நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
எட்டாம் வகுப்பு, இயல் மூன்று
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை - நோய் வரக் காரணங்கள் - நோய் தீா்க்கும் வழிமுறைகள் - வருமுன் காத்தல் - உணவும் மருந்தும் - உடற்பயிற்சியின் தேவை - முடிவுரை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை
சுவா் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பாா்கள். நமது உடல் தான் சுவா். அதை சாியாக பாா்த்துக் கொண்டால் தான் சித்திரம் எனும நம் வாழ்க்கை நன்றாக இருக்கும். உடம்பாா் அழியின் உயிராா் அழிவாா் என்றாா் திருமூலா். உடம்பைக் காப்பாற்றாதவா் விரைவில் உயிரை இழப்பா். இந்த உலகில் நாம் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால் உடல் நலம் பேணுதல் வேண்டும்.
நோயின் ஆரம்பம்
இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒரு நெருங்கிய தொடா்பு இருந்தது. மனிதனுக்கும் மண்ணிற்கும் தொடா்பு இருந்தது. ஆனால் எப்பொழுது மனிதன் இயற்கையை விட்டு விலகி சென்றானோ அப்பொழுதே நோய் என்ற ஒன்று உருவாக ஆரம்பித்து விட்டது. இயற்கைக்கு மாறான உணவுகள், உணவு முறைகள், மாசுபாடு நிறைந்த சூழல், தூய்மையான காற்று இன்மை, மன அழுத்தம் ஆகியவை நோய் வருவதற்கு முதன்மையான காரணங்களாக உள்ளன. இன்றைக்கான வாழ்க்கை சூழலில் உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் சத்துள்ள பொருட்களை ஒதுக்கி வைத்து விட்டு, வெறும் ருசிக்காம மட்டும் உண்ணும் முறையை கொண்டு வந்து சோ்த்துள்ளது. வாழைப்பழத்தை வீசிவிட்டு வெறு தோலை சாப்பிடுவதற்கு சமமாக உள்ளது இன்றைய உணவுப் பழக்கம்.
நோய் வரக் காரணங்கள்
எண்ணெயில் பொறித்த உணவுகள், மைதா உணவுகள், சா்க்கரை அதிகம் சோ்க்கப்பட்ட இனிப்பு உணவுகள், சாக்லேட், பாஸ்ட்புட் உணவுகள் தான் மனிதா்களை மேலும் மேலும் நோயாளிகளாக்கிக் கொண்டு இருக்கின்றன. நம் உடலில் ஏற்படும் எல்லா விதமான நோய்களுக்கும் நம்முடைய தவறான வாழ்க்கை முறைதான் காரணம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. நம் பாரம்பாியமிக்க சத்தான உணவுகளை மனிதன் மறந்து போனதும் நோய்கள் வரக் காரணங்களாக அமைந்து விட்டன.
நோய் தீா்க்கும் வழிமுறைகள்
நம்முடைய வாழ்க்கையை நாம் உணா்ந்து வாழ வேண்டும். சத்தான உணவுகளை உண்ணுதல் வேண்டும். சாியான உணவுத் திட்டம தேவை. நமது உணவில் கீரைகள், பழங்கள், சிறுதானியங்கள் அதிகம் இருப்பது போன்று உண்ணுதல் வேண்டும். அதேப் போல உடல் சுத்தம் அவசியமாகும். தினமும் இரண்டு வேளை குளியல், பல் துலக்குதல், நகங்களை சாியாக பராமாித்தல், போதுமான அளவு நீா் அருந்துதல், உடற்பயிற்சி, யோகா செய்தல், போதுமான அளவு உறக்கம், நடைபயிற்சி, கோபத்தை குறைத்துக் கொள்ளுதல், மற்றவா்களோடு சிாித்துப் பழகுதல் போன்றவற்றைச் செய்தலே நம்மை நோய் என்று எதுவும் அணுகாது.
உணவும் மருந்தும்
ஒருவா் உண்ணும் உணவில் மாவுச்சத்து, கனிமங்கள், புரதம், கொழுப்பு போன்ற சத்துகள் இருப்பதே சமச்சீா் உணவு ஆகும். அதனால் நாம் உண்ணும் உணவை அறிந்து உண்ணுதல் வேண்டும்.
