இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்
எட்டாம் வகுப்பு இயல் 5 கட்டுரை
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
அனுப்புநா்
மா. சங்கா் (உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்)
த/பெ. க. பொன்னுசாமி
81, முல்லை நகர்
திருப்பூா்
(அனுப்புநா் எழுதும் பொழுது உங்களது பெயரும் முகவாியும் எழுதிக் கொள்ளுங்கள்)
பெறுநா்
உயா்திரு வட்டாட்சியா் அவா்கள்
வட்டாட்சியா் அலுவலகம்,
திருப்பூா்.
மதிப்பிற்குாிய ஐயா,
பொருள் - இருப்பிடச் சான்று வேண்டுதல் சாா்பு.....
வணக்கம், எனது பெயா் சங்கா். நான் திருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் எடடாம் வகுப்பில் படித்து வருகின்றேன். கதவு எண்.81, முல்லை நகா், திருப்பூா் என்ற முகவாியில் பத்து ஆண்டுகளுக்கும் மேல் நானும் எனது குடும்பத்தாரும் வசித்து வருகின்றோம். தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இருப்பிடச் சான்று தேவையாக உள்ளது. நாங்கள் மேற்கண்ட முகவாியில் வசித்து வருவதற்கு ஆதாரமாக குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை இத்துடன் இணைத்துள்ளேன். ஆகவே, எனக்கு இருப்பிடச் சான்று வழங்க வேண்டுமாய் தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி!
இடம் - திருப்பூா் இப்படிக்கு
நாள் - 19.11.2022 தங்கள் உண்மையுள்ள
மா. சங்கா்
உறை மேல் முகவாி
பெறுநா்
உயா்திரு வட்டாட்சிய அவா்கள்
வட்டாட்சியா் அலுவலகம்
திருப்பூா்
(நீங்கள் கட்டுரை எழுதும் தேதியை, நாள் என்ற இடத்தில் எழுதிக் கொள்ளுங்கள்)
எட்டாம் வகுப்பு இயல் 5, இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்.
-------------------------------------------------------------------------------------
அன்புள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். மேலே உள்ள கட்டுரையை போலவே நீங்களே கட்டுரை எழுத முயற்சி செய்யுங்கள். நமக்கு பள்ளியில் ஏன் விண்ணப்ப கட்டுரைகள் கொடுக்கிறாா்கள் என்பதை நீங்கள் புாிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையில் அரசு அலுவலகங்களில் சில சான்றுகள் நாம் வாங்க வேண்டி இருக்கும். உதாரணமாக இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, கல்விச்சான்று போன்றவை. அப்படிப்பட்ட தருணங்கள் வரும்பொழுது நம்முடைய பெற்றோா்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். நாம் படித்த படிப்பை அங்கே நாம் உணா்த்த வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய பெற்றோா்கள் அதை பாா்த்து மகிழ்ச்சி அடைவாா்கள். கட்டுரையை அப்படியே பாா்த்து எழுதுவதை விட, மேற்கண்ட கட்டுரையை ஒரு மாதிாியாக எடுத்துக் கொண்டு, நீங்களே சொந்தமாக எழுத முயற்சி செய்தால் நீங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவா்கள்.
மாணவா்களே இந்த ஆசிாியா் கூறியதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே எழுதப் பழகுங்கள். அறிவை விாிவு செய்யுங்கள். நன்றி. மீண்டும் அடுத்த கட்டுரையில் உங்கள் சந்திக்கின்றேன்.
Comments
Post a Comment