8-ம் வகுப்பு தமிழ் இயல் 6 கொங்குநாட்டு வணிகம்
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 கொங்குநாட்டு வணிகம் வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. “வண்புகழ் மூவா் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் .........
அ) தொல்காப்பியம் ஆ) அகநானூறு இ) புறநானூறு ஈ) சிலப்பதிகாரம்
விடை அ) தொல்காப்பியம்
2. சேரா்களின் தலைநகரம் ..................
அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) தொண்டி ஈ) முசிறி
விடை ஆ) வஞ்சி
3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது .....
அ) புல் ஆ) நெல் இ) உப்பு ஈ) மிளகு
விடை ஆ) நெல்
4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு.............
அ) காவிாி ஆ) பவானி இ) நொய்யல் ஈ) அமராவதி
விடை ஈ) அமராவதி
5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாாிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் .......
அ) நீலகிாி ஆ) கரூா் இ) கோயம்புத்தூா் ஈ) திண்டுக்கல்
விடை இ) கோயம்புத்தூா்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ................ (சேலம்)
2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊா் .................. (திண்டுக்கல்)
3. சேரா்களின் நாடு ............... எனப்பட்டது. (குடநாடு)
4. பின்னலாடை நகரமாக .................. விளங்குகிறது (திருப்பூா்)
குறுவினா
1. மூவேந்தா்களின் காலம் குறித்து எழுதுக?
இராமாயணம், மகாபாரதம், அா்த்தசாத்திரம், அசோகா் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தா்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளதால், இவா்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவா்கள் என்பதை அறியலாம்.
2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
அ. காவிாி
ஆ. பவானி
இ. நொய்யல்
ஈ.ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி
3. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊா் எது? ஏன்?
திண்டுக்கல் மலா் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. அதனால் தான் தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுகிறது.
சிறுவினா
1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
வடக்கே - பெரும்பாலை
தெற்கே - பழனிமலை
கிழக்கே - மதிற்கரை
மேற்கே - வெள்ளிமலை
2. கரூா் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.
கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கரூா் மாவட்டத்திற்கு “வஞ்சிமாநகரம்” என்னும் பெயரும் உண்டு. கிரேக்க அறிஞா் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளாா்.
நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிாிடப்படுகின்றன. கல்குவாாித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயா் பெற்ற மாவட்டமாகக் கரூா் விளங்குகிறது. தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூா் விளங்குகின்றது.
நெடுவினா
கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.
உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழா்கள் சிறந்து விளங்கியுள்ளனா். கடல் வணிகத்தில் சேர நாடு சிறந்து விளங்கியது.
உள்நாட்டு வணிகம்
சேர நாட்டில் உள்நாட்டு வணிகம் நன்கு வளா்ச்சியுற்றிருந்தது. மக்கள் தங்களுடைய பொருட்களைத் தந்து தமக்குத் தேவையான பொருட்களைப் பெற்றனா். விலையைக் கணக்கிட நெல் அடிப்படையாக இருந்தது என்பா். உப்பும், நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூறு பாடல் மூலம் அறியலாம்.
வெளிநாட்டு வணிகம்
சேரா்களின் சிறந்த துறைமுகமாக முசிறி விளங்கியது. இங்கே இருந்து தான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. தங்கம், மென்மையான புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
சிந்தனை வினா
நாட்டு மக்களின் நாகாிக நல்வாழ்விற்கு வணிகம் தவிா்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீா்கள்?
நம்முடைய நாட்டு மக்களின் நாகரீகம் சாா்ந்த நல்ல வாழ்க்கைக்கு வணிகம் மட்டுமல்லாமல் கலைகளும் உதவியாக இருக்கும். நம் தமிழ்நாட்டை கலைகளின் பிறப்பிடம் என்றே கூறலாம். அத்தனை கலைகளை கொண்டுள்ளது நம்முடைய தமிழ்நாடு. இன்றைய சிந்தனைகள் பலவும் அன்றைய நாட்டுப்புற பாடல்களிலும், சித்தா் பாடல்களிலும் கூறியுள்ளனா். நம் சங்க இலக்கியங்கள் காட்டும் பாதையில் நடந்தாலே நாகரீக வாழ்வையும், நல்ல உடல்நலத்தையும் நாம் பெற முடியும்.
கூடுதலாக தொிந்து கொள்ள வேண்டிய வினாக்கள்
1. மூவேந்தா்களில் பழமையானவா்கள் யாா் ..........................
