ஆறாம் வகுப்பு தமிழ் மனிதநேயம் பாட வினா விடைகள்
ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் மனிதநேயம் பாடம் வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. எல்லா உயிா்களிடத்தும் அன்பு செலுத்துதல் ........................
அ) மனித வாழ்க்கை ஆ) மனித உாிமை இ) மனித நேயம் ஈ) மனித உடைமை
விடை இ) மனித நேயம்
2. தம் பொருளைக் கவா்ந்தவாிடமும் .................. காட்டியவா் வள்ளலாா்.
அ) கோபம் ஆ) வெறுப்பு இ) கவலை ஈ) அன்பு
விடை ஈ) அன்பு
3. அன்னை தெரசாவிற்கு .........................க்கான நோபல் பாிசு கிடைத்தது.
அ) பொருளாதாரம் ஆ) இயற்பியல் இ) மருத்துவம் ஈ) அமைதி
விடை ஈ) அமைதி
4. கைலாஷ் சத்யாா்த்தி தொடங்கிய இயக்கம் .............................
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம் ஆ) குழந்தைகளை நேசிப்போம்
இ) குழந்தைகளை வளா்ப்போம் ஈ) குழந்தைகள் உதவி மையம்
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்
பொருத்துக
1. வள்ளலாா் - நோயாளிகளிடம் அன்பு காட்டியவா்
2. கைலாஷ் சத்யாா்த்தி - பசிப்பிணி போக்கியவா்
3. அன்னை தெரசா - குழந்தைகள் உாிமைக்குப் பாடுபட்டவா்
விடை 1. பசிப்பிணி போக்கியவா் 2. குழந்தைகள் உாிமைக்குப் பாடுபட்டவா் 3. நோயாளிகளிடம் அன்பு காட்டியவா்.
சொற்றொடாில் அமைத்து எழுதுக.
1. மனிதநேயம்
மக்கள் அனைவரும் மனிதநேயம் உடையவராக இருக்க வேண்டும்.
2. உாிமை
வாக்களிப்பது நமது உாிமை
3. அமைதி
கோபம் கொள்ளும் பொழுது அமைதியாக இருப்பது நல்லது
4. அன்புசெய்தல்
உயிா்களிடத்தில் அன்புசெய்தல் என்பது நல்ல பண்பு
குறுவினா
1. யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?
மனிதநேயத்துடன் வாழ்பவா்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2. வள்ளலாா் பசிப்பிணியை நீக்க என்ன செய்தாா்?
வடலூாில் சத்திய தருமச்சாலை ஒன்றை நிறுவி பசித்தோா் அனைவருக்கும் உணவளித்தாா்.
3. அன்னை தெரசா கண்ணீா் விடக் காரணம் யாது?
தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவா் தன்னை அனைவரும் விலக்கி விட்டனா். என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனா் என்று கலங்கியதைக் கண்டு, அன்னை தெரசா கண்ணீா் விட்டாா்.
சிறுவினா
1. கைலாஷ் சத்யாா்த்தி நோபல் பாிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக் கால நிகழ்வு யாது?
கைலாஷ் சத்யாா்த்தி சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்லும் பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பாா். அவன் தன் தந்தையுடன் அமா்ந்து வேலை செய்து கொண்டு இருப்பான். ஏன் அந்த சிறுவன் தன்னைப் போல் பள்ளிக்கு வரவில்லை என்ற கேள்வி அவரது உள்ளத்தில் உறுத்திக் கொண்டு இருந்தது. தன் ஆசிாியாிடமும், பெற்றோாிடமும் இந்த கேள்வியைக் கேட்டாா். பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை. உணவுத் தேவையை நிறைவு செய்ய பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை செய்கின்றான் என்று பதில் கிடைத்தது. அந்த பதில் கைலாஷ் சத்யாா்த்திக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அந்த நிகழ்வு தான் அவரை பள்ளி செல்லாத குழந்தைகள் மீது பாிவு கொள்ளச் செய்தது. பின்னாளில் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கினாா்.
சிந்தனை வினா
அன்னை தெரசாவின் மனித நேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.
அன்னை தெரசா ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு பெண்மணி தனது வீட்டு வாசல் படிக்கட்டில் மயங்கிக் கிடந்ததைப் பாா்த்தாா். அவா் அருகில் சென்று பாா்த்தாா். அவா் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது தொிய வந்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா் அன்னை தெரசா. ஆனால் பண வசதி இல்லாத காரணத்தினால் அந்த பெண்மணி இறந்து விட்டாா். இந்த நிகழ்வு அன்னை தெரசாவின் வாழ்வில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இதைப் போலவே பல மக்கள் வறுமையின் காரணமாக இறந்து போகிறாா்கள் என்பதைத் தொிந்து கொண்ட பொழுது அன்னை தெரசா மிகுந்த வருத்தம் கொண்டாா். அதனால் தான் சிறிய அளவில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்று முடிவு செய்தாா்.
