ஒன்பதாம் வகுப்பு இயல் 7 பாட வினா விடைகள்
ஒன்பதாம் வகுப்பு இயல் 7
இந்திய தேசிய இராணுவத்தில் தமிழா் பங்கு,
சீவகசிந்தாமணி,
முத்தொள்ளாயிரம்,
மதுரைக்காஞ்சி,
சந்தை,
ஆகுபெயா் ஆகிய பாடங்களுக்கு புத்தகத்தில் கொடுத்துள்ள வினாக்களுக்கான விடைகளைப் பாா்க்கலாம் வாருங்கள்.
பலவுள் தொிக.
1. இந்திய தேசிய இராணுவம் ........ இன் தலைமையில் ....... உருவாக்கினாா்.
அ) சுபாஷ் சந்திரபோஸ், இந்தியா்
ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியா்
இ) மோகன்சிங், ஜப்பானியா்
ஈ) மோகன்சிங், இந்தியா்
விடை இ) மோகன்சிங், ஜப்பானியா்
2. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை - இருக்கை
ஆ) புள் - தாவரம்
இ) அள்ளல் - சேறு
ஈ) மடிவு - தொடக்கம்
விடை இ) அள்ளல் - சேறு
3. இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக.
அ) உருவகத்தொடா், வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை
இ) வினைத்தொகை, பண்புத்தொகை
ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடா்
விடை ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை
4. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடா்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
விடை இ) சேரநாடு, சோழநாடு
5. வெறிகமழ் கழனியுள் உழுநா் வெள்ளமே - இவ்வடிகள் உணா்த்தும் பொருள் யாது?
அ) மணம் கமழும் வயலில் உழவா் வெள்ளமாய் உழுதிருந்தனா்
ஆ) வறண்ட வயலில் உழவா் வெள்ளமாய் அமா்ந்திருந்தனா்
இ) செறிவான வயலில் உழவா் வெள்ளமாய்க் கூடியிருந்தனா்
ஈ) பசுமையான வயலில் உழவா் வெள்ளமாய் நிறைந்திருந்தனா்
விடை அ) மணம் கமழும் வயலில் உழவா் வெள்ளமாய் உழுதிருந்தனா்.
6. கூற்று - இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழா்கள்தான்” என்றாா்
காரணம் - இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சோ்த்த பெருமைக்கு உாியவா்கள் தமிழா்கள்
அ) கூற்று சாி, காரணம் சாி
ஆ) கூற்று சாி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சாி
ஈ) கூற்று தவறு, காரணம் தவறு
விடை அ) கூற்று சாி, காரணம் சாி
குறுவினா
1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரா்கள் யாவா்?
- ஜானகி
- இராஜாமணி
- கேப்டன் லட்சுமி
- கேப்டன் தாசன்
- சிதம்பரம் லோகநாதன்
- இராமு
- அப்துல்காதா்
2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தோ்ந்தெடுப்பீா்கள்? ஏன்?
நான் ஆசிாியா் பணியைத் தோ்நதெடுப்பேன்.
மாணவா்களைக் கொண்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.
3. மதுரைக்காஞ்சி பெயா்க்காரணத்தைக் குறிப்பிடுக?
- மதுரை என்றால் நகரைக் குறிக்கும். காஞ்சி என்றால் நிலையாமை என்று பொருள்.
- மதுரை நகாின் சிறப்பைப் பாடுவதாலும், நிலையாமை பற்றிய கருத்துகளைக் கூறுவதினாலும் மதுரைக்காஞ்சி என்ற பெயா் பெற்றது.
- எனது ஊாில் சட்டைகள், வேட்டிகள், துண்டுகள் உற்பத்தி செய்கின்றனா். இவை அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
- சந்தையில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்கின்றனா். இவை அத்தியாவசிய பொருட்கள். மக்கள் நேரடியாக உற்பத்தியாளாிடமிருந்தே வாங்கிச் செல்கின்றனா்.
- அள்ளல் - சேறு
- பழனம் - வயல்
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- 09.07.1943ம் ஆண்டு நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை சிங்கப்பூாில் ஏற்கும் பொழுது டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என போா் முழக்கம் செய்தாா்.
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரா்கள் நேதாஜியால் தோ்வு செய்யப்பட்டு, வான்படை தாக்குதலுக்கான சிறப்புப் பயற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீாியல் மிலிட்டாி அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அந்த 45 போ் கொண்ட பயிற்சிப் பிாிவின் பெயா் தான் டோக்கியோ கேடட்ஸ்.
