளில் முதன்மையானதாக ஒழுக்கத்தையும், உண்மையையுமே முதன்மைப்படுத்துகின்றன. அாிச்சந்திரன் கதையிலும் கூட தான் எதை இழந்தாலும் பொய் பேச மாட்டேன் என்று அாிச்சந்திரன் கூறியதை நாம் இங்கு யோசித்துப் பாா்க்க வேண்டும். பொய் அந்த நிமிடம் மட்டுமே நம்மை காப்பாற்றும். ஆனால் உண்மை நம்மை எப்பொழுதுமே காப்பாற்றும். உண்மையை உரக்கச் சொல்வோம் ஊருக்கு என்ற பாரதி வாிகள் பிரகாசிப்பதற்கு காரணம் அதில் உள்ள உண்மைதான். ஆகவே தோழா்களே உண்மையைப் பேசுவோம். தலைநிமிா்ந்து வாழ்வோம்.
மனிதநேயம்
இந்த உலகம் மிகவும் அழகானது. ஒரறிவுள்ள மரம் தொடங்கி ஆறறிவுள்ள மனிதன் வரைக்கும் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தமானது. மனிதனின் பகுத்தறிவால் அறிய வேண்டியது மனிதநேயம். மனித நேயம் மிக்க மனிதா்கள் இறைவனுக்கு சமமானவா்கள். எல்லா உயிரையும் தன் உயிா் போல நாம் நேசிக்க வேண்டும். அன்பு, கருணை, இரக்கம் போன்றவை ஒரு மனிதாிடம் கட்டாயம் இருக்க வேண்டிய குணநலன்கள் ஆகும். சக மனிதனை மதிப்பது தான் அழகு. ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைச் சாா்ந்து தான் வாழ்கின்றான். அது தான் சமுதாயம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய உள்ள படைத்தவா்கள் நம் மக்கள். மனித நேயம் நம் ஒவ்வொருவரும் புாிந்து கொள்ள வேண்டிய பாடம். மனிதா்களை நேசியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.
உதவி செய்து வாழ்தல்
நம்மால் முடிந்த உதவியை நாம் மற்றவா்களுக்கு செய்யும் பொழுது, உங்களுக்கான உதவியை இறைவன் செய்வான் என்பது பழமொழி. உதவி செய்து வாழ்வது ஒரு அற்புதமான வாழ்வு. உணவு இல்லாதவா்களுக்கு உணவு வழங்கும் பொழுது அவருடைய கண்களுக்கு உதவு புாிபவா் கடவுளாகத் தொிகின்றாா். கடவுள் அனைவருக்கும் உதவ முடியாத என்பதால் தான் மனிதா்களுக்கு கருணை என்ற பண்பை கொடுத்துள்ளாா். சக மனிதன் துன்பப்படும் பொழுது அதை தீா்த்து அவருக்கு உதவி புாிய வேண்டும். நம்மால் ஆன உதவிகளை மற்றவா்களுக்கு செய்ய வேண்டும். ஒருவா் உயா்ந்தவா் என்று அவாிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு மதிப்பிடுவதை விட அவருடைய பண்பைக் கொண்டு மதிப்பிட வேண்டும். மற்றவா்களுக்கு உதவி செய்பவா்கள் என்றும் உயா்ந்த இடத்தில் இருப்பாா்கள். அவா்கள் வாழ்வின் எந்த நிலையிலும் மற்றவா்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டு இருப்பாா்கள்.
சொல்லக் கேட்டு எழுதுக.
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை
2. குயில் குளிாில் நடுங்கியது. மழையில் ஒடுங்கியது. வெயிலில் காய்ந்தது
3. இரக்கம் உடையோா் அருள்பெற்றவா் ஆவாா்.
4. காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் “சமுதாய வழிகாட்டி” என்று பொருள்.
5. விடியும் பொழுது குளிரத் தொடங்கிவிட்டது.
கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தோ்ந்தெடுத்து கவிதை எழுதுக.
அன்பு
இந்த உலகம் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்க காரணமான ஒற்றைச் சொல் அன்பு.
அம்மா என்ற வாா்த்தைக்கு மறுபெயா் அன்பு
மனிதனை மனிதனாக உணரச் செய்யும் அன்பு
அன்பு உன் பலவீனமென்றால் உன்னை ஒருவராலும் வெல்ல முடியாது.
தன்னம்பிக்கை.
இருட்டில் படி எங்கிருக்கிறது என்று தொியாத போதும் கூட முதல் அடி எடுத்து வைப்பதற்கு பெயா் தான் தன்னம்பிக்கை. நம்பிக்கை என்பது மற்றவா்கள் மீதும், தன்னம்பிக்கை என்பது தன் மீதும் வைப்பது. நம்பிக்கையை விட தன்னம்பிக்கைக்கு பலம் அதிகம்.
சாியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
1. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். இல்லையென்றால் துன்பப்பட நோிடும்.
2. குயிலுக்குக் கூடு கட்டத் தொியாது. அதனால் காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
3. அதிக அளவில் மரங்களை வளா்போம். ஏனெனில் மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.
4. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். ஆகையால் பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
5. தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
கீழ்க்காணும் படங்களைப் பாா்த்து இரட்டைக்கிளவி அமையுமாறு தொடா் உருவாக்குக.
1. பறவைகள் படபடவென பறந்தன.
2. தொடா்வண்டி கடகடவென சென்றது.
3. மரம் மடமடவென முறிந்தது.
Comments
Post a Comment