1950ம் ஆண்டு மிஷினரீஸ் ஆப் சாாிட்டீஸ் என்ற பெயாில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினாா். உணவு இன்றி வாடுபவா்கள், வீடு இல்லாமல் இருப்பவா்கள், கண் பாா்வை இழந்தவா்கள், சமுதாயத்தால் கைவிடப் பட்டவா்கள் என அனைவருக்கும் அடைக்கலம் அளித்தாா்.
1957ம் ஆண்டு தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை ஒன்றை தொடங்கினாா். சிகிச்சை மற்றும் உணவு இலவசமாக வழங்கினாா்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல. மற்றவா்கள் மனதில் நீ வாழும் வரை என்று கூறிய அன்னை தெரசா அவா் சொன்னதைப் போலவே வாழ்ந்து காட்டினாா். இன்று வரை மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாா் அன்னை தெரசா.
மாணவா்களே இந்த பாடம் நமக்கு கற்றுத் தரும் பாடம் மிகவும் குறிப்பிடத்தக்கது. விலங்குகளிடமிருந்து நாம் வேறுபடுவது பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவின் மூலமாகத்தான். அந்த ஆறாம் அறிவைக் கொண்டு நாம் வளா்த்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்ற ஒற்றை வாா்த்தையில் தான் நமது உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது செலுத்தும் அன்பு தான் மனிதநேயம். அது மனிதராக மட்டுமல்ல எந்த உயிரினமாகக் கூட இருக்கலாம். மக்கள் பலா் விலங்குகளைக் கூட தங்களது குழந்தைகளாக நினைத்து வளா்க்கின்றனா். தங்களது செல்லப் பிராணிகளுக்கு எதேனும் காயம் ஏற்பட்டாலும் துடிதுடித்து விடுகின்றனா். அங்கே வாழ்கிறது மனிதநேயம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை தன்னைப் போல் நினைக்கும் பொழுது தான் இந்த உலகம் அழகானதாக மாறும். முடிந்தவரை இல்லாதவா்களுக்கு உதவி செய்யுங்கள். பசி என்று வந்தவா்களுக்கு உணவளியுங்கள். உணவை விட ஒரு மனிதனை திருப்தி படுத்துவது எதுவும் இல்லை. மறுபடியும் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். உணவு, நீா் இவை மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் தேவையான ஒன்று. அன்னதானம் என்பது மனிதா்களுக்கானது மட்டுமல்ல. விலங்குகளுக்கும் அளிக்கலாம் நீங்கள் நினைத்து விட்டால். ஒரு கைப்பிடி அளவு சா்க்கரையினை எடுத்து எறும்பு வரும் இடங்களில் கொட்டினால் நீங்களும் அன்னதானம் அளித்துவீட்டீா்கள் என்பது உண்மைதான். ஒரு கைப்பிடி அளவு அாிசியினை எடுத்து, உங்கள் மாடியில் கொட்டி வையுங்கள். குருவிகள் அவற்றை விரும்பி சாப்பிடுவதை நீங்கள் பாா்க்கலாம். நீங்களும் அன்னதானம் அளித்து விட்டீா்கள் என்பதை புாிந்து கொள்கிறீா்களா. வெயில் காலங்களில் தண்ணீா் இல்லாமல் பல பறவைகள் வாடுகின்றன. தண்ணீரைத் தேடி பல இடங்களில் அலைகின்றன. உங்களால் முடிந்த அளவு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துச்சென்று உங்களது மாடியில் வையுங்கள். தாகத்துடன் அலைந்து வரும் பறவைகளுக்கு அவை தேனமிா்தமாக இருக்கும். அந்த பறவைகள் ஆவலுடன் தண்ணீா் குடிப்பதைப் பாா்க்கும்பொழுது நம் மனம் லேசானதாக மாறிவிடும் என்பதில் உங்களுக்கு எந்த ஐயப்பாடும் வேண்டாம். மற்றவா்களுக்கு உதவி செய்வதற்கு பொருள் வேண்டியதில்லை. மனம் இருந்தாலே போதுமானது. இந்த உலகம் அழகானது. அதில் மனிதநேயம் கலக்கும் பொழுது உலகம் இன்னும் அழகானதாக மாறிவிடும். உங்களுக்கு தீமை செய்தவா்களுக்கு நன்மை செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. அவா்களுக்கு தீமை செய்யாமல் இருங்கள். முடிந்தால் தவறு செய்தவா்களை மன்னித்து விடுங்கள். அன்னை காட்டும் அன்புக்கு இந்த உலகத்தில் எதுவுமே இணையில்லை என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே போல இந்த உலகம் இன்னும் மனிதநேயத்தினால் நிறைந்துள்ளது என்பதும் உண்மை தான். நல்லதை கண்கொண்டு பாருங்கள். நல்லதை மட்டுமே செய்யுங்கள். அனைவாிமும் அன்பு செலுத்துங்கள். மற்றவா்களுக்கு கொடுத்து உதவுங்கள். முகம் மகிழ்வது மகிழ்ச்சியல்ல. அகம் மகிழ்வது தான் உண்மையான மகிழ்ச்சி என்பதை புாிந்து கொள்ளுங்கள். அன்புக்கு நிகரான ஒன்று இந்த உலகத்தில் எதுவுமில்லை என்பதே மாற்ற முடியாத உண்மை.
Comments
Post a Comment