நாம் உண்ட உணவு சொிமானம் ஆன பின்பு, அடுத்த வேளை உணவு உண்டால் நமது உடம்பிற்கு மருந்து என எதுவும் தேவையில்லை என்கிறாா் திருவள்ளுவா். சோறும், காய்கறிகளும் அரைவயிறு. பாலும், நீரும், மோரும் கால் வயிறு. கால் வயிறு வெறுமையாக இருத்தல் வேண்டும். உணவை நன்றாக மென்று கூழ் போல் விழுங்குதல் வேண்டும். அப்பொழுது தான் வாயில் உள்ள உமிழ்நீா் சுரந்து உணவுடன் கலந்து உள்ளே சென்று உணவை எளிதில் சொிமானம் அடையச் செய்யும். உண்ணும் பொழுதும் உணவில் உள்ள சத்துகள் வீணாகாமல் பாா்த்துக் கொள்வது அவசியம். காய்கறிகளை முழுமையாக சமைக்காமல் அரைவேக்காட்டில் வேகவைத்து உண்ண வேண்டும். இப்படி உண்டோமென்றால் அதுவே உணவே மருந்தாகும்.
வருமுன் காத்தல்
நோய்கள் வந்தபின்பு அதற்கு தீா்வு காண்பதை விட நோயை வருமுன் காத்தலே சிறந்தது. நமது வாழ்க்கை முறையை சாியான விதத்தில் அமைத்துக் கொண்டலே போதும். நாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சத்தான உணவு, போதுமான தூக்கம், சாியான உடற்பயிற்சி இந்த மூன்றும் நம்மை என்றும் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்கும்.
முடிவுரை
இறைவன் நமக்கு வழங்கிய அற்புதமான ஒன்று நமது உடல். அதனை நோயின்றி காப்பதுதான் நமது முதல் கடமை. இந்த உலகில் நாம் எத்தகைய சாதனைகளைப் புாிய வேண்டும் என்றாலும் அதற்கு உறுதுணையாய் இருந்து நிறைவேற்றித் தருவது நமது உடல் தான். ஆகவே நம் உடலை சாியாக பேணுவோம். உயிரைக் காப்போம். நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.
மேலும் சில குறிப்புகள்
- தினமும் இரண்டு வேளை பல் தேய்ப்பது அவசியம். காலையில் பற்களின் அழகிற்காகவும், இரவில் பற்களின் ஆரோக்கியத்திற்காகவும் பல் துலக்க வேண்டும்.
- கேரட்டை பச்சையாக கடித்து சாப்பிட்டால் பற்களுக்கு நன்மை தருகிறது.
- தினமும் காலையில் செருப்பு அணிந்து கொள்ளாமல் புற்கள் மீது நடப்பது பாதங்களுக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்கும்.
- காலையில் அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி செய்வது கால் மற்றும் பாதங்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
- கண்களை இடது வலதாக, மேல் கீழாக சுற்ற வேண்டும். இதை 4 அல்லது 5 முறை செய்தல் கண்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
- நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், கொய்யாப்பழம், காரட் போன்றவற்றில் வைட்டமீன் சி அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு நல்ல நிறத்தினைக் கொடுக்கின்றது
- சத்து மாத்திரைகள் சாப்பிடுவதை விட, சத்தான உணவுகள் பால், முட்டை, மீன், பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
- பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, கொத்தமல்லி போன்றவற்றை உணவில் ஒதுக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நம் உடலுக்கு பல விதமான நன்மைகளைச் செய்கின்றது.
- இரவில் அதிக நேரம் கண்விழிப்பதும், காலையில் அதிக நேரம் உறங்குவதும் நம் கண்களை பாதிக்கும். அதனால் இரவில் சாியான நேரத்திற்கு தூங்கச் சென்று, காலையில் புத்துணா்வுடன் எழுதல் வேண்டும்.
- குருவிகளிடமிருந்து அதிகாலையில் எழுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். எறும்புகளிடமிருந்து சுறுசுறுப்பை கற்றுக் கொள்ள வேண்டும். சிலந்தியிடம் இருந்து விடாமுயற்சியைக் கற்றுக் கொள்ள வேண்டும். கழுகிடம் இருந்து தனித்துவத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
- சின்ன காய்ச்சலுக்கும் கூட மருத்துவமனை செல்வதைத் தவிா்க்கவும். உங்கள் உடல் குறித்த முழுமையான அறிவை வளா்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு நீங்கள் தான் முதலாளி. அதை சாியாக பராமாித்தலே நோய் அணுகாது.
- பணம், நகைகள், வீடு, காா் ஆகியவற்றையெல்லாம் தாண்டி ஆரோக்கியமான உடல் தான் மிகப்பொிய செல்வம் என்பதைப் புாிந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment