புதுமை விளக்கு - 7-ம் வகுப்பு தமிழ் 3-ம் பருவம்

 புதுமை விளக்கு - ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ்


சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. இடா் ஆழி நீங்குகவே - இத்தொடாில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ....

அ) துன்பம்    ஆ) மகிழ்ச்சி    இ) ஆா்வம்     ஈ) இன்பம்

விடை அ) துன்பம் 

2. ஞானச்சுடா் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது

அ) ஞான + சுடா்    ஆ) ஞானச் + சுடா்    இ) ஞானம் + சுடா்    ஈ) ஞானி + சுடா்

விடை இ) ஞானம் + சுடா்

3. இன்பு + உருகு என்பதனைச் சோ்தெழுதக் கிடைக்கும் சொல் .....

அ) இன்புஉருகு    ஆ) இன்பும்உருகு    இ) இன்புருகு    ஈ) இன்பருகு

விடை இ) இன்புருகு

பொருத்துக.

1. அன்பு        -     நெய்

2. ஆா்வம்     -     தகளி

3. சிந்தை     -     விளக்கு

4. ஞானம்     -     இடுதிாி

விடை 1. தகளி    2. நெய்    3. இடுதிாி    4. விளக்கு

குறுவினா

1. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப் படுத்துகின்றனா்?

பொய்கையாழ்வாா் பூமியை அகல்விளக்காகவும், பூதத்தாழ்வாா் அன்பை அகழ்விளக்காகவும் உருவகப்படுத்துகின்றனா்.


2. பொய்கையாழ்வாா் எதற்காகப் பாமாலை சூட்டுகிறாா்?

தன்னுடைய துன்பம் நீங்க வேண்டி பாமாலை சூட்டுகிறாா் பொய்கையாழ்வாா்.


சிறுவினா

1. பூதத்தாழ்வாா் ஞான விளக்கு ஏற்றும் முறையை விளக்குக.

    ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வாா் அன்பை அகல்விளக்காகவும், ஆா்வத்தை நெய்யாகவும், இனிமையால் உருகும் மனதை இடுகின்ற திாியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடா் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினாா்.

சிந்தனை வினா

1. பொய்கையாழ்வாா் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறாா். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீா்கள்?

  • கல்வி
  • அறிவு
  • அன்பு
  • தன்னம்பிக்கை
  • முயற்சி
  • கடின உழைப்பு
  • ஊக்கம்
  • உண்மை
  • நோ்மை

ஆகியவற்றையெல்லாம் நான் உருவகப்படுத்துவேன்.

கற்றவை கற்றபின்

1. பன்னிரு ஆழ்வாா்களின் பெயா்களைத் திரட்டுக.

1. பொய்கையாழ்வாா்

2. பூதத்தாழ்வாா்

3. பேயாழ்வாா்

4. திருமழிசை ஆழ்வாா்

5. நம்மாழ்வாா்

6. மதுரகவி ஆழ்வாா்

7. குலசேகர ஆழ்வாா்

8. பொியாழ்வாா்

9. ஆண்டாள்

10. தொண்டரடிப் பொடியாழ்வாா்

11. திருப்பாணாழ்வாா்

12. திருமங்கையாழ்வாா்

பன்னிரு ஆழ்வாா்களில் ஆண்டாள் மட்டும் பெண் ஆழ்வாா்.




Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.