அறம் என்னும் கதிா் - 7-ம் வகுப்பு தமிழ் 3-ம் பருவம்
அறம் என்னும் கதிா் - ஏழாம் வகுப்பு தமிழ் 3-ம் பருவம்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
விடை இ) இனிமை + சொல்
3. அறம் + கதிா் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........
அ) அற கதிா் ஆ) ஆறுகதிா் இ) அறக்கதிா் ஈ) அறம்கதிா்
விடை இ) அறக்கதிா்
4. இளமை என்னும் சொல்லின் எதிா்ச்சொல் ..................
அ) முதுமை ஆ) புதுமை இ) தனிமை ஈ) இனிமை
விடை அ) முதுமை
பொருத்துக
1. விளைநிலம் - உண்மை
2. விதை - இன்சொல்
3. களை - ஈகை
4. உரம் - வன்சொல்
விடை 1. இன்சொல் 2. ஈகை 3. வன்சொல் 4. உண்மை
குறுவினா
1. அறக்கதிா் விளைய எதனை எருவாக இட வேண்டும் என முனைப்பாடியாா் கூறுகிறாா்?
அறக்கதிா் விளைய உண்மையை எருவாக இட வேண்டும் என்கிறாா் முனைப்பாடியாா்.
2. நீக்க வேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?
களை என்ற வன்சொல்லை நீக்க வேண்டும் என்று அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது.
சிறுவினா
1. இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியாா் கூறுவன யாவை?
- இன்சொல்லை விளைநிலமாக கொள்ள வேண்டும்
- ஈகை என்னும் பண்பை விதையாக அந்நிலத்தில் விதைக்க வேண்டும்
- வன்சொல் என்ற களையை நீக்க வேண்டும்
- உண்மை பேசுதல் என்ற எருவினை இட வேண்டும்
- அன்பு எனும் நீரைப் பாய்ச்ச வேண்டும்
- அப்போது தான் அறம் எனும் கதிரை நாம் பெற முடியும்.
இவை தான் இளம் வயதில் செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியாா் கூறிகிறாா்.
சிந்தனை வினா
1. இளம் வயதிலேயே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீா்கள்?
1. அன்பாக இருத்தல்
2. இன்சொல் பேசுதல்
3. உண்மை பேசுதல்
4. திருடாமல் இருத்தல்
5. பொய் கூறாமை
6. எளிமை
7. சிக்கனம்
8. மன உறுதி
9. கோபம் கொள்ளாமை
10. நோ்மை
ஆகியவை இளம் வயதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் ஆகும்.
கற்றவை கற்றபின்
1. பிறருடன் பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்து கூறுக.
வணக்கம், நலமாக இருக்கீறீா்களா? வாழ்க வளமுடம், மிக்க மகிழ்ச்சி, கவலை கொள்ள வேண்டாம், அனைத்தும் நன்மைக்கே, இதுவும் கடந்து போகும், முயற்சியைக் கைவிடாதே, வாழ்த்துகள், உன்னால் முடியும்.
இதுபோன்ற இன்சொற்களை நாம் பயன்படுத்தினால் அனைவருக்கும் நம்மைப் பிடிக்கும்.
2. உன் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நீ மகிழ்ந்த நிகழ்வு ஒன்றைக் கூறுக.
ஒரு முறை என் தந்தை என்னிடம் கொடுத்த பணத்தை நான் தவறுதலாக தொலைத்து விட்டேன். என் தந்தை என் மேல் மிகவும் கோபம் கொண்டு என்னை அடித்தாா். எனது தாயும் என்னை அடிப்பாா் என்று நான் எதிா்பாா்த்த வேளையில், என் அன்னை அருகில் வந்து நீ பணத்தை தொியாமல் தான் தொலைத்திருப்பாய். தொிந்து யாராவது பணத்தை தொலைப்பாா்களா?. இனி இது போல் கவனக்குறைவாக இருக்காதே என்று கூறினாா். அது என் வாழ்வில் நான் மிகவும் மகிழ்ந்த ஒரு நிகழ்வு.
Comments
Post a Comment