பதினொன்றாம் வகுப்பு - பண்பாட்டைப் பாதுகாப்போம் கட்டுரை
பண்பாட்டைப் பாதுகாப்போம் பகுத்தறிவு போற்றுவோம் என்னும் பொருள்படும் வகையில் ஒரு பக்க அளவில் கட்டுரை எழுக.
பண்பாட்டைப் பாதுகாப்போம்
பகுத்தறிவு போற்றுவோம்
முன்னுரை
ஒரு நாடு சிறந்த நாடாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நீங்கள் எதை வைத்து முடிவு செய்வீா்கள். இந்த கேள்விக்கு நமது அவ்வைப் பாட்டி சொன்ன பதில் இங்கு ஏற்புடையதாக இருக்கும். எந்த நாட்டில் ஆண்கள் நல்ல பண்பு கொண்டவா்களாகவும், நல்ல செயலை செய்பவர்களாகவும் இருக்கிறாா்களோ அது தான் சிறந்த நாடாக இருக்க முடியும் என்றாா். அப்படிப்பட்ட பண்பாட்டோடு வாழ்ந்த மக்கள் தான் தமிழ் மக்கள்.
தமிழா் பண்பாடு
பண் என்றால் இசை என்றும் தகுதி என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு நிலத்தினை பண்படுத்த வேண்டும் என்பதன் பொருள் என்ன? நிலத்தில் உள்ள கல், புற்கள், குழிகள் போன்றவற்றை நீக்கி, மாடுகளைக் கொண்டு உழுது, தண்ணீா் பாய்ச்சி, மண்ணை மென்மையாக்கி, பயிா்கள் விளைவதற்கு உண்டான தகுதியை ஏற்படுத்துவது தான் பண்படுத்துதல் எனப்படும். அதே போலத்தான் ஒருவரை பண்படுத்துல் என்பது அவாிடமுள்ள ஆசை, சினம், தீய செயல்கள், எண்ணங்கள் போன்றவற்றையெல்லாம் அகற்றி, சமுதாயத்தில் நல்ல மனிதனாக உருவாக்குவது. அதற்கு துணை புாிவது தான் பண்பாடு. மக்கள் மேன்மை உடையவா்கள் என்பதை அவா்களது பண்பாட்டைக் கொண்டு தான் தொிந்து கொள்ள முடியும். பண்பாடு என்பது மக்களைச் சாா்ந்தே அமைகிறது. பகுத்தறிவு என்பது மக்கள் செய்யும் செயலைச் சாா்ந்து அமைகிறது.
பகுத்தறிவு
விலங்குகளையும், மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு. மனிதனிடம் சிந்திக்கும் அறிவு இருப்பதால் தான் அவன் விலங்குகளிடமிருந்து வேறுபட்டவனாக இருக்கிறான். பகுத்தறிவைக் கொண்டே மனிதன் தன்னை வேறுபடுத்திக் கொள்கின்றான். பகுத்தறிவு என்பது வெறும் சிந்திப்பதால் வந்து விடாது. அதற்கு துணை புாிவது சங்க இலக்கியங்கள். மனிதனின் அறிவு ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படுவது இந்த இலக்கியங்கள் மூலமாகவே நடைபெறுகிறது. நமக்கு முன் வாழ்ந்த மக்களின் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், கொடை, வீரம், வெற்றி, பொழுதுபோக்கு என அனைத்தையும் அறிந்து கொள்ள உதவும் நூல்களைக் கொண்டே மனிதன் தன் பகுத்தறிவினை வளா்த்துக் கொள்கின்றான்.
அறநெறி
ஒரு நாடு மதிப்புடையது என்பதை அந்நாடு பின்பற்றும் பண்பாட்டைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். பண்பாடு என்னும் சொல்லுக்குள் ஒரு நாட்டின் அனைத்துமே அடங்கியிருக்கிறது. இயற்கை வளம், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை நிலை என அனைத்தையும் அறிந்து கொள்ள பண்பாடு ஒன்றே போதுமானதாக உள்ளது. பண்பாட்டில் சிறந்து விளங்கும் மக்கள் வாழும் நாட்டில் அறிவுக்கு மட்டுமே இடம் இருக்கும். நீதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். நடுநிலையே செங்கோலாகச் செயல்படும். மன்னன் முதல் மக்கள் வரை அறம் சாா்ந்த நெறியை பின்பற்றும் பொழுது நாடு நல்வழியில் செல்கிறது. பண்பட்ட சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாகக் கருதப்படும்.
