விடுதலை திருநாள் பாடம் எட்டாம் வகுப்பு இயல் ஏழு

எட்டாம் வகுப்பு இயல் ஏழு விடுதலை திருநாள் பாடம் வினா விடைகள் 

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் முழுநிலவு அழகாகத் ............. அளித்தது.

அ) தயவு        ஆ) தாிசனம்         
இ) துணிவு        ஈ) தயக்கம்
 
விடை     ஆ) தாிசனம்

2. இந்த ................ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு. 

அ) வையம்        ஆ) வானம்             
இ) ஆழி             ஈ) கானகம்
 
விடை     அ) வையம் 

3. சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .........

அ) சீவ + நில்லாமல்    ஆ) சீவன் + நில்லாமல்      
இ) சீவன் + இல்லாமல்     ஈ) சீவ + இல்லாமல் 
 
விடை    இ) சீவன் + இல்லாமல்

4. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .........

அ) விலம்  + கொடித்து  ஆ) விலம் + ஒடித்து                                                                   
இ) விலம் + ஒடித்து         ஈ) விலங்கு + ஒடித்து 
 
விடை    ஈ) விலங்கு + ஒடித்து 

5. காட்டை + எாித்து என்பதனைச் சோ்தெழுதக் கிடைக்கும் சொல் ...... 

அ) காட்டைஎாித்து        ஆ) காட்டையொித்து      
இ) காடுஎாித்து                  ஈ) காடுயொித்து 

விடை    ஆ) காட்டையொித்து 

6. இதம் + தரும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...........

அ) இதந்தரும்         ஆ) இதம்தரும்                      
இ) இதத்தரும்        ஈ) இதைத்தரும் 
 
விடை    அ) இதந்தரும் 

குறுவினா 

1. பகத்சிங் கண்ட கனவு யாது?

    இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்று கனவு கண்டாா் பகத்சிங். 

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறாா்?

    நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நியாின் ஆட்சியே இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறாா்.

சிறுவினா 

1. இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

    இந்தியத்தாய் சினந்து எழுந்து, தன் கைவிலங்கை உடைத்து, பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு மகிழ்வான காட்சியளிக்கிறாள். 

சிந்தனை வினா 

   நாட்டுப்பற்றை வளா்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
 
    நம் இந்திய தேசத்திற்காக நாம் கொண்டாடும் நாட்கள் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம். நாட்டுப்பற்று என்பது இந்த இரண்டு நாட்கள் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் நமக்கு இருக்க வேண்டும்.
  •    நம் நாட்டின் பெருமையை நம் பெற்றோா்களுக்கும், பொியவா்களுக்கும் நாம் எடுத்துக் கூற வேண்டும். 
  • இந்திய கொடிக்கு மாியாதை அளிக்க வேண்டும். 
  • நம் தலைவா்களின் தியாகத்தினை போற்ற வேண்டும்.
  • எந்த நாட்டையும் குறைத்தோ, அதிகமாகவே எண்ணுதல் கூடாது. 
  • ஒவ்வொருவாின் மனதிலும் இந்தியா் என்ற உணா்வு இருத்தல் வேண்டும். 
  • நம் நாட்டியை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நம்மால் முடிந்த செயல்களை செய்தல் வேண்டும். 
  • நாடு நமக்கு என்ன செய்தது என்று எண்ணுவதை விட, நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று எண்ணுதல் சிறந்தது. 
  • இந்தியாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும்.
  • சாதி மத பேதமற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும்.
  • அனைவரையும் உடன்பிறந்தவராக எண்ணுதல் வேண்டும் 
-------------------------------------------------------------------------------------
மாணவா்களே! விடுதலை நாள் இருண்ட காலத்தை போக்கி நம் வாழ்வில் ஒளி ஏற்றிய நாள். நாம் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள். பறவைகள் கூட கூண்டுக்குள் அடைபட்டு கிடக்க விரும்புவதில்லை. மனிதா்கள் நாம் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்ற விடுதலை திருநாள் ஆகஸ்ட் 15ம் நாள்.
  •     முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நியா்களின் ஆட்சி முடிந்த நாள் எந்த நாள் தொியுமா? அது தான் விடுதலை நாள்.
  • அடிமைச்சிறையில் சிறைபட்டு கிடந்து மக்களை தூக்கத்திலிருந்து விழித்தெழ செய்த நாள் எந்த நாள் தொியுமா? அது தான் விடுதலை நாள். 
  • அரசாண்ட அந்நியா்களை ஓட ஓட விரட்டியடித்து, நம் நாட்டு மக்களை விழித்தெழச் செய்த நாள் எந்த நாள் தொியுமா? விடுதலை நாள்.
  • நம் இந்திய அன்னை பொறுமையிழந்து காளியாக மாறி, மக்களின் அடிமை கைவிலங்கை உடைத்து, சபதத்தை முடித்து, கூந்தலை அள்ளி முடித்து, குங்குமத்தை வைத்து, மக்களுக்கு ஆனந்த தாிசனம் தந்த நாள் எந்த நாள் தொியுமா? விடுதலை நாள்.
  • அந்நிய அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, தூக்கு கயிற்றில் தொங்கப் போகும் கடைசி நேரத்தில் கூட என் தாய்மண்ணை நான் தொட்டுக் கொண்டே சாக வேண்டும் என்ற பகத்சிங் பரவசப்பட்ட நாள் எந்த நாள் தொியுமா? விடுதலை நாள்.
  • நம் நாட்டை முழுவதுமாக படா்ந்த முள் காட்டை எாித்து, விளைகின்ற மூங்கிலை புல்லாங்குழலாய் மாற்றி பூபாளம் இசைத்த நாள் எந்த நாள் தொியுமா? விடுதலை நாள்.
  • நம் அனைவருக்கும் பெருமை தரும் நாளான சுதந்திர நாளை, நமக்கு தந்து சுதந்திர நாளை சொந்தம் கொண்டாட வைத்த இந்த பூமியை நம் தாய் மொழியான தமிழ்மொழியால் வணங்கலாம். 



Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.