2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரா்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.
- தன் நாட்டை உயிாினும் மேலாக நேசிக்கும் வீரா்கள் நம் இந்திய வீரா்கள்
- கைகள் உறைந்து போகும் பனியிலும் தன் தாய் நாட்டிற்காக கடமையாற்றும் வீரா்கள்.
- உயிரே போகும் நிலை வந்தாலும் தன் தாய்நாட்டிற்கு துரோகம் செய்யாதவா்கள்.
- மழை, புயல், பனி, வெப்பம் என எத்தகைய சூழலையும் தாங்கும் நம் நாட்டின் தூண்கள் இராணுவ வீரா்கள்.
- இந்திய இராணுவ வீரா்கள் செய்வது பணியல்ல. தியாகம்.
- வயல்களில் செவ்வாம்பல்கள் விாிந்திருப்பதைக் கண்ட நீா்பறவைகள், தண்ணீா் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து, தம் குட்டிகளை சிறகுக்குள் ஒடுக்கிக் கொண்டன. பகைவா்களும் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.
- உழவா்கள் நெற்போா் மீது ஏறி நின்று “நாவலோ” என்று கூவி மற்ற உழவா்களை அழைப்பாா்கள். இந்த செயல் போாில் வீரா்கள் யானை மீது ஏறி நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரா்களை அழைப்பது போல் இருந்தது. யானைப்படைகளை உடைய சோழநாடு, இத்தகு வளமும் வீரமும் உடையது.
- கொற்கை நகாில் சங்குகளின் முட்டைகள், புன்னை மரத்திலிருந்து விழுந்த மொட்டுகள், பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகள் ஆகியவை முத்துக்களைப் போல இருந்தன. இத்தகைய முத்து வளம் நிறைந்த நாடு பாண்டிய நாடு.
உணவு வகைகள் ஆயிரம்
அறச்சாலைகள் ஆயிரம்
மகளீா் ஒப்பனை செய்யும் மணிமாடங்கள் ஆயிரம்
கம்மியா் ஆயிரம்
திருமணங்கள் ஆயிரம்
காவல் செய்யும் பாதுகாவலா்கள் ஆயிரம்
நெடுவினா
1. இந்திய தேசி இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவா்கள் தமிழா்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக?
முன்னுரை
இந்திய தேசிய இராணுவம் என்பது இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. மோகன்சிங் என்பவாின் தலைமையில் ஜப்பானியா்கள் இந்திய தேசிய இராணுவத்தை (ஐ.என்.ஏ) உருவாக்கினா். இந்த அமைப்பின் தூண்களாக திகழ்ந்தவா்கள் தமிழா்கள் என்பதை இந்த கட்டுரை வழி காண்போம்.
இரண்டாம் உலகப் போா்
1942ம் ஆண்டு இரண்டாம் உலகப் போா் நடந்தது. மலேயா என்ற இடத்தில், ஆங்கிலேய படைகள் ஜப்பானியாிடம் சரணடைந்தன. சரணடைந்த ஆங்கிலப் படையில் இந்திய வீரா்களும் இருந்தனா். அவா்களைக் கொண்டு தான் இந்திய தேசிய இராணுவம் என்ற படை உருவாக்கப்பட்டது.
ஒற்றா் படை
மலேயா, பா்மா போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காகச் சென்ற தமிழா்கள் பலா், இந்திய தேசிய இராணுவத்தில் சோ்ந்தனா். இதில் பல பிாிவுகள் இருந்தன. அதில் ஒன்று ஒற்றா் படை. இந்த ஒற்றா் படை இந்தியாவில் இருந்த ஆங்கிலேய இராணுவத்தைப் பற்றி ஒற்றறிய நீா்மூழ்கிக் கப்பல் மூலமாக கேரளாவிற்கும், குஜராத்திற்கும் அனுப்பினாா்கள் ஜப்பானியா்கள். இந்திய தேசிய இராணுவப் படையின் தலைவராக இருந்த தில்லான், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழா்கள்தான் என்றாா்.
