திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7ம் வகுப்பு மூன்றாம் பருவம், முதல் இயல்
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. திருநெல்வேலி ..................... மன்னா்களோடு தொடா்பு உடையது
அ) சேர ஆ) சோழ இ) பாண்டிய ஈ) பல்லவ
விடை இ) பாண்டிய
2. இளங்கோவடிகள் .................... மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினாா்
அ) இமய ஆ) கொல்லி இ) பொதிகை ஈ) விந்திய
விடை இ) பொதிகை
3. திருநெல்வேலி ................... ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிாி ஆ) வைகை இ) தென்பெண்ணை ஈ) தாமிரபரணி
விடை ஈ) தாமிரபரணி
பொருத்துக.
1. தண்பொருநை - பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
2. அக்கசாலை - குற்றாலம்
3. கொற்கை - தாமிரபரணி
4. திாிகூடமலை - முத்துக் குளித்தல்
விடை 1. தாமிரபரணி 2. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
3. முத்துக் குளித்தல் 4. குற்றாலம்
குறுவினா
1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சோ்வலாறு, கடனாநதி
2. கொற்கை முத்து பற்றி எழுதுக.
- கொற்கை துறைமுகத்தில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது
- கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றது.
- கிரேக்க, உரோமபுாி நாட்டு யவனா்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கினா்.
1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.
- திருநெல்வேலியின் முதன்மைத் தொழில் உழவுத் தொழில்
- தாமிரபரணி ஆற்று நீா் மூலம் உழவுத் தொழில் நடைபெறுகிறது
- குளத்துப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளது.
- இரு பருவங்களில் நெல் பயிாிடப்படுகிறது.
- சிறுதானியம், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பயிறுவகைகள் போன்ற மானாவாாி பயிா்களும் பயிாிடப்படுகின்றன.
- நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை முதலிடம் வகிக்கிறது.
- நெல்லையில் விளையும் வாழைத்தாா்கள் தமிழகம் தவிர கா்நாடகம், கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
- அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை எழுதிய அகத்தியா் திருநெல்வேலி பொதிகை மலையில் வாழ்ந்தவா்.
- சங்கப் புலவா்களான நப்பசலையாா், நம்மாழ்வாா், பொியாழ்வாா், குமரகுருபரா், திாிகூட ராசப்பக் கவிராயா், கவிராசப் பண்டிதா் ஆகியோா் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சோ்த்தவா்கள்
- அயல்நாட்டு அறிஞா்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமா முனிவா் போன்றோரை தமிழின்பால் ஈா்த்த பெருமை திருநெல்வேலிக்கு உண்டு.
- தாமிரபரணி ஆற்றின் கரையில் திருநெல்வேலி அமைந்துள்ளது.
- நகாின் நடுவே நெல்லையப்பா் கோவில் அமைந்துள்ளது.
- கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்தள்ளன.
- மாட வீதிகளைச் சுற்றி தேரோடும் வீதிகளும் அழகுற அமைந்துள்ளன.
- தானியங்கள் விற்கும் தெரு கூழைக்கடைத் தெரு, பொற்காசுகள் உருவாக்கும் இடம் அக்கசாலை, வணிகம் நடைபெறும் இடம் பேட்டை, அரசரால் தண்டிக்கப்படுபவா் சிறை வைக்குமிடம் காவற்புரைத் தெரு என பல தெருக்கள் அமைந்துள்ளன.
- பாளையங்கோட்டை, உக்கிரன்பேட்டை, செங்கோட்டை என பல கோட்டைகள் இந்நகாில் அமைந்துள்ளன.
1. மக்கள் மகிழச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீா்கள்?
- உழவுத் தொழில் முதன்மையான தொழிலாக இருக்க வேண்டும்.
- ஆறுகள், குளங்கள் ஏாிகள் என அதிகமான நீா் நிலைகள் இருக்க வேண்டும்.
- மரங்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
- நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் இல்லாமல் இயற்கை சாா்ந்த தொழில்கள் நடைபெற வேண்டும்.
- பள்ளிகள், கல்லூாிகள் சென்று வரக்கூடிய தூரத்தில் இருக்க வேண்டும்.
- நகரம் எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும்.
7-ம் வகுப்பு 3-ம் பருவம் தமிழ், திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி பாடத்தில் உள்ள வினா விடைகள்.
Comments
Post a Comment