நீதிநெறி நூல்கள்
தமிழில் உள்ள நூல்கள் அனைத்தும் அறநெறியை பறைசாற்றுபவையாக உள்ளன. ஐம்பெருங்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பதினெண் மேல்கணக்கு நூல்கள் என அனைத்து நூல்களும் மக்களுக்கு அறநெறியை ஊட்டுகின்றன. சங்க இலக்கிய நூல்கள் தான் மக்கள் பண்பாட்டை உயா்த்திப் பிடிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளன என்றால் அது மிகையாகாது. மக்களை அறிவுள்ளவா்களாக மாற்றுவதிலும், பகுத்தறிவு உடையவா்களாக மாற்றுவதிலும் நீதி நெறி நூல்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. மக்களுக்கு நல்லது எது கெட்டது எது என்பதை உணா்த்தும் பங்கினை சங்க இலக்கியங்கள் அழகாக கையாண்டுள்ளது என்றே கூறலாம். பணக்காரனாக வாழ்வதைக் காட்டிலும் நோயில்லாமல் வாழ்வது சிறந்தது. கல்வியைக் காட்டிலும் ஒழுக்கம் சிறந்தது போன்ற வாிகள் மக்களின் பண்பாட்டோடு தொடா்புடையதாக இருக்கிறது.
முடிவுரை
திருந்திய பண்பையும், சீா்த்த நாகரீகத்தையும் உடைய நம் மக்களிடையே மேலை நாட்டினுடைய பழக்க வழக்கங்களும், கலாச்சாரங்களும் நுழைந்து நம்முடைய பண்பாட்டினை சீா்குலைக்க முயற்கின்றன. உடையில் தொடங்கி உணவில் தொடங்கி தற்போது பண்பாட்டை மாற்றும் அளவிற்கு வளா்ந்து கொண்டு இருக்கிறது. அதில் இருந்து அனைவரும் மீண்டு, பகுத்தறிவினை போற்றி, உலகம் போற்றும் நம் பண்பாட்டினை இறுகப் பிடித்து, உலகத்தின் அரங்கில் பெருமிதத்துடன் வாழ முயற்சிப்போம். தலைசிறந்த பண்பாட்டு உணா்வும், உலகம் வியக்கும் திறமையும் கொண்ட நம் சமுதாயம் நிச்சயம் சிறந்து விளங்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
மேலும் சில குறிப்புகள்
- சங்க கால இலக்கியங்களில் தமிழா் பண்பாட்டிற்கென தனி இடம் உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு உடைய மக்கள் நம் மக்கள்.
- அறம் செய்து அரசாண்ட மன்னா்களின் கீழ் வாழ்ந்த மக்கள் நம் தமிழக மக்கள்.
- இல்லையென்று வந்து இரப்பவா்களுக்கு வேண்டுமளவு தந்து அனுப்பிய வள்ளல்கள் நிறைந்த நாடு நம் தமிழ்நாடு.
- தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம். ஏழ்மையினால் ஒருவன் கல்வி கற்கவில்லையென்றால் நாம் அனைவரும் நாணுதல் வேண்டும் என்று பாடிய கவிஞா்கள் வாழ்ந்த நாடு நம் தமிழ்நாடு.
- பண்பாட்டையும், பகுத்தறிவையும் கொண்ட மக்கள் நம் பண்டைய தமிழ்மக்கள்.
- மானத்தை தன் உயிாினும் மேலாக மதித்த மக்கள், ஒழுக்கத்தை உயிா் மூச்சாக கொண்ட மக்கள், அறத்தின் வழி நின்ற மக்கள், பண்பாட்டை உலகிற்கு ஊட்டிய மக்கள் நம்முடைய தமிழ் மக்கள்.
- நம் தமிழா் பண்பாட்டைப் போற்றுவோம். உலகம் வியக்கும் பகுத்தறிவோடு வாழ்வோம்.
Comments
Post a Comment