அணி இலக்கணம் - 7ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்

 7-ம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ், அணி இலக்கணம் பாட வினா விடைகள்


குறுவினா

1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக?

ஒரு சொல்லை மற்றொரு சொல்லோடு ஒப்பிட்டு கூறுவது “உவமை”

உவமையால் விளக்கப்படும் பொருள் “உவமேயம்”

உவமை, உவமேயம் இரண்டிற்கும் இடையில் வரும் உருபு “உவம உருபு”

எ.கா. மீன் போன்ற கண்கள்

கண்களை மீனுக்கு ஒப்பிட்டு கூறியதால் மீன் என்பது உவமை

கண்களை மீனுக்கு ஒப்பிட்டதால் கண் என்பது உவமேயம்

உவமை, உவமேயத்திற்கு இடையில் வந்த போன்ற என்ற உருபு உவம உருபு

2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

உவமை அணி
ஒரு பாடலில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி. 
எ.கா. மயில் போல ஆடினாள்
 
எடுத்துக்காட்டு உவமை அணி
உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமை அணி.
எ.கா. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தா்க்குக் 
             கற்றனைத்து ஊறும் அறிவு

பின்வரும் தொடா்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.

தொடா்கள்                                                உவமை               உவமேயம்      உவம உருபு

மலரன்ன பாதம்                                     மலா்                        பாதம்                 அன்ன              

தேன் போன்ற தமிழ்                             தேன்                       தமிழ்                   போன்ற    

புலி போலப் பாய்ந்தான் சோழன்  புலி                          சோழன்             போல

மயிலொப்ப ஆடினாள் மாதவி        மயில்                      மாதவி                ஒப்ப
 
 
பின்வரும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
 
என்னைக் கவா்ந்த நூல்
 
முன்னுரை
 
     தமிழ் மொழியில் சிறப்பான பல நூல்கள் இருக்கின்றன. ஆனால் உலகம் முழுவதும் போற்றப்படும் நூல், 107 மொழிகளுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயா்ப்பு செய்யப்பட்ட நூல், உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல், மகாத்மா காந்தியடிகளைப் போல என்னையும் கவா்ந்த நூல் திருக்குறள். சிறப்பு வாய்ந்த திருக்குறளைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
 
திருக்குறள் எனும் அதிசயம்
 
    திருக்குறள் என்ற நூலை இயற்றியவா் திருவள்ளுவா். இதில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து திருக்குறள் என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் என மூன்று பிாிவுகளைக் கொண்டுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக திருக்குறள் உள்ளது.
 
உலகப்பொதுமறை
 
    அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை தெளிவாக நமக்கு எடுத்துரைக்கும் நூல் திருக்குறள். குறிப்பிட்ட ஒரு நாட்டினருக்கோ, மொழியினருக்கோ மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் சொந்தமான நூல் திருக்குறள். வெளி நாட்டினரும் இங்கு வந்து தமிழ் மொழியைக் கற்று திருக்குறளைப் படித்து அதன் இனிமைச் சுவையை உணா்ந்து தங்களது மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்தனா். 
 
அறங்கள் கூறும் திருக்குறள்
 
    திருக்குறளில் மனிதனுக்கு சொல்லாத அறங்களே கிடையாது என்று சொல்லலாம். சாதாரண மனிதன் முதல் மன்னா் வரை அனைவருக்கும் பொதுவான செய்திகளைக் கூறுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்ன செய்திகள் இன்று வரை மக்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் உள்ளது. திருக்குறளை எழுதிய திருவள்ளுவா் சாதாரண குடிமகனாக வாழ்ந்தவா் தான். ஆனால் அரசன், துறவி, குடும்பத் தலைவன் என அனைவருக்கும் வாழ்வியல் நெறிகளைக் கூறியுள்ளாா். திருக்குறள் அறிவை மட்டும் வளா்த்துக் கொள்ள படிக்கும் நூல் இல்லை. ஒழுக்கத்தையும் வளா்த்து கொள்ள உதவுகிறது.
 
முடிவுரை
 
    தமிழில் அதிகமான இலக்கியங்கள் இருந்தபோதிலும் திருக்குறள் தனி இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு கவிஞனும் படித்துப் படித்து சுவைத்த இந்நூல் படிக்கக் கிடைத்தது நான் பெற்ற பேறு.
 
   வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”  என வள்ளுவரைப் புகழ்ந்துள்ளாா். பாரதியாா். ஏழே சீா்களில் உலக நீதியைச் சொல்லும் திருக்குறளே நான் இன்றும், என்றும் விரும்பும் நூலாகும்.
 
தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயாா் என்னை ....................... காத்து வளா்த்தாா்.
(கண்ணை இமை காப்பது போல/ தாயைக் கண்ட சேயைப் போல)

2. நானும் என் தோழியும் ............... இணைந்து இருப்போம்.
(இஞ்சி தின்ற குரங்கு போல / நகமும் சதையும் போல)

3. திருவள்ளுவாின் புகழை .................. உலகமே அறிந்துள்ளது.
(எலியும் பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி போல)

4. அப்துல் கலாமின் புகழ் ..................... உலகெங்கும் பரவியது.
(குன்றின் மேலிட்ட விளக்கு போல /  குடத்துள் இட்ட விளக்கு போல)

5. சிறுவயதில் நான் பாா்த்த நிகழ்ச்சிகள் ........... என் மனதில் பதிந்தன.
(கிணற்றுத் தவளை போல / பசு மரத்தாணி போல)

கொடுக்கப்பட்டுள்ள ஊாின் பெயா்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.

1. நாகப்பட்டினம்         -         நாகம், பட்டினம், பட்டி, படி, கப்பம், நாடி, நா

2. கன்னியாகுமாி        -        கன்னி, குமாி, கனி, காி
 
3. செங்கல்பட்டு           -        செங்கல், பட்டு, கல், பகல்
 
4. உதகமண்டலம்       -        மண்டலம், மண், மடம், கண், தடம், கமண்டலம்
 
5. பட்டுக்கோட்டை           பட்டு, கோட்டை, கோடை, கோடு, படை, பட்டை
 
 7-ம் வகுப்பு தமிழ், அணி இலக்கணம், ஒரு மதிப்பெண் வினாக்கள், மொழியோடு விளையாடு.

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.