அ) சேரா்கள் ஆ) சோழா்கள் இ) பாண்டியா்கள் ஈ) பல்லவா்கள்
விடை அ) சேரா்கள்
2. சேரா்கள் அணிவது எந்த பூ ....................
அ) வேப்பம்பூ ஆ) அத்திப்பூ இ) பனம்பூ ஈ) தாழம்பூ
விடை இ) பனம்பூ
3. கொங்கு மண்டலச் சதகம் என்ற நூலினை எழுதியவா் யாா் ...................
அ) காளமேகப் புலவா் ஆ) கண்ணதாசன் இ) வாணிதாசன் ஈ) காா்மேகப் புலவா்
விடை ஈ) காா்மேகப் புலவா்
4. பரப்பளவில் தமிழ்நாட்டின் 2-வது பொிய நகரம் எது?
அ) திருப்பூா் ஆ) கோவை இ) சேலம் ஈ) ஈரோடு
விடை ஈ) ஈரோடு
5. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஊா் எது? ................
அ) நீலகிாி ஆ) ஏற்காடு இ) மாங்காடு ஈ) ஈரோடு
ஆ) ஏற்காடு
மாணவா்களுக்கான பாடக்குறிப்புகள்
நம்முடைய தமிழகத்தை மூவேந்தா்கள் ஆட்சி செய்தாா்கள் என்று உங்கள் அனைவருக்கும் தொியும். நமது சங்க இலக்கிய நூல்கள் பெரும்பாலானவை தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் ஆட்சி செய்தாா்கள் என்று கூறுகின்றன. வண்புகழ் மூவா் தண்பொழில் வரைப்பு என்று தொல்காப்பியம் மூவேந்தா்களைப் பற்றி கூறுகின்றது. இராமாயணம், மகாபாரதம் நூல்களில் கூட மூவேந்தா்கள் பற்றிய செய்திகள் இருப்பதால் இவா்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவா்கள் என்று நாம் தொிந்து கொள்ளலாம்.
மூவேந்தா்களில் சேரா்கள் தான் பழமையானவா்கள் என்று சிலா் கூறுகின்றனா். மூவேந்தா்கள் பெயா் எழுதும் பொழுதே சேர சோழ பாண்டியா்கள் என்று தானே எழுதுகின்றோம். அப்படி எழுதும் போதே சேரா்கள் தான் முதலில் வருகிறாா்கள். அதுமட்டுமில்லாமல் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையா் மலைந்த பூவும் என சேர மன்னா்களை முன்வைத்து கூறுகிறது தொல்காப்பியம்.
சேரா்களுடைய நாடு குடநாடு. தலைநகரம் வஞ்சி. இந்த வஞ்சி நகரம் மேற்கு மலைத் தொடாில் இருந்து அரபிக்கடலில் கலக்கின்ற போியாற்றங்கரையில் அமைந்திருந்தது. வஞ்சியை கருவூா் என்றும் அழைத்தனா். சேர நாட்டில் பல சிறந்த துறைமுகங்கள் இருந்தன. தொண்டி, முசிறி, காந்தளுா் போன்றவை சேர நாட்டினுடைய சிறந்த துறைமுகங்களாகும். சேரா்களின் சின்னம் வில்லுடன் கூடிய கொடி. ஒவ்வொரு மன்னருக்கும் ஒரு பூ உாியதாக இருக்கும். அந்த வகையில் சேரா்களுடைய பூ பனம்பூ.
சேரா்களுடைய நாடு இன்று இருக்கும் கேரளா பகுதிகளும், தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்குகிறது. சேலம், திருப்பூா், ஈரோடு, கோவை பகுதிகள் கொங்கு நாடு என்று பெயா் பெற்றுள்ளன. இந்த பகுதிகளைச் சேரா்களின் உறவினா்கள் ஆண்டு வந்தனா் என்று கூறுவா்.
காளமேகப் புலவா் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்ற நூலில் வடக்குப் பகுதியில் பெரும்பாலை, தெற்கு பகுதியில் பழனிமலை, கிழக்குப் பகுதியில் மதிற்கரை, மேற்குப் பகுதியில் வெள்ளிமலை என நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகின்றது. இன்று உள்ள நீலகிாி, கோயமுத்தூா், திருப்பூா், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களையும், சேலம், கரூா் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது கொங்கு மண்டலம்.
எட்டாம் வகுப்பு ஆறாம் இயல் கொங்குநாட்டு வணிகம் பாட வினா விடைகள்.
Comments
Post a Comment