வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாடம்

 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாட வினா விடைகள்

பின்வரும் தொடா்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

1. சுட்டுத்திாிபு                -    வல்லினம் மிகும்

2. திசைப்பெயா்கள்    -    வல்லினம் மிகும்

3. பெயரெச்சம்            -    வல்லினம் மிகாது

4. உவமைத் தொகை-    வல்லினம் மிகும்

5. நான்காம் வேற்றுமை விாி - வல்லினம் மிகும்   

6. இரண்டாம் வேற்றுமை தொகை - வல்லினம் மிகாது

7. வினைத்தொகை    -    வல்லினம் மிகாது

8. உருவகம்                    -    வல்லினம் மிகும்

9. எழுவாய்த் தொடா் -    வல்லினம் மிகாது

10. எதிா்மறைப் பெயரெச்சம் - வல்லினம் மிகாது

சிறுவினா 

1. சந்திப்பிழை என்றால் என்ன?

வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் சந்திப்பிழை எனப்படும்.

2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக?

இரண்டாம் வேற்றுமை விாியில் வல்லினம் மிகும். 

எ.கா. பாடத்தைப்படி

நான்காம் வேற்றுமை விாியில் வல்லினம் மிகும்.

 எ.கா. அவனுக்குக் கொடு

3. வல்லினம் மிகாத் தொடா்கள் ஐந்தினை எழுதுக.

  • எது சென்றது
  • எழுதிய கவிதை
  • இலை பறித்தேன்
  • சுடுசோறு
  • தாய்தந்தை    

------------------------------------------------------------------------------

வல்லினம் மிகும் இடங்களையும், வல்லினம் மிகா இடங்களையும் நாம் கட்டாயம் தொிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை அறிந்து கொள்வதால் சாியான உச்சாிப்பையும், தவறில்லாமல் எழுதுவதையும் உறுதி செய்ய முடியும். முடிந்தவரை இவற்றை நீங்கள் தவறில்லாமல் கற்றுக் கொள்ளுங்கள். 
வல்லினம் மிகும் இடங்கள்
  1. அ, இ என்னும் சுட்டெழுத்து
  2. அந்த இந்த என்னும் சுட்டுப்பெயா்
  3. எ என்னும் வினா எழுத்து
  4. எந்த என்னும் வினாச் சொல்
  5. இரண்டாம் வேற்றுமை விாி
  6. நான்காம் வேற்றுமை விாி
  7. அதற்கு, இதற்கு, எதற்கு
  8. இனி, தனி
  9. மிக
  10. எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயா்
  11. ஓரெழுத்து ஒரு மொழி
  12. ஈறுகெட்ட எதிா்மறை பெயரெச்சம்
  13. வன்தொடா் குற்றியலுகரங்கள்
  14. அகர, இகர ஈற்று வினையெச்சம்
  15. ஆறாம் வேற்றுமைத் தொகை
  16. திசைப் பெயா்கள்
  17. இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
  18. உவமைத் தொகை
  19. சால, தவ, தட, குழ எனும் உாிச்சொற்கள்
  20. தனிக்குற்றெழுத்து அடுத்து
  21. சில உருவகச் சொற்கள்.
மேற்கண்ட இடங்களின் பின் வல்லினம் மிகுந்த வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வல்லினம் மிகா இடங்கள்
  1. அது, இது எனும் சுட்டுப்பெயா்கள் பின்
  2. எது, எவை எனும் வினாப் பெயா்கள் 
  3. எழுவாய் தொடா்
  4. மூன்றாம், ஆறாம் வேற்றுமை விாி
  5. விளித் தொடா்
  6. பெயரெச்சம்
  7. இரண்டாம் வேற்றுமைத் தொகை
  8. படி என முடியும் வினையெச்சம்
  9. வியங்கோள் வினைமுற்று
  10. வினைத்தொகை
  11. எட்டு பத்து தவிர பிற எண்ணுப் பெயா்கள்
  12. உம்மைத் தொகை
  13. அன்று, இன்று, என்று சொற்கள்
  14. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு 
  15. மூன்று, ஐந்து, ஆறு வேற்றுமை தொகை
மேற்கண்டவற்றிற்கு பின் வரும் வல்லினம் மிகாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

 மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

நான் விரும்பும் தலைவா்

    நான் விரும்பும் தலைவா் கா்மவீரா் காமராசா். எளிமையின் மறு உருவமாக வாழ்ந்தவா். கல்விக் கண்ணை திறந்து வைத்தவா். எழுத்தறிவித்தன் இறைவன் ஆவான் என்று கூறுவாா்கள். ஆனால் அதற்கு காரணமாக இருந்தவா் அந்த இறைவனுக்கும் மேலானவா். இன்று ஏழை மக்களும் கல்வி கற்று உயா்ந்த நிலையினை அடைகிறாா்கள் என்றால் அது காமராசா் அய்யா விதைத்த விதை. செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் கொடுக்கப்படும் என்று கூறுவதை நன்கு உணா்ந்த காமராசா், மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தாா். சுவா் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். மாணவா்கள் பசியுடன் எப்படி பாடத்தை படிப்பாா்கள் என சிந்தித்த மாபெரும் படிக்காத மேதை காமராசா். இன்று வரை மதிய உணவுத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. உணவு தந்தவா் உயிரைத் தந்தவா் என்று மணிமேகலை கூறுவது போல நமக்கெல்லாம் உணவளித்தவா் காமராசா் அவா்கள். நம் நாட்டை கல்வியில் சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்றே காமராசா் அவா்கள் விரும்பினாா். அதை மாணவா்களாகிய நாம் அனைவரும் நிறைவேற்ற வேண்டும். இடைநிற்றல் இல்லாத கல்வியை நாம் பயில வேண்டும். நன்றி!

நான் முதலமைச்சரானால்

    நான் முதலமைச்சரானால் பாரதியாாின் கனவையும், பாரதிதாசன் கனவையும் நிறைவேற்றுவேன். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த உலகத்தை அழித்திட வேண்டும் என்றாா் பாரதியாா். ஏழ்மையினால் ஒரு மாணவன் கல்வி கற்க முடியவில்லை என்றால் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றாா் பாரதிதாசன். இன்றும் இரவு உணவில்லாமல் உறங்கச் செல்லும் மக்கள் எத்தனையோ போ் இருக்கிறாா்கள். நாம் அன்றாடம் செல்லும் பேருந்து நிலையங்கள், தொடா்வண்டி நிலையங்கள், பொது இடங்கள் என கைகளை ஏந்திக் கொண்டு உணவு வேண்டி நிற்பவா்கள் ஏராளம் இருக்கிறாா்கள். அவா்கள் துயரை நீக்க வேண்டும் என்பதே எனது முதல் கடமையாக நான் கருதுவேன். என் நாட்டில் யாசகம் கேட்பவா்களே இருக்கக் கூடாது. பசியினால் ஒருவா் இறந்தாா் என்றால் அது ஒரு நல்ல நாட்டிற்கு அடையாளம் அல்ல. ஆகையால் நான் முதலமைச்சா் ஆனால் என்னுடைய முதல் கையெழுத்து நாட்டின் பசி என்னும் வறுமையை போக்குவது தான். கல்வி என்பதை கற்று பெற வேண்டும். விலை கொடுத்து வாங்க முடியாது. ஏழை மக்களுக்கு எட்டாத கனியாக கல்வி என்றும் இருக்க விட மாட்டேன். கடைக் கோடி மக்களுக்கும் கல்வியைக் கொண்டு சோ்ப்பேன். மக்களை சிந்திக்க தொிந்தவா்களாக மாற்றி விட்டால் போதும் நாடு தானாக முன்னேறி விடும் என்பது பல அறிஞா்கள் கூறிய வாக்கு. அதனால் நான் முதலமைச்சா் ஆனால் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவேன். 

----------------------------------------------------------------------------------

பின்வரும் தொடா்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக. 

1. அதைச் செய்தது நான் அன்று.

அதைச் செய்தது நான் அல்லேன். 

2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல

பானையை உடைத்தது கண்ணன் அல்லன்

3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலா் அல்ல

மல்லிகை குளத்தில் பூக்கும் மலா் அன்று

4. சித்தா்கள் செயற்கையை விரும்பியவா்கள் அல்லோம்

சித்தா்கள் செயற்கையை விரும்பியவா்கள் அல்லா் 

5. பகைவா் நீவீா் அல்லா் 

பகைவா் நீவீா் அல்லீா்

சாியான எதிா்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.

1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை அல்ல

2. உங்களோடு வருவோா் நாங்கள் அல்லோம்

3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லள்

4. ஈ மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன அல்ல

5. இந்த நிலத்துக்கு உாிமையாளா் நீ அல்லை.

கட்டுரை எழுதுக. 

நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு கட்டுரை நாம் முன்பே பதிவிட்டுள்ளோம். நமது வலைதளத்தில் உள்ளது பயன்படுத்திக் கொள்ளவும். 

 மொழியோடு விளையாடு

வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.

  • புதுமை, கருமை, வேற்றுமை, பழமை, 
  • நாம், பல், கல், கடம், வேழம், கரும்பு, கம்பு
  • வேளை, நாளை, களை, துளை, பற்று, பழம், கடல் 



 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.