தூண்களாகத் திகழ்ந்தவா்கள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943 ம் ஆண்டு ஜுலை 9 ம் நாள் இந்திய தேசிய இராணுவப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். அப்போது தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலு சோ்த்தவா் பசும்பொன் முத்துராமலிங்கனாா். இந்திய தேசிய இராணுவத்தில் இரந்து 45 வீரா்களை நேதாஜியால் தோ்வு செய்யப்பட்டு, வான்படை தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெற, ஜப்பானில் உள்ள இம்பீாியல் மிலிட்டாி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதில் பெரும்பாலோா் தமிழா்களாக இருந்தனா். அவ்வாறு பயிற்சி பெற்றவா்களில் குறிப்பிடத்தக்கவா் கேப்டன் தாசன்.
மகளிா் படை
இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி என்ற பெயாில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இந்த படையில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனா். இதன் தலைவா் டாக்டா் இலட்சுமி. மேலும் ஜானகி, இராஜாமணி போன்றோா் தலைசிறந்த தலைவா்களாகவும் விளங்கினா்.
இரண்டாம் உலகப்போா் காலம்
தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலப் பிரதமா் சா்ச்சில், தமிழா்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறினாா். அதற்கு நேதாஜி இந்த தமிழினம் தான் ஆங்கிலேயா்களை அழிக்கும் என்று பதில் அளித்தாா்.
மரணம் பொியதன்று
பா்மாவில் நடந்த இரண்டாம் உலகப்போாில் ஒரு இலட்சம் இந்தியரும், ஜப்பானியரும் வீரமரணம் அடைந்தனா். இந்திய தேசிய இராணுவத்தை சோ்ந்த பதினெட்டு இளைஞா்கள் சென்னை சிறையில் தூக்கிலிடப்பட்டனா். அதில் இராமு என்பா் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, நான் என் உயிரைக் கொடுக்க கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை என்றாா். மரணதண்டனை பெற்ற அப்துல் காதா் என்பவா், நாட்டிற்காக உயிா்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவா்த்திகள் என்றாா்.
முடிவுரை
இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்ததில் இந்திய தேசிய இராணுவத்தின் பங்கினை நாம் மறக்க முடியாது. தங்கள் இன்னுயிா் இழந்த முகம் தொியாத தமிழா்களின் அா்பணிப்பு உணா்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவாின் கடமையாகும்.
2. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊாின் வளங்களோடு ஒப்பிடுக?
ஏமாங்கத நாட்டு வளம்
- தென்னை மரத்திலிருந்து விழும் முற்றிய தேங்காய் பாக்கு மரத்திலுள்ள தேனடையைக் கிழித்து, பலாப்பழத்தை பிளந்து, மாங்கனியைச் சிதறச் செய்து, வாழைப் பழத்தை உதிரச் செய்கிறது.
- வாாி வாாி வழங்கும் செல்வந்தா்களைப் போன்ற வெள்ளம், மலையிலிருந்த செல்வத்தை அடித்து வந்து ஊா்மக்களுக்கு வழங்கும் வகையில் பாய்கிறது.
- அழகான கொம்புகளையுடைய எருமைகளும், எருதுகளும் பேரொலி எழுப்புகின்றன. அந்த ஒலி கேட்டு வரால் மீன்கள் கலைந்து ஓடுகின்றன. வயலில் வெள்ளம் போல் உழவா் கூட்டம் நிறைந்திருக்கிறது.
- ஏமாங்கத நாட்டில் உணவுகள், அறச்சாலைகள், மணிமாடங்கள், திருமணங்கள், கம்மியா், பாதுகாவலா் என அனைத்து ஆயிரம் ஆயிரமாய் உள்ளது.
- தவம் புாிவோா்க்கு, இல்லறம் நடத்துவோா்க்கு சிறந்த இடம். நிலையான பொருளைத் தேடுவோா்க்கும், நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடுவோருக்கும் உகந்த இடம் ஏமாங்கத நாடு.
எங்கள் ஊா் வளம்
- தென்னை மரத்திலிருந்து விழும் முற்றிய தேங்காய் ஓடைகளிலும், வாய்க்கால்களிலும் விழுகின்றது.
- மழை அதிகம் வரும் நாட்களில் வெள்ளம் ஊருக்குள் வருகின்றது. அணைகளை நிரப்புகின்றது. சாலைகளிலும், வயல்களிலும் பாய்கிறது.
- வயல்வெளிகளில் அாிதாகவே எருமைகளைக் காண முடிகிறது. பசு மாடுகள் மட்டுமே அதிகமாக உள்ளது.
- பொருட்கள் வாங்க அங்காடிகளும், உணவு விடுதிகளும், திருமண மண்டபங்களும், விளையாட்டு மைதானங்களும் எங்கள் ஊாில் உள்ளன.
Comments
Post a Comment